இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்று யோபு நம்பினார்
தன்னை உயிரோடு எழுப்ப கடவுளால் முடியும் என்று யோபு நம்பினார்
-
தன்னை உயிரோடு எழுப்ப கடவுளால் முடியும் என்பதைப் புரிய வைக்க ஒரு மரத்தின் உதாரணத்தைப் பயன்படுத்தினார். அது ஒருவேளை ஒலிவ மரமாக (Olive tree) இருக்கலாம்
-
ஒலிவ மரத்தின் வேர்கள் ஆழமாகப் பரந்து விரிந்து இருப்பதால் அதை அடியோடு வெட்டினாலும் அது மறுபடியும் வளரும். வேர்கள் உயிரோடு இருந்தால் மட்டும் போதும், அந்த மரம் மறுபடியும் துளிர்க்கும்
-
கடுமையான வறட்சிக்கு பிறகு மழை பெய்யும்போது, காய்ந்துபோன ஒலிவ மரத்தின் வேர்கள் துளிர் விடும். “ஒரு புது செடியில் கிளைகள்” வளருவது போல் வளரும்