Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவாவின் ஒழுக்கத் தராதரங்களை உயர்வாக மதியுங்கள்

யெகோவாவின் ஒழுக்கத் தராதரங்களை உயர்வாக மதியுங்கள்

மனிதர்கள் எப்படிப்பட்ட ஒழுக்கத் தராதரங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று யெகோவா சொல்லியிருக்கிறார். உதாரணத்துக்கு, திருமணம் ஆனவர்கள் எப்போதும் சேர்ந்து வாழ வேண்டுமென்று அவர் கட்டளை கொடுத்திருக்கிறார். (மத் 19:4-6, 9) அதோடு, எல்லா விதமான பாலியல் முறைகேட்டையும் அவர் வெறுக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (1கொ 6:9, 10) தன்னுடைய மக்கள் மற்றவர்களைவிட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆடை அலங்காரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில்கூட சில நியமங்களை அவர் கொடுத்திருக்கிறார்.—உபா 22:5; 1தீ 2:9, 10.

இன்று அநேகர் யெகோவாவின் ஒழுக்கத் தராதரங்களை மதிப்பதே கிடையாது. (ரோ 1:18-32) ஆடை அலங்காரம், நடத்தை போன்ற விஷயங்களில் பிரபலமாக இருக்கும் கருத்தையே விரும்புகிறார்கள். மோசமான வாழ்க்கை வாழ்வதைப் பெருமையாக நினைக்கிறார்கள். கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்பவர்களைக் கேலி செய்கிறார்கள்.—1பே 4:3, 4

ஆனால் யெகோவாவின் சாட்சிகளான நாம், கடவுளுடைய ஒழுக்கத் தராதரங்களை உயர்வாக மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? (ரோ 12:9) கடவுளுடைய தராதரங்களைப் பற்றி சாதுரியமாக மற்றவர்களிடம் சொல்ல வேண்டும். அதோடு, நாமும் அந்தத் தராதரங்களின்படி வாழ வேண்டும். ஆடை அலங்காரம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் நாம் கவனம் செலுத்த வேண்டும். உதாரணத்துக்கு, “நான் தேர்ந்தெடுக்குற உடை, யெகோவாவுக்கு பிடிச்ச மாதிரி இருக்கா? நான் கடவுள்பக்தியுள்ள நபர்னு அது காட்டுமா?” என்று கேட்டுக்கொள்ளுங்கள். பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்போது, “நான் பாக்குற திரைப்படத்த இல்லனா டிவி நிகழ்ச்சிய பத்தி யெகோவா என்ன நினைப்பாரு? இந்த நிகழ்ச்சி யெகோவாவுடைய ஒழுக்கத் தராதரங்களோடு ஒத்துப்போகுதா? யெகோவாவுக்கு பிடிச்ச மாதிரி ஒழுக்கமா வாழணுங்குற என்னோட தீர்மானத்த இது கெடுத்துடுமா? (சங் 101:3) நான் இந்த நிகழ்ச்சிய பாக்குறத குடும்பத்துல இருக்குறவங்களும் மத்தவங்களும் பார்த்தா எப்படி உணர்வாங்க?” என்று யோசித்துப் பாருங்கள்.—1கொ 10:31-33.

யெகோவாவுடைய ஒழுக்கத் தராதரங்களின்படி வாழ்வது ஏன் ரொம்ப முக்கியம்? சீக்கிரத்தில் கிறிஸ்து இயேசு இந்தப் பூமியில் இருக்கிற கெட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் துடைத்து அழிக்கப்போகிறார். (எசே 9:4-7) கடவுளுக்கு பிரியமாக நடப்பவர்கள் மட்டும்தான் இந்தப் பூமியில் என்றென்றும் வாழப்போகிறார்கள். (1யோ 2:15-17) கடவுள் எதிர்பார்க்கும் ஒழுக்கத் தராதரங்களின்படி நாம் வாழ்ந்தால் நம்மை பார்த்து மற்றவர்கள் கடவுளைப் புகழ்வார்கள்.—1பே 2:11, 12.

நான் தேர்ந்தெடுக்கும் உடை கடவுளுடைய ஒழுக்கத் தராதரங்களின்படி இருக்கிறதா?

யெகோவாவின் நண்பனாகு! ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • யெகோவாவுடைய தராதரங்களின்படி வாழ்வதால் நமக்கு என்ன நன்மை?

  • பெற்றோர்கள் ஏன் பிள்ளைகளுக்கு சின்ன வயதிலிருந்தே யெகோவாவின் ஒழுக்கத் தராதரங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்?

  • எதிர்காலத்தில் யெகோவா கொடுக்கப்போகும் ஆசீர்வாதங்களை மற்றவர்கள் பெற்றுக்கொள்ள பிள்ளைகளும் பெரியவர்களும் எப்படி உதவி செய்யலாம்?