இப்படிப் பேசலாம்
விழித்தெழு!
கேள்வி: உலக நிலமைகள் ஏன் கட்டுக்கடங்காம போயிட்டே இருக்குன்னு யோசிச்சு பார்த்திருக்கீங்களா?
வசனம்: எரே 10:23
பிரசுரம்: ஒரு நல்ல எதிர்காலம் வரும்னு லட்சக்கணக்கான மக்கள் நம்புறாங்க. அதுக்கு என்ன காரணங்கறத பத்தி இந்த பத்திரிகை விளக்குது.
விழித்தெழு!
கேள்வி: கடவுளுக்கு ஒரு பேரு இருக்குன்னு நினைக்கிறீங்களா?
வசனம்: சங் 83:18
பிரசுரம்: கடவுளோட பேருக்கு என்ன அர்த்தம்... அந்த பேர நாம ஏன் பயன்படுத்தணும்... அப்படிங்கறத பத்தியெல்லாம் இந்த கட்டுரை சொல்லுது. [“பைபிளின் கருத்து—கடவுளுடைய பெயர்” என்ற கட்டுரையைக் காட்டுங்கள்.]
உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
கேள்வி: மரணமே இல்லாத ஒரு காலம் என்னைக்காவது வருமா?
வசனம்: 1கொ 15:26
உண்மை: மரணத்தை யெகோவா அடியோடு ஒழிக்கப்போறாரு.
நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
இப்படிப் பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களைப் பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படிப் பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்துத் தயாரியுங்கள்