புலம்பல் 5:1-22
5 யெகோவாவே, எங்களுக்கு வந்த கதியை நினைத்துப் பாருங்கள்.
எங்களுக்கு வந்த அவமானத்தைக் கொஞ்சம் பாருங்கள்.+
2 எங்களுடைய சொத்து அன்னியர்களின் கைக்குப் போய்விட்டது. எங்களுடைய வீடுகளை வேறு தேசத்து ஜனங்கள் எடுத்துக்கொண்டார்கள்.+
3 நாங்கள் அப்பா இல்லாத பிள்ளைகளைப் போல ஆகிவிட்டோம்; எங்களுடைய அம்மா விதவைபோல் ஆகிவிட்டாள்.+
4 குடிக்கிற தண்ணீரைக்கூட விலை கொடுத்துதான் வாங்குகிறோம்;+ காசு கொடுத்தால்தான் விறகு கிடைக்கிறது.
5 எங்களைத் துரத்துகிறவர்கள் எங்கள் பக்கத்தில் வந்துவிட்டார்கள்; எப்போது வேண்டுமானாலும் எங்கள் கழுத்தைப் பிடித்துவிடுவார்கள்.எங்களுக்கு ஓய்வே இல்லை, நாங்கள் களைத்துப்போய்விட்டோம்.+
6 எகிப்திடமும்+ அசீரியாவிடமும்+ உணவுக்காகக் கையேந்தி நிற்கிறோம்.
7 எங்களுடைய முன்னோர்கள் இப்போது உயிரோடு இல்லாவிட்டாலும் அவர்கள் செய்த பாவத்துக்காக நாங்கள் கஷ்டப்படுகிறோம்.
8 இப்போது எங்களுடைய வேலைக்காரர்கள் எங்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுடைய கையிலிருந்து எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லை.
9 வனாந்தரத்தில் ஆட்கள் வாள்களோடு நிற்பதால் உயிரையே பணயம் வைத்துதான் உணவைப் பெறுகிறோம்.+
10 பசிக்கொடுமையால் எங்கள் உடம்பெல்லாம் அடுப்புபோல் சுடுகிறது.+
11 சீயோனில் இருக்கிற கல்யாணமான பெண்களையும் யூதாவின் நகரங்களில் இருக்கிற கல்யாணமாகாத பெண்களையும் அவர்கள் கெடுத்துவிட்டார்கள்.+
12 அதிகாரிகளுடைய கையைக் கட்டி அவர்களைத் தொங்கவிட்டார்கள்;+ பெரியோர்களை* மரியாதை இல்லாமல் நடத்தினார்கள்.+
13 வாலிபர்கள் மாவு அரைக்கும் கல்லை* தூக்கிக்கொண்டு போகிறார்கள்; சிறுவர்கள் விறகுக் கட்டுகளைச் சுமக்க முடியாமல் தடுமாறி விழுகிறார்கள்.
14 நகரவாசலில் பெரியோர்கள் யாரும் இல்லை.+ வாலிபர்கள் இசைக் கருவிகளை வாசிப்பது இல்லை.+
15 எங்கள் உள்ளத்திலிருந்த சந்தோஷமெல்லாம் போய்விட்டது. ஆடிப்பாடிக்கொண்டிருந்த நாங்கள் இப்போது அழுது புலம்புகிறோம்.+
16 எங்கள் தலையிலுள்ள கிரீடம் கீழே விழுந்துவிட்டது. எங்கள் கதி அவ்வளவுதான்! நாங்கள் பாவம் செய்துவிட்டோம்.
17 அதை நினைக்கும்போது நெஞ்சு வலிக்கிறது.+கண்கள் இருண்டுபோகின்றன.+
18 சீயோன் மலை பாழாய்க் கிடக்கிறதே!+ அங்கே குள்ளநரிகள் சுற்றித் திரிகின்றனவே!
19 யெகோவாவே, நீங்கள் என்றென்றும் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.
உங்கள் சிம்மாசனம் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்.+
20 நீங்கள் ஏன் எங்களை இவ்வளவு காலமாகக் கைவிட்டீர்கள்? எங்களை அடியோடு மறந்துவிடுவீர்களா?+
21 யெகோவாவே, மறுபடியும் எங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் உங்களிடமே திரும்பி வந்துவிடுகிறோம்.+
பழையபடி எங்களை நன்றாக வாழ வையுங்கள்.+
22 இப்போது எங்களை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளிவிட்டீர்களே!
எங்கள்மேல் இன்னமும் பயங்கர கோபத்தோடு இருக்கிறீர்களே!+