பைபிளில் இருக்கும் புதையல்கள்
சாத்தான் பரப்புகிற பொய்களிலிருந்து கடவுளுடைய மாறாத அன்பு நம்மை பாதுகாக்கும்
கெட்ட விஷயங்கள் நடப்பதற்கு யெகோவாதான் காரணம் என்று சாத்தான் மக்களை நம்ப வைக்கிறான் (யோபு 8:4)
நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதும் இல்லாமல் போவதும் அவருக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை என்று நாம் நினைக்க வேண்டும் என்பதுதான் சாத்தானின் ஆசை (யோபு 9:20-22; w15 10/1 பக். 10 பாரா 3)
சாத்தானுடைய பொய்களை நம்பி ஏமாந்துவிடாமல் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க, அவருடைய மாறாத அன்பு உதவுகிறது (யோபு 10:12; சங் 32:7, 10; w21.11 பக். 6 பாரா 14)
இதை செய்து பாருங்கள்: ஒரு சோதனை வரும்போது, யெகோவா உங்கள்மேல் மாறாத அன்பை எப்படியெல்லாம் காட்டுகிறார் என்பதைக் கவனியுங்கள். அதை எழுதி வையுங்கள். பிறகு, அடிக்கடி எடுத்து யோசித்துப்பாருங்கள். இப்படி செய்வது நம்மை பலப்படுத்தும்.