Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்? (T-32 துண்டுப்பிரதியின் பின்பக்கம்)

கேள்வி: குடும்ப வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னுதான் நாம எல்லாரும் ஆசப்படுறோம். ஆனா அதுக்கு எது முக்கியம்? குடும்பத்துல இருக்கிற ஒவ்வொருத்தரும் அவங்கவங்க பங்குல என்ன செய்யணும்? ஒவ்வொருத்தரோட கடமையும் என்னன்னு வசனங்கள் சொல்லுது. அத நான் காட்டட்டுமா?

வசனம்: எபே 5:1, 2 அல்லது கொலோ 3:18-21

பிரசுரம்: சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு உதவுற பைபிள் நியமங்கள பத்தி இந்த துண்டுப்பிரதி சொல்லுது.

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

கேள்வி: கடவுளோட பேரு என்னன்னு நினைக்கிறீங்க?

வசனம்: சங் 83:18

உண்மை: கடவுளோட பேரு, யெகோவா.

மணவாழ்வில் மகிழ்ச்சி மலர...

அறிமுகம்: குடும்பத்த பத்தி ஒரு சின்ன வீடியோவ நாங்க காட்டறோம். [மணவாழ்வில் மகிழ்ச்சி மலர... என்ற சிற்றேட்டுக்கான அறிமுக வீடியோவைக் காட்டுங்கள்.]

பிரசுரம்: வீடியோவுல சொல்லப்படற சிற்றேட்ட படிச்சு பார்க்க உங்களுக்கு விருப்பம் இருந்தா, நான் அதை தர்றேன். இல்லன்னா, எங்களோட வெப்சைட்டிலிருந்து அத எப்படி டவுன்லோட் செய்யலாம்னு காட்டறேன்.

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படிப் பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களைப் பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படிப் பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்துத் தயாரியுங்கள்