Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

1 ராஜாக்கள் புத்தகம்

அதிகாரங்கள்

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • தாவீதும் அபிஷாக்கும் (1-4)

    • அதோனியா ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறான் (5-10)

    • நாத்தானும் பத்சேபாளும் நடவடிக்கை எடுக்கிறார்கள் (11-27)

    • சாலொமோனை அபிஷேகம் செய்ய தாவீது கட்டளையிடுகிறார் (28-40)

    • அதோனியா பலிபீடத்துக்கு ஓடுகிறான் (41-53)

  • 2

    • சாலொமோனுக்கு தாவீதின் அறிவுரை (1-9)

    • தாவீது இறந்துபோகிறார்; சாலொமோன் சிம்மாசனத்தில் உட்காருகிறார் (10-12)

    • அதோனியாவின் திட்டம் அவன் உயிருக்கே உலை வைக்கிறது (13-25)

    • அபியத்தார் ஊரைவிட்டு துரத்தப்படுகிறார்; யோவாப் கொல்லப்படுகிறார் (26-35)

    • சீமேயி கொல்லப்படுகிறான் (36-46)

  • 3

    • பார்வோனின் மகளை சாலொமோன் கல்யாணம் செய்கிறார் (1-3)

    • சாலொமோனின் கனவில் யெகோவா (4-15)

      • சாலொமோன் ஞானம் கேட்கிறார் (7-9)

    • இரண்டு தாய்மார்களுக்கு சாலொமோனின் தீர்ப்பு (16-28)

  • 4

    • சாலொமோனின் நிர்வாகம் (1-19)

    • சாலொமோனின் ஆட்சியில் செழிப்பு (20-28)

      • திராட்சைக் கொடியின் நிழலிலும் அத்திமரத்தின் நிழலிலும் பாதுகாப்பு (25)

    • சாலொமோனின் ஞானமும் நீதிமொழிகளும் (29-34)

  • 5

    • கட்டுமானப் பொருள்களை ஈராம் ராஜா தருகிறார் (1-12)

    • சாலொமோன் தன் வேலைக்கு ஆட்களை வைக்கிறார் (13-18)

  • 6

    • சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறார் (1-38)

      • மகா பரிசுத்த அறை (19-22)

      • கேருபீன்கள் (23-28)

      • செதுக்கு வேலைப்பாடுகள், கதவுகள், உட்பிரகாரம் (29-36)

      • சுமார் 7 வருஷங்களில் ஆலயம் கட்டி முடிக்கப்படுகிறது (37, 38)

  • 7

    • சாலொமோன் கட்டிய அரண்மனை வளாகம் (1-12)

    • சாலொமோனுக்கு ஈராம் உதவுகிறார் (13-47)

      • இரண்டு செம்புத் தூண்கள் (15-22)

      • ‘செம்புக் கடல்’ தொட்டி வார்க்கப்படுகிறது (23-26)

      • 10 தள்ளுவண்டிகளும் செம்புத் தொட்டிகளும் (27-39)

    • தங்கச் சாமான்கள் செய்து முடிக்கப்படுகின்றன (48-51)

  • 8

    • கடவுளின் பெட்டி ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிறது (1-13)

    • மக்களிடம் சாலொமோன் பேசுகிறார் (14-21)

    • ஆலய அர்ப்பணிப்பின்போது சாலொமோன் செய்த ஜெபம் (22-53)

    • மக்களை சாலொமோன் ஆசீர்வதிக்கிறார் (54-61)

    • பலிகளும் அர்ப்பண விழாவும் (62-66)

  • 9

    • யெகோவா மறுபடியும் சாலொமோனுக்குத் தோன்றுகிறார் (1-9)

    • ஈராம் ராஜாவுக்கு சாலொமோனின் அன்பளிப்பு (10-14)

    • சாலொமோனின் மற்ற கட்டுமானத் திட்டங்கள் (15-28)

  • 10

    • சேபா தேசத்து ராணி சாலொமோனைச் சந்திக்கிறாள் (1-13)

    • சாலொமோனிடம் குவிந்திருந்த செல்வம் (14-29)

  • 11

    • சாலொமோனின் மனைவிகள் அவருடைய இதயத்தை வழிவிலகச் செய்கிறார்கள் (1-13)

    • சாலொமோனின் எதிரிகள் (14-25)

    • யெரொபெயாமுக்கு 10 கோத்திரங்கள் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி (26-40)

