கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“அன்பு . . . எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்”
சகோதர சகோதரிகள்மேல் நமக்கு உண்மையான அன்பு இருப்பதால் அவர்கள் நல்லதைத்தான் செய்வார்கள் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம். (1கொ 13:4, 7) உதாரணத்துக்கு, ஒரு சகோதரர் தப்பு செய்து கண்டிக்கப்பட்டார் என்றால் அந்தக் கண்டிப்பை ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொள்வார் என்று நாம் எதிர்பார்க்கிறோம். விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவர்களிடம் நாம் பொறுமையாக நடந்துகொள்கிறோம்; அவர்களுக்கு உதவ முயற்சி செய்கிறோம். (ரோ 15:1) ஒருவர் சத்தியத்தை விட்டு போய்விட்டாலும் ஒருநாள் கண்டிப்பாகத் திரும்பி வருவார் என்று நாம் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம்.—லூ 15:17, 18.
அன்பு எதைச் செய்யும், எதைச் செய்யாது—எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
அப்னேர் எப்படிப்பட்ட நபராக மாறினார்?
-
அப்னேர் சொன்னதைக் கேட்டு தாவீது எப்படி நடந்துகொண்டார், யோவாப் எப்படி நடந்துகொண்டார்?
-
நம்முடைய சகோதர சகோதரிகள் எப்போதும் நல்லதையே செய்வார்கள் என்று நாம் ஏன் நம்பிக்கையோடு எதிர்பார்க்க வேண்டும்?