1 நாளாகமம் 3:1-24
3 எப்ரோனில் தாவீதுக்குப் பிறந்த மகன்கள்:+ மூத்த மகன் அம்னோன்;+ யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாம்+ இவனைப் பெற்றாள். இரண்டாம் மகன் தானியேல்; கர்மேலைச் சேர்ந்த அபிகாயில்+ இவனைப் பெற்றாள்.
2 மூன்றாம் மகன் அப்சலோம்;+ கேசூர் ராஜாவான தல்மாயின் மகளாகிய மாக்காள் இவனைப் பெற்றாள். நான்காம் மகன் அதோனியா;+ ஆகீத் இவனைப் பெற்றாள்.
3 ஐந்தாம் மகன் செப்பத்தியா; அபித்தாள் இவனைப் பெற்றாள். ஆறாம் மகன் இத்ரேயாம்; தாவீதின் மனைவி எக்லாள் இவனைப் பெற்றாள்.
4 இந்த ஆறு மகன்களும் எப்ரோனில் அவருக்குப் பிறந்தவர்கள்; அங்கே அவர் ஏழு வருஷம் ஆறு மாதம் ஆட்சி செய்தார், 33 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+
5 எருசலேமில் அவருக்குப் பிறந்த மகன்கள்:+ சிமேயா, சோபாப், நாத்தான்,+ சாலொமோன்;+ இவர்கள் நான்கு பேரையும் அம்மியேலின் மகளான பத்சேபாள்+ பெற்றாள்.
6 அவருக்குப் பிறந்த மற்ற ஒன்பது மகன்கள்: இப்பார், எலிஷாமா, எலிப்பேலேத்,
7 நோகா, நெப்பேக், யப்பியா,
8 எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத்.
9 இவர்கள் எல்லாரும் தாவீதின் மகன்கள்; இவர்களைத் தவிர மறுமனைவிகளின் மகன்களும் இருந்தார்கள். தாமார்+ இவர்களுடைய சகோதரி.
10 சாலொமோனின் மகன் ரெகொபெயாம்;+ ரெகொபெயாமின் மகன் அபியா,+ அபியாவின் மகன் ஆசா,+ ஆசாவின் மகன் யோசபாத்,+
11 யோசபாத்தின் மகன் யோராம்,+ யோராமின் மகன் அகசியா,+ அகசியாவின் மகன் யோவாஸ்,+
12 யோவாசின் மகன் அமத்சியா,+ அமத்சியாவின் மகன் அசரியா,+ அசரியாவின் மகன் யோதாம்,+
13 யோதாமின் மகன் ஆகாஸ்,+ ஆகாசின் மகன் எசேக்கியா,+ எசேக்கியாவின் மகன் மனாசே,+
14 மனாசேயின் மகன் ஆமோன்,+ ஆமோனின் மகன் யோசியா.+
15 யோசியாவின் மகன்கள்: மூத்த மகன் யோகனான், இரண்டாம் மகன் யோயாக்கீம்,+ மூன்றாம் மகன் சிதேக்கியா,+ நான்காம் மகன் சல்லூம்.
16 யோயாக்கீமின் மகன்* எகொனியா,+ எகொனியாவின் மகன் சிதேக்கியா.
17 சிறைக்கைதி எகொனியாவின் மகன்கள்: சலாத்தியேல்,
18 மல்கீராம், பெதாயா, சேனாசார், எக்கமியா, ஒசாமா, நெதபியா.
19 பெதாயாவின் மகன்கள்: செருபாபேல், சீமேயி; செருபாபேலின்+ மகன்கள்: மெசுல்லாம், அனனியா (அவர்களுடைய சகோதரி செலோமித்);
20 அவருடைய மற்ற ஐந்து மகன்கள்: அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத்.
21 அனனியாவின் மகன்கள்: பெலத்தியா, யெசாயா; யெசாயாவின் மகன்* ரெபாயா; ரெபாயாவின் மகன்* அர்னான்; அர்னானின் மகன்* ஒபதியா; ஒபதியாவின் மகன்* செக்கனியா;
22 செக்கனியாவின் வம்சத்தார்: அவருடைய மகன் செமாயா, செமாயாவின் மகன்கள் அத்தூஸ், ஈகால், பாரியா, நெயாரியா, சாப்பாத் என மொத்தம் ஆறு பேர்.
23 நெயாரியாவின் மகன்கள்: எலியோனாய், இஸ்கியா, அசரீக்காம் ஆகிய மூன்று பேர்.
24 எலியோனாயின் மகன்கள்: ஒதாவியா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி ஆகிய ஏழு பேர்.
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “மகன்கள்.”
^ நே.மொ., “மகன்கள்.”
^ நே.மொ., “மகன்கள்.”
^ நே.மொ., “மகன்கள்.”
^ நே.மொ., “மகன்கள்.”