கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—நம் பிராந்தியத்திலுள்ள எல்லாரையும் சந்தித்தல்
ஏன் முக்கியம்: மற்ற தேசங்களைச் சேர்ந்த எல்லா பாஷைக்காரர்களும் நல்ல செய்தியைக் கேட்பார்கள் என்று சகரியா தீர்க்கதரிசனம் சொன்னார். (சக 8:23) ஆனால், அவர்களுக்கு யார் கற்றுக்கொடுப்பார்கள்? (ரோ 10:13-15) நம் பிராந்தியத்திலுள்ள எல்லாருக்கும் நல்ல செய்தியைச் சொல்லும் பாக்கியமும் பொறுப்பும் நமக்குத்தான் இருக்கிறது.—od-E பக். 84 பாரா. 10-11.
எப்படிச் செய்வது:
-
தயாரியுங்கள். வேறொரு மொழி பேசுகிற மக்களை ஊழியத்தில் சந்திக்கிறீர்களா? JW லாங்குவேஜ் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஒரு எளிமையான அறிமுகத்தை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். அல்லது, நம் வெப்சைட்டில் உள்ள தகவல்களை அவர்களுடைய மொழியிலேயே எப்படிப் பார்க்கலாம் என்று உங்கள் மொபைலில் காட்டலாம்
-
சாட்சி கொடுப்பதற்கான சந்தர்ப்பங்களை எப்போதும் தேடுங்கள். வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது, நடந்துபோகிறவர்களிடம் அல்லது காரில் காத்துக்கொண்டு இருப்பவர்களிடம் சாட்சி கொடுப்பதற்கான சந்தர்ப்பங்களை நழுவவிடாதீர்கள். பொது ஊழியம் செய்யும்போது, சாட்சி கொடுக்க வேண்டுமென்ற குறிக்கோளை எப்போதும் மனதில் வைத்திருங்கள்
-
கடினமாக முயற்சி செய்யுங்கள். வீட்டில் இல்லாதவர்களைச் சந்திக்க முயற்சி செய்துகொண்டே இருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவரையாவது சந்திக்க முயற்சி செய்யுங்கள். அதே நாளில் வேறொரு நேரத்திலோ அதே வாரத்தில் வேறொரு நாளிலோ மறுபடியும் போய்ப் பார்க்கலாம். சிலருக்குக் கடிதம் மூலமோ ஃபோன் மூலமோ தெரு ஊழியத்தின் மூலமோ சாட்சி கொடுக்க வேண்டியிருக்கலாம்
-
மறுபடியும் போய்ப் பாருங்கள். ஆர்வம் காட்டியவரை உடனடியாகப் போய்ப் பாருங்கள். அவர் வேறொரு மொழி பேசுபவராக இருந்தால், அவரைச் சந்திப்பதற்கு அந்த மொழி தெரிந்த ஒரு பிரஸ்தாபியை ஏற்பாடு செய்யுங்கள். அவர் அப்படிச் சந்திக்கும்வரை நீங்கள் அந்த நபரைத் தொடர்ந்து போய்ப் பார்க்க வேண்டும்.—od-E பக். 94 பாரா. 39-40
‘பூமியின் கடைமுனைவரைக்கும்’ போய் ஊழியம் செய்கிறார்கள் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
ஒதுக்குப்புறமான பிராந்தியத்திலுள்ள மக்களைப் போய்ப் பார்ப்பதற்கு சகோதர சகோதரிகள் என்ன ஏற்பாடுகளைச் செய்தார்கள்? (1கொ 9:22, 23)
-
அவர்கள் என்னென்ன சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது?
-
அவர்கள் என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவித்தார்கள்?
-
உங்கள் பிராந்தியத்தில் இன்னும் நிறைய பேரைச் சந்திக்க நீங்கள் எப்படியெல்லாம் முயற்சி செய்யலாம்?