சங்கீதம் 42:1-11
இசைக் குழுவின் தலைவனுக்கு; கோராகுவின்+ மகன்களுடைய மஸ்கீல்.*
42 ஒரு மான் நீரோடைகளின் தண்ணீருக்காக ஏங்குவது போல,கடவுளே, நான் உங்களுக்காக ஏங்குகிறேன்.
2 ஒருவன் தண்ணீருக்காகத் தவிப்பது போல நான் உயிருள்ள கடவுளுக்காகத் தவிக்கிறேன்.*+
நான் எப்போது கடவுளுடைய சன்னிதியில் வந்து நிற்பேன்?+
3 ராத்திரி பகலாக என்னுடைய கண்ணீர்தான் எனக்கு உணவாக இருக்கிறது.“உன்னுடைய கடவுள் எங்கே போனார்?” என்று கேட்டு ஜனங்கள் என்னை நாள் முழுவதும் நோகடிக்கிறார்கள்.+
4 ஒருகாலத்தில், நான் பண்டிகை+ கொண்டாடுகிற ஜனக்கூட்டத்தோடு சேர்ந்து,அவர்கள் முன்னால் சந்தோஷமாகப் பாடிக்கொண்டும், நன்றி சொல்லிக்கொண்டும்,கடவுளுடைய ஆலயத்துக்குப் பயபக்தியோடு* நடந்துபோனேனே!அதையெல்லாம் நினைக்கும்போது என் உள்ளம் உருகுகிறதே!
5 நான் ஏன் இப்படித் தவிக்கிறேன்?+
எனக்குள் ஏன் இந்தக் கலக்கம்?என் நெஞ்சமே, கடவுளுக்காகக் காத்திரு.+
ஏனென்றால், என்னுடைய மகத்தான மீட்பரை நான் தொடர்ந்து புகழ்வேன்.+
6 கடவுளே, நான் தவிக்கிறேன்.+
அதனால், உங்களை நினைத்துப் பார்க்கிறேன்.+யோர்தான் பிரதேசத்திலும், எர்மோன் சிகரங்களிலும்,மீசார் மலையிலும்* உங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
7 உங்கள் அருவிகள் திமுதிமுவென்று கொட்டும்போது,வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கைக் கூப்பிடுகிறது.
பொங்கி வரும் உங்கள் அலைகள் என்னை மூழ்கடிக்கின்றன.+
8 பகலில் யெகோவா தன்னுடைய மாறாத அன்பை என்மேல் பொழிவார்.ராத்திரியில் நான் அவரைப் பற்றிப் பாடுவேன்.
எனக்கு உயிர் தந்த கடவுளாகிய அவரிடம் வேண்டுவேன்.+
9 எனக்கு மாபெரும் கற்பாறையாக இருக்கிற கடவுளிடம்,
“ஏன் என்னை மறந்துவிட்டீர்கள்?+
எதிரியின் கொடுமை தாங்காமல் நான் ஏன் சோகத்தோடு நடமாட வேண்டும்?”+ என்று கேட்பேன்.
10 கொலைவெறியோடு* எதிரிகள் என்னை நோகடிக்கிறார்கள்.“உன்னுடைய கடவுள் எங்கே போனார்?” என்று கேட்டு நாள் முழுவதும் என்னை நோகடிக்கிறார்கள்.+
11 நான் ஏன் இப்படித் தவிக்கிறேன்?
எனக்குள் ஏன் இந்தக் கலக்கம்?
என் நெஞ்சமே, கடவுளுக்காகக் காத்திரு.+ஏனென்றால், என்னுடைய மகத்தான மீட்பரை நான் தொடர்ந்து புகழ்வேன்.+
அடிக்குறிப்புகள்
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ வே.வா., “உயிருள்ள கடவுள்மேல் தாகமாக இருக்கிறேன்.”
^ வே.வா., “மெதுவாக.”
^ வே.வா., “சிறிய மலையிலும்.”
^ அல்லது, “என் எலும்புகளை நொறுக்கிவிடுவதுபோல்.”