Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 42-43

யோசேப்பு சுயக்கட்டுப்பாட்டை அதிகமாகக் காட்டுகிறார்

யோசேப்பு சுயக்கட்டுப்பாட்டை அதிகமாகக் காட்டுகிறார்

42:5-7, 14-17, 21, 22

எதிர்பாராத விதமாக தன்னுடைய அண்ணன்கள் தன்முன் வந்து நின்றபோது, யோசேப்பின் மனதில் உணர்ச்சிகள் அலைமோதுவதை உங்களால் கற்பனை செய்த பார்க்க முடிகிறதா? ஒருவேளை அவர், தான் யார் என்பதை உடனடியாகச் சொல்லி அவர்களைக் கட்டித் தழுவியிருக்கலாம் அல்லது அவர்களைப் பழி வாங்கியிருக்கலாம். ஆனால், அவர் உணர்ச்சிவசப்பட்டு எதுவும் செய்யவில்லை. உங்கள் குடும்பத்தாரோ மற்றவர்களோ உங்களை அநியாயமாக நடத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நயவஞ்சகமான இதயம் சொல்வதைக்கேட்டு உணர்ச்சிவசப்பட்டு நடப்பதற்குப் பதிலாக, சுயக்கட்டுப்பாட்டைக் காட்டிச் சாந்தமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை யோசேப்பின் உதாரணத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் யோசேப்பை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்?