Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“நம்முடைய ‘கையிலிருந்து’ யெகோவாவுக்கு கொடுக்கும் பரிசு”

“நம்முடைய ‘கையிலிருந்து’ யெகோவாவுக்கு கொடுக்கும் பரிசு”

“இன்று யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்க” நாம் என்ன செய்யலாம்? (1நா 29:5, 9, 14) யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய மற்றும் உள்ளூர் வேலைகளுக்கு ஆதரவு தர, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முறைகளில் நீங்கள் நன்கொடை தரலாம்.

ஆன்லைன் மூலம் அல்லது நன்கொடைப் பெட்டிகள் மூலம் கிடைக்கும் நன்கொடைகள் இந்த வேலைகளை ஆதரிக்கின்றன:

  • உலகளாவிய வேலை

    கிளை அலுவலகங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு அலுவலகங்கள் கட்டப்படுதல், செயல்படுதல்

    அமைப்பு நடத்தும் பள்ளிகள்

    விசேஷ முழுநேர ஊழியர்களைக் கவனித்தல்

    நிவாரண வேலைகள்

    அச்சிடுதல், வீடியோக்களைத் தயாரித்தல், டிஜிட்டல் பிரசுரங்களை வெளியிடுதல்

  • சபை செலவினங்கள்

    சபைக்குத் தேவையான பொருள்கள் வாங்குவது, ராஜ்ய மன்றத்தைப் பராமரிப்பது

    கிளை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பதாக சபையில் தீர்மானிக்கப்பட்ட நன்கொடைகள்:

    • உலகளாவிய ராஜ்ய மன்ற மற்றும் மாநாட்டு மன்ற கட்டுமான வேலைக்கான நன்கொடை

    • உலகம் முழுவதும் உதவி செய்யும் ஏற்பாடு (GAA)

    • உலகம் முழுவதும் அமைப்பு செய்யும் மற்ற வேலைகள்

மாநாடுகள்

மண்டல மாநாடுகளின்போது கொடுக்கப்படும் நன்கொடைகள் உலகளாவிய வேலைக்கு அனுப்பப்படுகிறது. மண்டல, விசேஷ மற்றும் சர்வதேச மாநாடுகளுக்கு ஆகும் செலவுகள் உலகளாவிய வேலைக்காகக் கொடுக்கப்படும் நன்கொடைகளிலிருந்து செய்யப்படுகின்றன.

ஒரு வட்டாரத்துக்குக் கொடுக்கப்படும் நன்கொடைகள், மாநாட்டு மன்றத்தின் வாடகைக்கும், மாநாடு நடத்துவதற்கும், மன்றங்களைப் பராமரிப்பதற்கும், வட்டாரம் சம்பந்தப்பட்ட மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. செலவுகள் போக மீதியிருக்கும் நன்கொடைகளை யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு அனுப்பிவைக்க வட்டாரத்தில் தீர்மானம் எடுக்கப்படலாம்.