Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூலை 21-27

பாட்டு 97; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. மதுபானம் பயன்படுத்துவது பற்றிய ஞானமான ஆலோசனைகள்

(10 நிமி.)

மதுபானம் குடிக்க முடிவு செய்தால், அளவுக்கு அதிகமாகக் குடிக்காதீர்கள் (நீதி 23:20, 21; w04 12/1 பக். 19 பாரா. 5-6)

குடிவெறியால் வரும் மோசமான விளைவுகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் (நீதி 23:29, 30, 33-35; it-1 பக். 656)

மதுபானம் உங்கள் கண்களைக் கவர்ந்தாலும் அதில் ஆபத்து மறைந்திருப்பதை மறந்துவிடாதீர்கள் (நீதி 23:31, 32)

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 23:21—உடல் பருமனாக இருக்கும் ஒருவரைப் பெருந்தீனிக்காரர் என்று சொல்ல முடியுமா? விளக்குங்கள். (w04 11/1 பக். 31 பாரா 2)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) பொது ஊழியம். (lmd பாடம் 3 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(5 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். பைபிள் படிப்பு எப்படி இருக்கும் என்று நடத்திக் காட்டுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) யெகோவாவுக்குப் பிடிக்காத ஒரு பழக்கத்தை விடுவதற்கு போராடிக்கொண்டிருக்கும் உங்கள் பைபிள் மாணவரை உற்சாகப்படுத்துங்கள். (lmd பாடம் 12 குறிப்பு 4)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 35

7. மதுபானத்தைப் பரிமாறலாமா வேண்டாமா?

(8 நிமி.) கலந்துபேசுங்கள்.

திருமண வரவேற்பு மாதிரியான நிகழ்ச்சிகளில் அல்லது சகோதர சகோதரிகளை விருந்துக்கு அழைத்திருக்கும் சமயங்களில் மதுபானத்தைப் பரிமாறலாமா? இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட முடிவு. ஆனால், பைபிள் நியமங்களையும், கலாச்சாரம், மற்றவர்களுடைய மனசாட்சி, உள்ளூர் சட்டம் போன்ற விஷயங்களையும் நன்றாக யோசித்துப் பார்த்த பிறகுதான் அந்த முடிவை எடுக்க வேண்டும்.

மதுபானம் பரிமாறலாமா? என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • மதுபானத்தைப் பரிமாறலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய இந்த பைபிள் நியமங்கள் எப்படி உதவும்?

    • யோவா 2:9—ஒரு கல்யாண விருந்தில் இயேசு தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றினார்.

    • 1கொ 6:10—“குடிகாரர்கள் . . . கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.”

    • 1கொ 10:31, 32—‘நீங்கள் சாப்பிட்டாலும் குடித்தாலும் எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள். [மற்றவர்களுக்கு] தடைக்கல்லாகிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.’

  • என்னென்ன முக்கியமான விஷயங்களை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்?

  • நம்முடைய “சிந்திக்கும் திறனை” பயன்படுத்தி பைபிள் நியமங்களைப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்?—ரோ 12:1; பிர 7:16-18

8. சபைத் தேவைகள்

(7 நிமி.)

9. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 40; ஜெபம்