ஏசாயா 46:1-13
46 நேபோ கூனிக்குறுகுகிறது,+ பேல் அவமானத்தில் தலைகுனிகிறது.
அவற்றின் சிலைகள் மிருகங்கள்மேல் ஏற்றப்படுகின்றன.+களைத்துப்போன மிருகங்கள்மேல் வைக்கப்படுகிற சுமைபோல் அவை இருக்கின்றன.
2 சிலைகளின் சுமை தாங்காமல் மிருகங்கள் அப்படியே குனிந்துவிடுகின்றன.நேபோவாலும் பேலாலும் அவற்றை* காப்பாற்ற முடியாது.ஏனென்றால், அந்தத் தெய்வங்களே கைப்பற்றப்பட்டுக் கொண்டுபோகப்படும்.
3 “யாக்கோபின் வம்சத்தாரே, இஸ்ரவேல் ஜனங்களில் மீதியாக இருப்பவர்களே,+ கேளுங்கள்.உங்களைக் கருவிலிருந்தே காப்பாற்றியதும், பிறந்ததிலிருந்தே தூக்கிச் சுமந்ததும் நான்தான்.+
4 உங்களுக்கு வயதானாலும் உங்களைத் தூக்கிச் சுமப்பேன்.+உங்களுடைய தலைமுடி நரைத்துப்போனாலும் உங்களைத் தாங்குவேன்.
எப்போதும் போலவே உங்களைச் சுமப்பேன், தாங்குவேன், காப்பாற்றுவேன்.+
5 என்னை யாரோடு ஒப்பிடுவீர்கள்? என்னை யாருக்குச் சமமாக்குவீர்கள்?+யாராவது எனக்கு இணையாக இருக்க முடியுமா?+
6 சிலர் ஆசாரிக்குக் கூலி கொடுத்து சிலை செய்யச் சொல்கிறார்கள்.அதற்காக, பையிலிருந்து தங்கத்தைக் கொட்டுகிறார்கள்.
வெள்ளியைத் தராசில் எடைபோட்டுக் கொடுக்கிறார்கள்.
அதை வைத்து அவன் ஒரு சிலையைச் செய்கிறான்.+
அவர்கள் அதன் முன்னால் விழுந்து வணங்குகிறார்கள்.+
7 அதைத் தோளின் மேல் சுமந்துகொண்டு போகிறார்கள்.+பின்பு, அதை அதன் இடத்தில் வைக்கிறார்கள்; அது அங்கேயே நிற்கிறது.
அந்த இடத்தைவிட்டு அது நகருவதே இல்லை.+
அவர்கள் அதைப் பார்த்து சத்தமாக வேண்டுகிறார்கள், ஆனால் அது பதில் கொடுப்பதே இல்லை.அந்தச் சிலையால் யாரையுமே கஷ்டத்திலிருந்து காப்பாற்ற முடிவதில்லை.+
8 இதை ஞாபகத்தில் வையுங்கள், தைரியமாக இருங்கள்.
என் பேச்சை மீறுகிறவர்களே, இதை நெஞ்சில் வையுங்கள்.
9 பழங்காலத்திலிருந்து நடந்த விஷயங்களை நினைத்துப் பாருங்கள்.நானே கடவுள், என்னைத் தவிர வேறு யாரும் இல்லை.
நானே கடவுள், என்னைப் போல யாருமே இல்லை.+
10 நடக்கப்போகும் விஷயங்களை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன்.அதை ரொம்பக் காலத்துக்கு முன்பிருந்தே சொல்லி வருகிறேன்.+
‘நான் நினைத்தது* நிச்சயம் நிறைவேறும்.+விரும்புவதையெல்லாம் நான் செய்து முடிப்பேன்’+ என்று சொல்கிறேன்.
11 கிழக்கிலிருந்து ஒரு கழுகை நான் கூப்பிடுகிறேன்.+நான் நினைத்ததை* நிறைவேற்ற தூர தேசத்திலிருந்து ஒருவரை அழைக்கிறேன்.+
நான் சொன்னேன், அதைச் செய்வேன்.
நான் தீர்மானித்தேன், அதை நிறைவேற்றுவேன்.+
12 முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறவர்களே,*நீதியின் வழியைவிட்டுத் தூரமாகப் போனவர்களே,நான் சொல்வதைக் கேளுங்கள்.
13 நான் சீக்கிரத்தில் நீதி வழங்கப்போகிறேன்.அந்தக் காலம் நெருங்கிவிட்டது;உங்களை மீட்பதற்கு நான் தாமதிக்க மாட்டேன்.+
நான் சீயோனை மீட்பேன், இஸ்ரவேலை மகிமைப்படுத்துவேன்.”+
அடிக்குறிப்புகள்
^ அதாவது, “மிருகங்கள் சுமக்கும் சிலைகளை.”
^ வே.வா., “என் நோக்கம்.”
^ வே.வா., “என் நோக்கத்தை.”
^ வே.வா., “பிடிவாத நெஞ்சம் உள்ளவர்களே.”