    • சாலொமோன் இறந்துபோகிறார்; ரெகொபெயாம் ராஜாவாகிறார் (41-43)

  • 12

    • ரெகொபெயாமின் கடுமையான பதில் (1-15)

    • 10 கோத்திரத்தார் கலகம் செய்கிறார்கள் (16-19)

    • யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (20)

    • ரெகொபெயாம் இஸ்ரவேல்மீது போர் செய்யக் கூடாது (21-24)

    • யெரொபெயாமின் கன்றுக்குட்டி வழிபாடு (25-33)

  • 13

    • பெத்தேலிலுள்ள பலிபீடத்துக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் (1-10)

      • பலிபீடம் வெடித்துச் சிதறுகிறது (5)

    • கடவுளின் ஊழியர் கீழ்ப்படியாமல் போகிறார் (11-34)

  • 14

    • யெரொபெயாமுக்கு எதிராக அகியாவின் தீர்க்கதரிசனம் (1-20)

    • ரெகொபெயாம் யூதாவை ஆட்சி செய்கிறார் (21-31)

      • சீஷாக் படையெடுத்து வருகிறான் (25, 26)

  • 15

    • அபியாம் யூதாவின் ராஜாவாகிறார் (1-8)

    • ஆசா யூதாவின் ராஜாவாகிறார் (9-24)

    • நாதாப் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (25-32)

    • பாஷா இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (33, 34)

  • 16

    • பாஷாவுக்கு எதிராக யெகோவாவின் தீர்ப்பு (1-7)

    • ஏலா இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (8-14)

    • சிம்ரி இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (15-20)

    • உம்ரி இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (21-28)

    • ஆகாப் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (29-33)

    • ஈயேல் எரிகோவைத் திரும்பக் கட்டுகிறான் (34)

  • 17

    • வறட்சியைப் பற்றி எலியாவின் தீர்க்கதரிசனம் (1)

    • எலியாவுக்கு அண்டங்காக்கைகள் உணவு கொண்டுவருகின்றன (2-7)

    • சாறிபாத்தில் ஒரு விதவையை எலியா சந்திக்கிறார் (8-16)

    • விதவையின் மகன் இறந்துபோகிறான், பின்பு உயிரோடு எழுப்பப்படுகிறான் (17-24)

  • 18

    • ஒபதியாவையும் ஆகாபையும் எலியா சந்திக்கிறார் (1-18)

    • கர்மேலில் எலியாவும் பாகால் தீர்க்கதரிசிகளும் (19-40)

      • ‘இரண்டு மனதாக இருக்கிறார்கள்’ (21)

    • மூன்றரை வருஷ வறட்சி முடிவடைகிறது (41-46)

  • 19

    • யேசபேலுக்குப் பயந்து எலியா ஓடுகிறார் (1-8)

    • ஓரேபில் எலியாவுக்கு யெகோவா தோன்றுகிறார் (9-14)

    • அசகேல், யெகூ, எலிசா ஆகியோரை எலியா அபிஷேகம் செய்ய வேண்டும் (15-18)

    • எலியாவுக்குப் பின்பு எலிசா நியமனம் (19-21)

  • 20

    • ஆகாபுக்கு எதிராக சீரியர்களின் போர் (1-12)

    • சீரியர்களை ஆகாப் தோற்கடிக்கிறார் (13-34)

    • ஆகாபுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் (35-43)

  • 21

    • நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தின் மீது ஆகாப் ஆசைப்படுகிறார் (1-4)

    • சதித்திட்டம் போட்டு நாபோத்தை யேசபேல் கொல்கிறாள் (5-16)

    • ஆகாபுக்கு எதிராக எலியாவின் செய்தி (17-26)

    • ஆகாப் தாழ்மையாக நடக்கிறார் (27-29)

  • 22

    • ஆகாபுடன் யோசபாத் கூட்டுச் சேர்கிறார் (1-12)

    • தோல்வியைப் பற்றி மிகாயாவின் தீர்க்கதரிசனம் (13-28)

      • ஆகாபை ஏமாற்ற பொய்யான செய்தி (21, 22)

    • ராமோத்-கீலேயாத்தில் ஆகாப் கொல்லப்படுகிறார் (29-40)

    • யோசபாத் யூதாவின் ராஜாவாகிறார் (41-50)

    • அகசியா இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (51-53)