நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் பிப்ரவரி 2016
இப்படிப் பேசலாம்
ஊழியத்தில், விழித்தெழு!, மற்றும் கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை எப்படிப் பேசி கொடுக்கலாம் என்ற குறிப்புகள் இதில் இருக்கிறது. இதை வைத்து ஊழியத்தில் நீங்கள் எப்படிப் பேசலாம் என்பதை தயாரிக்கலாம்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
உண்மை வணக்கத்துக்காக நெகேமியா எதையும் செய்ய தயாராக இருந்தார்
எருசலேமின் மதில்களை திரும்ப கட்டுவதற்காகவும் உண்மை வணக்கத்தை ஆதரிப்பதற்காகவும் நெகேமியா நிறைய முயற்சிகளை எடுத்தார். அதை கற்பனை செய்து பாருங்கள். (நெகேமியா 1-4)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
நெகேமியா தன்னுடைய பொறுப்புகளை நன்றாக செய்தார்
யெகோவாவை உண்மையாக வணங்க இஸ்ரவேலர்களுக்கு நெகேமியா உதவினார். அதனால், அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். கி.மு. 455-வது வருஷம் திஷ்ரி மாதத்தில் நடந்த சம்பவங்களை கற்பனை செய்து பார்க்க இதில் இருக்கும் படங்கள் உதவியாக இருக்கும் (நெகேமியா 8:1-18)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
உண்மை வணக்கத்துக்காக செய்த ஏற்பாடுகளை மக்கள் ஆதரித்தார்கள்
உண்மை வணக்கத்துக்கு நெகேமியா காலத்தில் வாழ்ந்த மக்கள் நிறைய வழிகளில் ஆதரவு காட்டினார்கள். (நெகேமியா 9-11)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
இதுதான் சந்தோஷமான வாழ்க்கை
யெகோவாவுக்கு சேவை செய்ய இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. யெகோவாவுக்கு சேவை செய்வதன்மூலம் வாழ்க்கையில் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
நெகேமியா புத்தகத்தில் இருக்கும் முக்கியமான பாடங்கள்
உண்மை வணக்கத்தை பாதுகாக்க நெகேமியா முழு மூச்சோடு செயல்பட்டதை கற்பனை செய்து பாருங்கள். (நெகேமியா 12-13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
எல்லாரையும் நினைவு நாளுக்கு கூப்பிடுங்கள்
2016 இயேசுவின் மரண நினைவு நாளுக்கான அழைப்பிதழை ஊழியத்தில் எப்படிப் பேசி கொடுக்கலாம் என்பதற்கு ஒரு உதாரணம். ஊழியத்தில் ஆர்வமாக கேட்ட நபர்களை திரும்பவும் போய் பார்க்க “இப்படி செய்துபாருங்கள்” என்ற பகுதியில் இருக்கும் குறிப்புகளை பயன்படுத்துங்கள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
கடவுளுடைய மக்களுக்காக எஸ்தர் துணிந்து செயல்பட்டாள்
கடவுளுடைய மக்களை காப்பாற்றுவதற்காக எஸ்தர் காட்டும் தைரியத்தை கற்பனை செய்து பாருங்கள். (எஸ்தர் 1-5)