Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • பாபிலோனியர்களால் எருசலேம் சுற்றிவளைக்கப்படுகிறது (1, 2)

    • சிறைபிடிக்கப்பட்ட அரச குடும்பத்து இளைஞர்களுக்கு விசேஷப் பயிற்சி (3-5)

    • நான்கு எபிரெயர்களுக்கு விசுவாசப் பரீட்சை (6-21)

  • 2

    • நேபுகாத்நேச்சார் ராஜாவின் மனதைக் குழப்பிய கனவு (1-4)

    • ராஜாவின் கனவை எந்த ஞானியாலும் சொல்ல முடியவில்லை (5-13)

    • உதவிக்காக தானியேல் கடவுளிடம் ஜெபம் செய்கிறார் (14-18)

    • ரகசியத்தை வெளிப்படுத்தியதற்காக தானியேல் கடவுளைப் புகழ்கிறார் (19-23)

    • ராஜாவுக்கு தானியேல் கனவைச் சொல்கிறார் (24-35)

    • கனவின் அர்த்தம் விளக்கப்படுகிறது (36-45)

      • சிலையை ராஜ்யம் என்ற கல் நொறுக்குகிறது (44, 45)

    • தானியேலை ராஜா கௌரவிக்கிறான் (46-49)

  • 3

    • நேபுகாத்நேச்சார் செய்த தங்கச் சிலை (1-7)

      • சிலையை வணங்கக் கட்டளை போடப்படுகிறது (4-6)

    • கீழ்ப்படியாமல் போன மூன்று எபிரெயர்கள்மேல் குற்றச்சாட்டு (8-18)

      • ‘உங்களுடைய தெய்வங்களைக் கும்பிடப்போவதில்லை’ (18)

    • எரிகிற நெருப்புச் சூளையில் வீசப்படுகிறார்கள் (19-23)

    • நெருப்பிலிருந்து அற்புதமாகக் காப்பாற்றப்படுகிறார்கள் (24-27)

    • எபிரெயர்களின் கடவுளை ராஜா புகழ்கிறான் (28-30)

  • 4

    • கடவுளின் ராஜ்யம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நேபுகாத்நேச்சார் ராஜா ஒப்புக்கொள்கிறான் (1-3)

    • ஒரு மரத்தைப் பற்றி ராஜா கண்ட கனவு (4-18)

      • மரம் வெட்டப்படுகிறது, ஏழு காலங்கள் உருண்டோடுகிறது (16)

      • கடவுள்தான் மனிதர்களுடைய ராஜா (17)

    • தானியேல் கனவை விளக்குகிறார் (19-27)

    • ராஜாவின் வாழ்க்கையில் தரிசனத்தின் முதல் நிறைவேற்றம் (28-36)

      • ஏழு காலங்களுக்கு ராஜா பைத்தியக்காரனைப் போல் இருக்கிறான் (32, 33)

    • பரலோகத்தின் கடவுளை ராஜா போற்றிப் புகழ்கிறான் (37)

  • 5

    • பெல்ஷாத்சார் ராஜாவின் விருந்து (1-4)

    • சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகள் (5-12)

    • வார்த்தைகளை விளக்கும்படி தானியேலிடம் கேட்கப்படுகிறது (13-25)

    • விளக்கம்: பாபிலோன் வீழ்ச்சியடையும் (26-31)

  • 6

    • தானியேலுக்கு எதிராக பெர்சிய அதிகாரிகளின் சதித்திட்டம் (1-9)

    • தானியேல் எப்போதும்போல் ஜெபம் செய்கிறார் (10-15)

    • தானியேல் சிங்கக் குகையில் போடப்படுகிறார் (16-24)

    • தானியேலின் கடவுளை தரியு ராஜா புகழ்கிறான் (25-28)

  • 7

    • நான்கு மிருகங்களைப் பற்றிய தரிசனம் (1-8)

      • பெருமை பேசுகிற சிறிய கொம்பு முளைக்கிறது (8)

    • யுகம் யுகமாக வாழ்கிறவர்முன் நீதிமன்றம் கூடுகிறது (9-14)

      • மனிதகுமாரனுக்கு அரசாட்சி கொடுக்கப்படுகிறது (13, 14)

    • தரிசனத்தின் அர்த்தம் தானியேலுக்கு விளக்கப்படுகிறது (15-28)

      • நான்கு மிருகங்கள் நான்கு ராஜாக்களைக் குறிக்கின்றன (17)

      • பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைப் பெறுவார்கள் (18)

      • பத்துக் கொம்புகள், அதாவது பத்து ராஜாக்கள், தோன்றுவார்கள் (24)

  • 8

    • செம்மறியாட்டுக் கடாவையும் வெள்ளாட்டுக் கடாவையும் பற்றிய தரிசனம் (1-14)

      • சிறிய கொம்பு தன்னை உயர்த்துகிறது (9-12)

      • 2,300 மாலையும் காலையும் (14)

    • தரிசனத்தின் அர்த்தத்தை காபிரியேல் விளக்குகிறார் (15-27)

      • செம்மறியாட்டுக் கடாவையும் வெள்ளாட்டுக் கடாவையும் பற்றி விளக்கப்படுகிறது (20, 21)

      • கொடூரமான ராஜா தோன்றுகிறான் (23-25)

  • 9

    • ஜனங்களுடைய பாவங்களை ஒத்துக்கொண்டு தானியேல் செய்கிற ஜெபம் (1-19)

      • எருசலேம் 70 வருஷங்களுக்குப் பாழாய்க் கிடக்கும் (2)

    • தானியேலிடம் காபிரியேல் வருகிறார் (20-23)

    • 70 வாரங்களைப் பற்றிய தீர்க்கதரிசனம் (24-27)

      • 69 வாரங்களுக்குப் பின்பு மேசியா தோன்றுவார் (25)

      • மேசியா கொல்லப்படுவார் (26)

      • நகரமும் பரிசுத்த இடமும் அழிக்கப்படும் (26)

  • 10

    • கடவுளிடமிருந்து வந்த தூதுவர் தானியேலைச் சந்திக்கிறார் (1-21)

      • அந்தத் தேவதூதருக்கு மிகாவேல் உதவுகிறார் (13)

  • 11

    • பெர்சிய ராஜாக்களும், கிரேக்க ராஜாக்களும் (1-4)

    • தென்திசை ராஜாக்களும், வடதிசை ராஜாக்களும் (5-45)

      • வசூலிப்பவன் ஒருவன் அனுப்பப்படுகிறான் (20)

      • ஒப்பந்தத்தின் தலைவர் கொல்லப்படுகிறார் (22)

      • கோட்டைகளின் தெய்வம் மகிமைப்படுத்தப்படுகிறது (38)

      • தென்திசை ராஜா வடதிசை ராஜாவோடு சண்டைக்கு நிற்கிறான் (40)

      • கிழக்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் கலங்க வைக்கும் அறிக்கைகள் வருகின்றன (44)

  • 12

    • ‘முடிவு காலமும்’ அதற்குப் பின்பும் (1-13)

      • மிகாவேல் செயலில் இறங்குவார் (1)

      • விவேகமுள்ளவர்கள் ஒளியைப் போல் பிரகாசிப்பார்கள் (3)

      • உண்மையான அறிவு பெருகும் (4)

      • முடிவு நாளில் தன் பங்கைப் பெற தானியேல் எழுந்திருப்பார் (13)