சங்கீதம் 126:1-6

  • மக்கள் சீயோனுக்கு மறுபடியும் வந்தபோது கிடைத்த சந்தோஷம்

    • ‘யெகோவா அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்’ (3)

    • அழுகை ஆனந்தமாக மாறுகிறது (5, 6)

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். 126  யெகோவா நம்மை* மறுபடியும் சீயோனுக்குக் கூட்டிக்கொண்டு வந்தபோது,+ஏதோ கனவு கண்டதுபோல் இருந்தது.   அப்போது, நாம் வாய்விட்டுச் சிரித்து மகிழ்ந்தோம்,சந்தோஷமாக ஆரவாரம் செய்தோம்.+ மற்ற தேசத்து மக்கள் எல்லாரும், “யெகோவா இவர்களுக்கு அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்!”+ என்று பேசிக்கொண்டார்கள்.   யெகோவா நமக்கு அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்.+நாம் சந்தோஷத்தில் துள்ளுகிறோம்.   யெகோவாவே, நெகேபின்* வறண்ட நீரோடைகளில் நீங்கள் தண்ணீரை வர வைப்பது போலவே,சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை உங்கள் தேசத்துக்கு மறுபடியும் வர வையுங்கள்.   கண்ணீரோடு விதைக்கிறவர்கள்சந்தோஷ ஆரவாரத்தோடு அறுப்பார்கள்.   பையில் விதைகளை எடுத்துக்கொண்டு போகிறவன்அழுதுகொண்டே போனாலும்,கதிர்களை அறுத்துக்கொண்டு வரும்போது,+ஆனந்த ஆரவாரம் செய்துகொண்டுதான் வருவான்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “சிறையிருப்பிலிருந்த நம்மை.”
வே.வா., “தெற்கில் உள்ள பள்ளத்தாக்குகளின்.”