சகரியா 9:1-17

9  ஓர் அறிவிப்பு: “யெகோவாவின் கண்கள் எல்லா மனிதர்களையும் பார்க்கின்றன.+அவருடைய பார்வை இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றின் மேலும் இருக்கிறது.அதனால், ஆதிராக் தேசத்துக்கு எதிராகவும்தமஸ்குவுக்கு எதிராகவும் யெகோவா தீர்ப்பு சொல்லியிருக்கிறார்.+   அவளுடைய* எல்லையில் இருக்கும் காமாத்துக்கு எதிராகவும்+ரொம்பவே ஞானமாக நடந்துகொள்கிற+ தீருவுக்கும்+ சீதோனுக்கும்+ எதிராகவும் தீர்ப்பு சொல்லியிருக்கிறார்.   தீரு தனக்காக ஒரு அரணைக் கட்டினாள். வெள்ளியை மண்போல் குவித்து வைத்தாள்.தங்கத்தை வீதிகளில் கிடக்கும் குப்பைபோல் சேர்த்து வைத்தாள்.+   அவளுடைய சொத்துகளை யெகோவா அழித்துவிடுவார்.அவளுடைய படையைக் கடலுக்குள் தள்ளிவிடுவார்.*+அவள் நெருப்பால் சுட்டெரிக்கப்படுவாள்.+   அதைப் பார்த்து அஸ்கலோன் பயந்து நடுங்கும்.காசா வேதனையில் துடிக்கும்.தீருவின் மேல் வைத்த நம்பிக்கை வீண்போனதால் எக்ரோனும் துக்கப்படும். காசாவின் ராஜா அழிந்துபோவான்.அஸ்கலோனில் யாருமே குடியிருக்க மாட்டார்கள்.+   அஸ்தோத்தில் கலப்பின ஜனங்கள்தான் வாழ்வார்கள்.பெலிஸ்தியர்களின் ஆணவத்தை நான் ஒழித்துக்கட்டுவேன்.+   இரத்தத்தோடு அவர்கள் சாப்பிடும் இறைச்சியை அவர்கள் வாயிலிருந்து எடுத்துப்போடுவேன்.அவர்கள் மென்றுகொண்டிருக்கும் அருவருப்பான உணவை எடுத்துப்போடுவேன்.அவர்களில் மீதியாக இருப்பவர்கள் கடவுளுடைய ஜனங்களாவார்கள்.அவர்கள் யூதாவின்+ கோத்திரத் தலைவர்கள்போல் ஆவார்கள்.எக்ரோன் ஜனங்கள் எபூசியர்களைப் போல் ஆவார்கள்.+   நான் என் வீட்டுக்கு முன்னால் கூடாரம்போட்டு அதைக் காவல் காப்பேன்.+யாரும் வந்துபோக விட மாட்டேன்.அடக்கி ஒடுக்குகிற யாரும் இனி அங்கே கால்வைக்க மாட்டார்கள்.+அதை* என் கண்களால் பார்த்திருக்கிறேன்.   சீயோன் மகளே, சந்தோஷத்தில் துள்ளு! எருசலேம் மகளே, வெற்றி முழக்கம் செய்! இதோ, உன் ராஜா உன்னிடம் வருகிறார்!+ அவர் நீதியுள்ளவர்; மீட்பு தருகிறவர்.* அவர் தாழ்மையுள்ளவர்;+ அவர் கழுதையின் மேல் ஏறிவருகிறார்.ஆம், கழுதைக்குட்டியின் மேல்* ஏறிவருகிறார்.+ 10  எப்பிராயீமிடமிருந்து போர் ரதத்தைப் பறித்துக்கொள்வேன்.எருசலேமிடமிருந்து குதிரையைப் பிடுங்கிக்கொள்வேன். வில்லை எடுத்துக்கொள்வேன். அவர் தேசங்களுக்குச் சமாதானத்தை அறிவிப்பார்.+ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரைக்கும்,ஆறு* தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் ஆட்சி செய்வார்.+ 11  பெண்ணே, உன்னுடைய கைதிகளைத் தண்ணீரில்லாத படுகுழியிலிருந்து விடுவிப்பேன்.+உன்னுடைய ஒப்பந்தத்தின் இரத்தத்தால் உன்னைக் காப்பாற்றுவேன். 12  நம்பிக்கையோடு இருக்கும் கைதிகளே, கோட்டைக்குத் திரும்பி வாருங்கள்.+ இன்று நான் உன்னிடம்,‘பெண்ணே, உனக்கு இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தைக் கொடுப்பேன்.+ 13  யூதாவை என் வில்லாக வளைப்பேன். எப்பிராயீமை அம்பாக எறிவேன்.சீயோனே, கிரேக்கு தேசத்து ஜனங்களுக்கு எதிராகஉன் ஜனங்களை நான் எழுப்புவேன்.உன்னைப் படைவீரரின் வாளைப் போலாக்குவேன்’ என்று சொல்கிறேன். 14  யெகோவா அவர்களோடு இருப்பது தெளிவாகத் தெரியும்.அவருடைய அம்பு மின்னலாகப் பாயும். உன்னதப் பேரரசராகிய யெகோவா ஊதுகொம்பை ஊதுவார்.+ தெற்கிலிருந்து வீசும் புயல்காற்றைப் போலப் புறப்பட்டுப் போவார். 15  பரலோகப் படைகளின் யெகோவா அவர்களைப் பாதுகாப்பார்.கவண்கற்களால் தாக்கும் எதிரிகளை அவர்கள் தோற்கடிப்பார்கள்.+ திராட்சமது குடித்ததுபோல் சந்தோஷத்தில் மிதப்பார்கள்.கிண்ணம் நிறைந்திருப்பது போல அவர்கள் நெஞ்சம் நிறைந்திருக்கும்.பலிபீடத்தின் மூலைகள்+ நிரம்பி வழிவது போல அவர்கள் இதயம் நிரம்பி வழியும். 16  அவர்களுடைய கடவுளாகிய யெகோவா அந்த நாளில் அவர்களைக் காப்பாற்றுவார்.மேய்ப்பன் மந்தையைக் காப்பது போல அவர்களைக் காப்பார்.+கிரீடத்தில் ரத்தினங்கள் ஜொலிப்பது போல அவருடைய தேசத்தில் அவர்கள் ஜொலிப்பார்கள்.+ 17  அவருக்குத்தான் எவ்வளவு நல்ல மனது!+அவருடைய மகிமையே மகிமை!* தானியம் வாலிபனைப் பலமாக்கும்.புதிய திராட்சமது கன்னிப் பெண்ணைப் பொலிவாக்கும்.”+

அடிக்குறிப்புகள்

ஒருவேளை, “ஆதிராக் தேசத்துடைய” அல்லது “தமஸ்குவுடைய.”
அல்லது, “கடலில் வீழ்த்துவார்.”
அநேகமாக, அவருடைய ஜனங்கள் பட்ட வேதனையைக் குறிக்கலாம்.
நே.மொ., “பெட்டைக் கழுதைக்குப் பிறந்த ஆண்குட்டியின் மேல்.”
வே.வா., “வெற்றி பெற்றவர்; காப்பாற்றப்பட்டவர்.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆறு.”
வே.வா., “அழகே அழகு!”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா