ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க...
அவர்களாகவே உணவை எடுத்துக்கொள்ள உதவுங்கள்
நம்மோடு பைபிள் படிப்பு படிப்பவர்கள், யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்வதற்கும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆவதற்கும், நாம் சொல்லித் தருகிற சத்தியங்களைத் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. (மத் 5:3; எபி 5:12–6:2) யெகோவா தரும் உணவை அவர்களாகவே எடுத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் எப்படி உதவலாம்?
படிப்புக்காக எப்படித் தயாரிப்பது என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிக்கொடுங்கள். அப்படித் தயாரிக்கச் சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துங்கள். (mwb18.03 பக். 6) அமைப்பு தந்திருக்கிற மற்ற பிரசுரங்களைப் படிப்பதற்கு முன்பு ஜெபம் செய்யச் சொல்லுங்கள். ஆராய்ச்சிக் கருவிகளை எப்படிக் கண்டுபிடிப்பது என்றும், எப்படிப் பயன்படுத்துவது என்றும் சொல்லிக்கொடுங்கள். jw.org வெப்சைட்டிலும் jw பிராட்காஸ்டிங்கிலும் புதிதாக வந்திருக்கிற தகவல்களை எப்படிப் பார்ப்பது என்று சொல்லிக்கொடுங்கள். தினமும் பைபிள் படிப்பதற்கும், கூட்டங்களுக்காகத் தயாரிப்பதற்கும், அவர்களுடைய மனதில் வருகிற கேள்விகளுக்கு அவர்களாகவே பதில் கண்டுபிடிப்பதற்கும் படிப்படியாகச் சொல்லிக் கொடுங்கள். கற்றுக்கொள்கிற விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்க்க உதவுங்கள்.
உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள் . . . அவர்களாகவே ஆன்மீக உணவை எடுத்துக்கொள்ள என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
படிப்பு என்பது, வெறுமனே பதில்களைக் கண்டுபிடிப்பது மட்டுமே கிடையாது என்பதை ஜேடுக்கு நீட்டா எப்படிப் புரியவைத்தாள்?
-
பாலியல் முறைகேட்டில் ஈடுபடக் கூடாது என்று சொல்கிற உரிமை யெகோவாவுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள எந்த விஷயம் ஜேடுக்கு உதவியது?
-
தியானிப்பதைப் பற்றி ஜேட் என்ன புரிந்துகொண்டாள்?