பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 38-39
யெகோவா யோசேப்பை ஒருபோதும் கைவிடவில்லை
யோசேப்புக்குக் கஷ்டத்துக்குமேல் கஷ்டம் வந்தபோது, அவர் செய்த எல்லாவற்றிலும் யெகோவா அவருக்கு வெற்றி தந்தார். அதோடு, “சிறைச்சாலையின் முக்கிய அதிகாரியுடைய பிரியம் யோசேப்புக்குக் கிடைக்கும்படி செய்தார்.” (ஆதி 39:2, 3, 21-23) இந்தப் பதிவிலிருந்து என்னென்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்?
நமக்குக் கஷ்டங்கள் வருகிறது என்பதற்காக யெகோவாவுடைய பிரியத்தை நாம் இழந்துவிட்டோம் என்று அர்த்தம் கிடையாது.—சங் 34:19
யெகோவா நமக்காகச் செய்துகொண்டிருக்கிற எல்லா நல்ல விஷயங்களைப் பற்றியும் யோசித்துப்பார்க்க வேண்டும், அதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.—பிலி 4:6, 7
உதவிக்காக நாம் யெகோவாவை நம்பியிருக்க வேண்டும்.—சங் 55:22