கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
நமக்கு என்ன தேவை என்று யெகோவாவுக்குத் தெரியும்
உண்மையும் விவேகமும் உள்ள அடிமை “ஏற்ற வேளையில்” நமக்கு உணவு கொடுப்பது எதைக் காட்டுகிறது? அவர்களை வழிநடத்தும் யெகோவா, ஆன்மீக விதத்தில் நமக்கு என்ன தேவை என்று தெரிந்து வைத்திருப்பதைக் காட்டுகிறது. (மத் 24:45) நம்முடைய மண்டல மாநாடுகளும் மத்திப வாரக் கூட்டங்களும் அதற்கு சில அத்தாட்சிகளாக இருக்கின்றன.
போதனாக் குழு அறிக்கை, 2017 என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
சரியான நேரத்தில் மாநாடுகள் ஏற்பாடு செய்யப்படுவதற்கான பாராட்டும் புகழும் யாருக்கு சேர வேண்டும், ஏன்?
-
ஒரு மாநாட்டுக்கான வேலைகள் எந்தளவுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்படுகின்றன?
-
மாநாடுகளுக்கான தலைப்புகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகின்றன?
-
மாநாடுகளை ஏற்பாடு செய்வதில் என்னென்ன வேலைகள் உட்பட்டிருக்கின்றன?
-
கிலியட் பள்ளியின் படிப்பு முறையில் எப்படி மத்திப வாரக் கூட்டங்களுக்கான தகவல்கள் தயாரிக்கப்படுகின்றன?
-
வெவ்வேறு இலாகாக்களைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒன்றுசேர்ந்து பயிற்சிப் புத்தகத்தைத் தயாரிக்கிறார்கள்?
யெகோவா செய்கிற ஆன்மீக ஏற்பாடுகளைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?