ஆகஸ்ட் 11-17
நீதிமொழிகள் 26
பாட்டு 88; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. ‘முட்டாளிடமிருந்து’ விலகியிருங்கள்
(10 நிமி.)
மதிப்பு மரியாதையைப் பெற “முட்டாளுக்கு” தகுதியில்லை (நீதி 26:1; it-2 பக். 729 பாரா 6)
‘முட்டாளுக்கு’ கடுமையான கண்டிப்பு அடிக்கடி தேவைப்படும் (நீதி 26:3; w87 10/1 பக். 19 பாரா 12)
“முட்டாளை” நம்ப முடியாது (நீதி 26:6; it-2 பக். 191 பாரா 4)
வார்த்தையின் விளக்கம்: பைபிளில் “முட்டாள்” என்ற வார்த்தை, கடவுளுடைய நீதியான நெறிமுறைகளை அலட்சியப்படுத்திவிட்டு புத்தியில்லாமல் நடந்துகொள்கிறவர்களைக் குறிக்கிறது.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
-
நீதி 26:4, 5—இந்த இரண்டு வசனங்களும் ஒன்றோடு ஒன்று முரண்படவில்லை என்று ஏன் சொல்லலாம்? (it-1 பக். 846)
-
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 26:1-20 (th படிப்பு 5)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். ஒரு துண்டுப்பிரதியைப் பயன்படுத்திப் பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 5)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். அவருக்குக் கொடுத்த துண்டுப்பிரதியிலிருந்து தொடர்ந்து பேசுங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 4)
6. சீஷர்களை உருவாக்குவது
(5 நிமி.) சொந்தக்காரரிடம் சாட்சி கொடுக்கத் தயாரிப்பதற்கு உங்கள் பைபிள் மாணவருக்கு உதவுங்கள். (lmd பாடம் 11 குறிப்பு 5)
பாட்டு 94
7. தனிப்பட்ட படிப்பு “ஞானத்தைத் தந்து . . . மீட்கப்படுவதற்கு வழிநடத்தும்”
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
சிசுப் பருவத்திலிருந்து தீமோத்தேயு கற்றுக்கொண்ட பரிசுத்த எழுத்துக்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை அவருக்கு அப்போஸ்தலன் பவுல் ஞாபகப்படுத்தினார். அந்த எழுத்துக்கள் தீமோத்தேயுவுக்கு “ஞானத்தைத் தந்து . . . மீட்கப்படுவதற்கு வழிநடத்தும்” என்று சொன்னார். (2தீ 3:15) பைபிள் சத்தியங்களுக்கு ரொம்ப மதிப்பு இருப்பதால், பைபிளை வாசிப்பதற்கும் ஆராய்ச்சி செய்து படிப்பதற்கும் நாம் ஒவ்வொருவருமே நேரத்தை ஒதுக்குவது ரொம்ப முக்கியம். ஆனால், படிக்கவே நமக்குப் பிடிக்காது என்றால் என்ன செய்வது?
1 பேதுரு 2:2-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
-
பைபிளை ரசித்துப் படிக்க நம்மால் கற்றுக்கொள்ள முடியுமா?
-
கடவுளுடைய வார்த்தைக்காக ‘ஏக்கத்தை வளர்த்துக்கொள்ள’ நாம் என்ன செய்யலாம்?—w18.03 பக். 29 பாரா 6
-
அமைப்பு தந்திருக்கும் JW லைப்ரரி போன்ற எலெக்ட்ரானிக் கருவிகள், பைபிளை இன்னும் பிரயோஜனமான விதத்தில் படிக்க எப்படி உதவும்?
அமைப்பின் சாதனைகள்—JW லைப்ரரியை பயன்படுத்த சில டிப்ஸ் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
-
JW லைப்ரரி உங்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்திருக்கிறது?
-
JW லைப்ரரியில் நீங்கள் பயன்படுத்துகிற என்னென்ன அம்சங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கின்றன?
-
வேறென்ன அம்சங்களை அதில் கற்றுக்கொண்டு பயன்படுத்த நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 8-9