கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவைப் புகழ்வதற்காகவே வாழுங்கள்!
உயிர் ஒரு அருமையான பரிசு! அதை எந்தளவுக்கு மதிக்கிறோம் என்பதை நம்முடைய தினசரி வாழ்க்கையில் நாம் காட்டலாம். உயிரின் ஊற்றாகிய யெகோவாவை மகிமைப்படுத்துவதற்காக, அவருடைய சாட்சிகளாகிய நாம் நம்முடைய திறமைகளைப் பயன்படுத்த கடினமாக முயற்சி செய்கிறோம். (சங் 36:9; வெளி 4:11) ஆனாலும், இந்தப் பொல்லாத உலகத்தில் தினமும் நமக்கு ஏற்படுகிற கவலைகளால், ஆன்மீகக் காரியங்களை நாம் எளிதில் அசட்டை செய்துவிடலாம். (மாற் 4:18, 19) அதனால், ‘நான் உண்மையாவே என்னால முடிஞ்ச மிகச் சிறந்தத யெகோவாவுக்கு கொடுக்கறேனா? (ஓசி 14:2) நான் யெகோவாவுக்கு செய்யும் சேவைய என்னோட வேலை எந்தளவுக்கு பாதிக்குது? என்னோட ஆன்மீக லட்சியங்கள் என்ன? நான் எப்படி இன்னும் அதிகமா ஊழியம் செய்யலாம்?’ என்றெல்லாம் நம்மையே நாம் கேட்டுக்கொள்வது நல்லது. நீங்கள் முன்னேற்றம் செய்ய வேண்டியிருந்தால், உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்துவிட்டு, தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். தினமும் யெகோவாவைப் புகழ்வது, திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ வழிசெய்யும் என்பதில் சந்தேகமே இல்லை!—சங் 61:8.
-
உங்கள் திறமைகளைச் சாத்தானின் உலகத்துக்காகப் பயன்படுத்துவது ஏன் புத்திசாலித்தனம் அல்ல? (1யோ 2:17)
-
யெகோவாவுக்காக மிகச் சிறந்ததைக் கொடுப்பவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன?
-
பரிசுத்த சேவையின் எந்த அம்சங்களுக்காக உங்கள் திறமைகளை நீங்கள் பயன்படுத்தலாம்?