கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்”
கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் சாலொமோன் இப்படி எழுதினார்: “எல்லாவற்றையும்விட முக்கியமாக உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்.” (நீதி 4:23) ஆனால், இஸ்ரவேலர்கள் இதைச் செய்ய தவறிவிட்டார்கள். “முழு இதயத்தோடு” யெகோவாவின் வழியில் அவர்கள் நடக்கவில்லை. (2நா 6:14) சொல்லப்போனால், சாலொமோன் ராஜாவும்கூட பொய் கடவுள்களை வணங்கிய அவருடைய மனைவிகளின் பேச்சைக் கேட்டு மற்ற கடவுள்களை வணங்க ஆரம்பித்துவிட்டார். (1ரா 11:4) அப்படியென்றால், நீங்கள் எப்படி உங்கள் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ளலாம்? இதைப் பற்றிதான் ஜனவரி 2019 காவற்கோபுரத்தில், பக்கங்கள் 14-19-ல் சொல்லப்பட்டிருந்தது.
காவற்கோபுரம் சொல்லித்தந்த பாடங்கள்—உங்கள் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:
விசுவாசத்தைக் குறைக்கிற என்ன மாதிரியான பிரச்சினைகள் கீழே சொல்லியிருக்கிற சகோதர சகோதரிகளுக்கு வந்தன? இந்த காவற்கோபுர கட்டுரை இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ள எப்படி அவர்களுக்கு உதவியது?
-
ப்ரென்ட் மற்றும் லோரன்
-
உம்ஜே
-
ஹாப்பி லையு
இந்தக் கட்டுரை உங்களுக்கு எப்படி உதவியது?