கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
‘இரண்டு சிறிய காசுகளின்’ மதிப்பு
அந்த விதவை கொடுத்த காணிக்கையை வைத்து ஒரு எளிய உணவைக்கூட வாங்க முடியாது. (w97 10/15 பக். 16-17 பாரா 16, அடிக்குறிப்பு.) இருந்தாலும், யெகோவாவுடைய ஏற்பாடுகளில் அவளுக்கு எந்தளவு அன்பும் மதிப்பும் இருந்தது என்பதை அது காட்டியது. அதனால்தான், பரலோகத் தகப்பனின் பார்வையில் அந்தக் காணிக்கை அதிக மதிப்புள்ளதாக இருந்தது.—மாற் 12:43.
‘நம்முடைய “கையிலிருந்து” யெகோவாவுக்கு கொடுக்கும் பரிசு’ என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
நாம் கொடுக்கிற நன்கொடைகள் என்னென்ன வேலைகளுக்கு உதவுகின்றன?
-
நாம் கொஞ்சமாகக் கொடுக்கும் நன்கொடைகூட ஏன் மதிப்புள்ளது?
-
நாம் வாழ்கிற இடத்தில் என்னென்ன விதங்களில் நன்கொடை கொடுக்கலாம் என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்?—“ ஆன்லைன் மூலம் நன்கொடை கொடுக்க...” என்ற பெட்டியைப் பாருங்கள்