ஏசாயா 62:1-12

  • சீயோனின் புதிய பெயர் (1-12)

62  பிரகாசமான வெளிச்சம்போல் சீயோனில் நீதி ஒளிவீசும்வரை+நான் அமைதியாக* இருக்க மாட்டேன்.+எரிகிற தீப்பந்தம்போல் மீட்பு எருசலேமில் ஒளிவீசும்வரை+நான் சும்மா இருக்க மாட்டேன்.   “பெண்ணே, தேசங்கள் உன் நீதியைப் பார்க்கும்.+ராஜாக்கள் உன் மகிமையைப் பார்ப்பார்கள்.+ நீ புதிய பெயரால் அழைக்கப்படுவாய்.+யெகோவாவே உனக்கு அந்தப் பெயரை வைப்பார்.   யெகோவாவின் கையில் நீ அழகான கிரீடமாக இருப்பாய்.உன் கடவுளுடைய கையில் ஒரு மணிமகுடமாக இருப்பாய்.   இனி நீ கைவிடப்பட்டவள் என்று அழைக்கப்பட மாட்டாய்.+எனக்குப் பிரியமானவள் என்றே அழைக்கப்படுவாய்.+ இனி உன் தேசம் பாழான தேசம் என்று அழைக்கப்படாது.+மணமானவள் என்றே அது அழைக்கப்படும். ஏனென்றால், யெகோவா உன்மேல் பிரியமாயிருப்பார்.உன் தேசம் மணமானவளைப் போல இருக்கும்.   ஒரு வாலிபன் ஒரு கன்னிப்பெண்ணைக் கல்யாணம் செய்வது போல,உன் மக்கள் உன்னைக் கல்யாணம் செய்வார்கள். மணமகன் தன் மணமகளைப் பார்த்து சந்தோஷப்படுவதைப் போலஉன் கடவுள் உன்னைப் பார்த்து சந்தோஷப்படுவார்.+   எருசலேமே, உன் மதில்கள்மேல் நான் காவல்காரர்களை நிற்க வைத்திருக்கிறேன். அவர்கள் அமைதியாக இல்லாமல் ராத்திரி பகலாக விடாமல் எச்சரிப்பு கொடுக்க வேண்டும். யெகோவாவைப் பற்றி அறிவிக்கிறவர்களே,ஓய்ந்துபோகாதீர்கள்.   அவர் எருசலேமை நிலைநாட்டி, பூமியெங்கும் அதன் புகழைப் பரப்பும்வரை+அவரிடம் வேண்டிக்கொண்டே இருங்கள்.”   யெகோவா தன்னுடைய பலமான வலது கையை உயர்த்தி இப்படி உறுதிமொழி கொடுத்திருக்கிறார்: “உங்கள் தானியத்தை இனியும் எதிரிகள் சாப்பிடுவதற்கு விட மாட்டேன்.நீங்கள் பாடுபட்டுத் தயாரித்த புதிய திராட்சமதுவை இனியும் மற்ற தேசத்து ஜனங்கள் குடிக்க அனுமதிக்க மாட்டேன்.+   தானியத்தை அறுவடை செய்கிறவர்கள்தான் அதைச் சாப்பிடுவார்கள், அவர்கள் யெகோவாவைப் புகழ்வார்கள்.திராட்சமதுவைத் தயாரித்தவர்கள்தான் அதை என் பரிசுத்த பிரகாரங்களில் குடிப்பார்கள்.”+ 10  வாருங்கள், வாசலைத் தாண்டி வாருங்கள். ஜனங்களுக்காக வழியைத் தயார்படுத்துங்கள்.+ நெடுஞ்சாலையை அமையுங்கள்; அதைப் புதிதாக அமையுங்கள். கற்களையெல்லாம் எடுத்துப் போடுங்கள்.+ ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்.*+ 11  பூமியெங்கும் யெகோவா இதை அறிவித்திருக்கிறார்: “நீங்கள் சீயோன் மகளிடம், ‘இதோ! உனக்கு மீட்பு வருகிறது.+இதோ! அவர் பரிசை எடுத்துக்கொண்டு வருகிறார்.கொடுக்கப்போகிற கூலியை எடுத்துக்கொண்டு வருகிறார்’+ என்று சொல்லுங்கள்.” 12  அவர்கள் யெகோவாவினால் மீட்கப்பட்ட பரிசுத்த மக்கள் என்று அழைக்கப்படுவார்கள்.+அவர்களுடைய நகரம் நாடித் தேடப்பட்ட நகரம் என்றும், கைவிடப்படாத நகரம் என்றும் அழைக்கப்படும்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மவுனமாக.”
வே.வா., “கொடிக் கம்பத்தை நாட்டுங்கள்.”