சங்கீதம் 4:1-8

  • நம்பிக்கையோடு செய்யப்படும் ஜெபம்

    • “கோபம் வந்தாலும் பாவம் செய்யாதீர்கள்” (4)

    • “நான் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவேன்” (8)

இசைக் குழுவின் தலைவனுக்கு; நரம்பிசைக் கருவிகளோடு பாட வேண்டிய தாவீதின் சங்கீதம். 4  நீதியுள்ள கடவுளே,+ நான் கூப்பிடும்போது கேளுங்கள், எனக்குப் பதில் சொல்லுங்கள். வேதனையிலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கள். என் ஜெபத்தைக் கேளுங்கள், எனக்குக் கருணை காட்டுங்கள்.   மனிதர்களே, எவ்வளவு காலத்துக்குத்தான் என் மதிப்பு மரியாதையைக் கெடுத்து என்னை அவமானப்படுத்துவீர்கள்? எவ்வளவு காலத்துக்குத்தான் வீணான காரியங்களை விரும்புவீர்கள்? எவ்வளவு காலத்துக்குத்தான் பொய்யான காரியங்களைத் தேடிப்போவீர்கள்? (சேலா)   ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்: யெகோவா தனக்கு உண்மையாக* இருப்பவர்களை விசேஷமாகக் கவனித்துக்கொள்வார்.*நான் கூப்பிடும்போது யெகோவா கேட்பார்.   கோபம் வந்தாலும் பாவம் செய்யாதீர்கள்.+ சொல்ல நினைப்பதை மனதிலேயே* சொல்லிக்கொண்டு, அமைதியாகப் படுத்திருங்கள். (சேலா)   நீதியான பலிகளைச் செலுத்துங்கள்.யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள்.+   “எங்களுக்கு யார்தான் நல்லது செய்வார்கள்?” என்று நிறைய பேர் கேட்கிறார்கள். யெகோவாவே, உங்கள் முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும்.+   அமோக அறுவடையும் புதிய திராட்சமதுவும் தருகிற சந்தோஷத்தைவிடஅதிக சந்தோஷத்தால் என் இதயத்தை நிரப்பியிருக்கிறீர்கள்.   நான் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவேன்,+யெகோவாவே, நீங்கள் மட்டும்தான் எனக்குப் பாதுகாப்பு தருகிறீர்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “தனக்கென்று ஒதுக்கி வைப்பார்; விசேஷமானவர்களாக ஆக்குவார்.”
நே.மொ., “இதயத்திலேயே.”