Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

உங்கள் சூழ்நிலைகள் மாறும்போது ஆன்மீக ரீதியில் விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்

உங்கள் சூழ்நிலைகள் மாறும்போது ஆன்மீக ரீதியில் விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்

மாற்றங்களைத் தவிர்க்க முடியாது, அதுவும் இந்தக் கடைசி நாட்களில்! (1கொ 7:31) நாம் மாற்றங்களை எதிர்பார்க்கிறோமோ இல்லையோ, அவை நல்லவையோ கெட்டவையோ, நம் வழிபாட்டையும் யெகோவாவுடன் இருக்கும் பந்தத்தையும் அவை பாதிக்கலாம். மாற்றங்களை எதிர்ப்படும்போது ஆன்மீக ரீதியில் விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க நமக்கு எது உதவும்? இடம் மாறி சென்றாலும் யெகோவாவுக்கே முதலிடம் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • வீடியோவில் வரும் அப்பாவுக்கு ஒரு சகோதரர் என்ன ஆலோசனை கொடுத்தார்?

  • மத்தேயு 7:25-ல் உள்ள நியமம் எப்படி அந்தக் குடும்பத்தின் சூழ்நிலைக்குப் பொருந்தியது?

  • குடிமாறிப் போவதற்கு அந்தக் குடும்பத்தார் எப்படி முன்கூட்டியே திட்டமிட்டார்கள், அது அவர்களுக்கு எப்படி உதவியது?

  • சபையும் ஊழியம் செய்யும் பகுதியும் மாறியபோது, அதற்கேற்றபடி தங்களை மாற்றிக்கொள்ள அந்தக் குடும்பத்தாருக்கு எது உதவியது?

சமீபத்தில் நான் எதிர்ப்பட்ட பெரிய மாற்றங்கள்:

இந்த வீடியோவில் கற்றுக்கொண்ட நியமங்களை என் சூழ்நிலைக்கு எப்படிப் பொருத்துவேன்?