மார்ச் 17-23
நீதிமொழிகள் 5
பாட்டு 122; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. பாலியல் முறைகேட்டின் பக்கத்தில்கூடப் போகாதீர்கள்!
(10 நிமி.)
பாலியல் முறைகேடு நம்மை சுண்டியிழுக்கலாம் (நீதி 5:3; w00 7/15 பக். 29 பாரா 1)
பாலியல் முறைகேட்டினால் வரும் விளைவுகள் கசப்பாக இருக்கும் (நீதி 5:4, 5; w00 7/15 பக். 29 பாரா 2)
பாலியல் முறைகேட்டின் பக்கத்தில்கூடப் போகாதீர்கள் (நீதி 5:8; w00 7/15 பக். 29 பாரா 5)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
-
நீதி 5:9—பாலியல் முறைகேட்டினால் நாம் எப்படி நம் ‘பெயரைக் கெடுத்துக்கொள்வோம்’? (w00 7/15 பக். 29 பாரா 7)
-
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 5:1-23 (th படிப்பு 5)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) பொது ஊழியம். கிறிஸ்தவராக இல்லாத ஒருவரை நினைவுநாள் நிகழ்ச்சிக்கு அழையுங்கள். அவருடைய வீட்டுக்குப் பக்கத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி எங்கே நடக்கிறது என்று கண்டுபிடிக்க jw.org-ஐப் பயன்படுத்துங்கள். (lmd பாடம் 6 குறிப்பு 4)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நினைவுநாள் அழைப்பிதழை ஆர்வமாக வாங்கிக்கொண்ட ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)
6. சீஷர்களை உருவாக்குவது
(5 நிமி.) lff பாடம் 16 சுருக்கம், ஞாபகம் வருகிறதா, மற்றும் குறிக்கோள். இயேசு கல்யாணம் செய்துகொண்டாரா என்று மாணவர் கேட்கிறார். அதற்கான பதிலை எப்படி ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கலாம் என்று காட்டுங்கள். (lmd பாடம் 11 குறிப்பு 4)
பாட்டு 121
7. டேட்டிங் செய்யும்போது எப்படி ஒழுக்கமாக நடந்துகொள்ளலாம் என்று யோசியுங்கள்
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
பொதுவாக, “காதலிக்கிற ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடுவதுதான்” டேட்டிங் என்று சொல்லப்படுகிறது. மற்றவர்களோடு இருக்கும்போதோ இரண்டு பேர் மட்டும் இருக்கும்போதோ... வெளிப்படையாகவோ ரகசியமாகவோ... நேரிலோ ஃபோனிலோ மெசேஜிலோ... டேட்டிங் செய்யலாம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், நாம் டேட்டிங்கை வெறும் ஒரு பொழுதுபோக்காகப் பார்ப்பதில்லை. ஒருவர் பொருத்தமான துணையாக இருப்பாரா என்பதை முடிவு செய்வதற்கான வாய்ப்புதான் அது. பெரியவர்களோ இளைஞர்களோ, டேட்டிங் செய்யும்போது பாலியல் முறைகேட்டில் சிக்காதிருக்க முன்னெச்சரிக்கையாக என்னவெல்லாம் செய்யலாம்?—நீதி 22:3.
கல்யாணத்திற்கு தயாராகுதல்—பகுதி 1: காதலிக்க நான் தயாரா?—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
-
கல்யாணத்துக்கு தயாராவதற்கு முன்பே ஒருவர் ஏன் டேட்டிங் செய்யக் கூடாது? (நீதி 13:12; லூ 14:28-30)
-
அந்த அப்பா-அம்மா அவர்களுடைய மகளுக்கு உதவி செய்த விதத்தில் எது உங்களுக்குப் பிடித்திருந்தது?
நீதிமொழிகள் 28:26-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
-
காதலிக்கிறவர்கள் தப்பு செய்யத் தூண்டும் சூழ்நிலைகளில் தனியாக இல்லாதபடி பார்த்துக்கொள்ள எப்படித் திட்டமிடலாம்?
-
கை கோர்ப்பது, முத்தம் கொடுப்பது போன்ற விஷயங்களில் எல்லைகளை முன்பே பேசிவைப்பது ஏன் ஞானமானது?
எபேசியர் 5:3, 4-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
-
ஃபோனில் அல்லது ஆன்லைனில் பேசிக்கொள்ளும்போது காதலிக்கிறவர்கள் எதை மனதில் வைக்க வேண்டும்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 24 பாரா. 1-6