ஆகஸ்ட் 25-31
நீதிமொழிகள் 28
பாட்டு 150; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. பொல்லாதவனுக்கும் நீதிமானுக்கும் இருக்கிற வித்தியாசம்
(10 நிமி.)
பொல்லாதவன் பயந்து நடுங்குவான்; நீதிமான் தைரியமாக இருப்பான் (நீதி 28:1; w93 5/15 பக். 26 பாரா 2)
பொல்லாதவனால் விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு நல்ல முடிவெடுக்க முடியாது; நீதிமானால் நல்ல முடிவுகளை எடுக்க முடியும் (நீதி 28:5; it-2 பக். 1139 பாரா 3)
பணக்காரனாக இருக்கும் பொல்லாதவனைவிட ஏழையாக இருக்கும் நீதிமானுக்கு மதிப்பு அதிகம் (நீதி 28:6; it-1 பக். 1211 பாரா 4)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
-
நீதி 28:14—இந்த நீதிமொழியில் என்ன எச்சரிப்பு இருக்கிறது? (w01 12/1 பக். 11 பாரா 3)
-
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 28:1-17 (th படிப்பு 10)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். போருக்கும் வன்முறைக்கும் எப்படி முடிவு வரும் என்பதைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 5)
5. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். போருக்கும் வன்முறைக்கும் எப்படி முடிவு வரும் என்பதைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 4)
6. பேச ஆரம்பிப்பது
(2 நிமி.) பொது ஊழியம். போருக்கும் வன்முறைக்கும் எப்படி முடிவு வரும் என்பதைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 4)
7. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. போருக்கும் வன்முறைக்கும் எப்படி முடிவு வரும் என்பதைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 4)
பாட்டு 112
8. வன்முறையை விரும்புகிறீர்களா வெறுக்கிறீர்களா?
(6 நிமி.) கலந்துபேசுங்கள்.
எல்லா வன்முறைக்கும் காரணம் சாத்தான்தான். இயேசு அவனை ‘கொலைகாரன்’ என்றுகூட சொன்னார். (யோவா 8:44) சில தேவதூதர்கள் சாத்தானோடு சேர்ந்து கலகம் செய்த பிறகு, பூமியில் வன்முறை தலைவிரித்தாடியது. அதனால், கடவுளுடைய பார்வையில் பூமி சீரழிந்து கிடந்தது. (ஆதி 6:11) இன்றும் வன்முறைக்குப் பஞ்சமே இல்லை. சாத்தானுடைய இந்த உலகத்துக்கு முடிவு நெருங்க நெருங்க மக்கள் இன்னும் கொடூரமானவர்களாகவும் சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாகவும் நடந்துகொள்கிறார்கள்.—2தீ 3:1, 3.
சங்கீதம் 11:5-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
-
வன்முறையை விரும்புகிறவர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார், ஏன்?
-
மக்கள் வன்முறையை அதிகமாக விரும்புகிறார்கள் என்பதைப் பிரபலமான விளையாட்டுகளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் எப்படிக் காட்டுகின்றன?
நீதிமொழிகள் 22:24, 25-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
-
நாம் சரியான பொழுதுபோக்கையும் நண்பர்களையும் தேர்ந்தெடுக்காவிட்டால் வன்முறையை ரசிக்க ஆரம்பித்துவிடுவோம் என்று எப்படிச் சொல்லலாம்?
-
நாம் வன்முறையை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு எப்படிக் காட்டும்?
9. செப்டம்பர் மாதத்தில் விசேஷ ஊழியம்
(9 நிமி.)
ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. விசேஷ ஊழியத்தில் கலந்துகொள்ள எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். உங்கள் சபையில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றியும் சொல்லுங்கள்.
பூமியெங்கும் நிம்மதி! (2022 மாநாட்டுப் பாடல்) என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
10. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 12-13