Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எஸ்றா 1-5

யெகோவா சொன்னதை செய்வார்

யெகோவா சொன்னதை செய்வார்

எருசலேமில் ஆலயம் திரும்பவும் கட்டப்படும் என்று யெகோவா சொல்லியிருந்தார். ஆனால், பாபிலோனில் இருந்து திரும்பி வந்தவர்கள் ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தபோது அந்த வேலையை நிறுத்துவதற்கு ராஜா கட்டளை போட்டார். மற்றவர்களிடம் இருந்தும் நிறைய பிரச்சினைகள் வந்தது. ஆலயத்தைக் கட்டி முடிக்க முடியாது என்று நிறையப் பேர் நினைத்தார்கள்.

  1. ஏறக்குறைய கி.மு. 537

    ஆலயத்தை திரும்பவும் கட்டுவதற்கு கோரேசு கட்டளையிட்டார்

  2. 3:3

    ஏழாவது மாதம்

    பலிபீடம் கட்டப்பட்டு பலிகள் செலுத்தப்பட்டன

  3. 3:10, 11

    கி.மு. 536

    அஸ்திவாரம் போடப்பட்டது

  4. 4:23, 24

    கி.மு. 522

    அர்தசஷ்டா ராஜா வேலையை நிறுத்தும்படி கட்டளையிட்டார்

  5. 5:1, 2

    கி.மு. 520

    சகரியாவும் ஆகாயும் மக்களை உற்சாகப்படுத்தினார்கள்; மக்கள் மீண்டும் ஆலயத்தைக் கட்ட ஆரம்பிக்கிறார்கள்

  6. 6:15

    கி.மு. 515

    ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது