ஏசாயா 6:1-13

6  உசியா ராஜா இறந்துபோன+ வருஷம் அது. யெகோவா மிகவும் உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.+ அவருடைய நீளமான அங்கி ஆலயம் முழுவதும் பரவியிருந்தது.  சேராபீன்கள் அவரைச் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. இரண்டு சிறகுகளால் முகத்தையும் இரண்டு சிறகுகளால் பாதத்தையும் மூடியிருந்தார்கள். மற்ற இரண்டு சிறகுகளால் பறந்தார்கள்.   அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “பரலோகப் படைகளின் யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்.+ பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” என்று சத்தமாகச் சொன்னார்கள்.  அந்தச் சத்தத்தில் வாசல்களின் நிலைக்கால்கள் அதிர்ந்தன; ஆலயம் புகையால் நிரம்பியது.+   அப்போது நான், “ஐயோ, என் கதி அவ்வளவுதான்! நான் செத்தவனைப் போல ஆகிவிட்டேன்.ஏனென்றால், ராஜாவாகிய பரலோகப் படைகளின் யெகோவாவைப் பார்த்துவிட்டேன்.அதுமட்டுமல்ல, என் உதடுகள் அசுத்தமாக இருக்கின்றன.+அசுத்தமான உதடுகள் உள்ள ஜனங்களோடு நான் வாழ்கிறேன்” என்று சொன்னேன்.  அப்போது, சேராபீன்களில் ஒருவர் என்னிடம் பறந்து வந்தார்; அவர் பலிபீடத்திலிருந்து நெருப்புத் தணல்+ ஒன்றை இடுக்கியில் எடுத்துக்கொண்டு வந்தார்.+  அதை என் வாயின் மேல் வைத்து, “இது உன் உதடுகளைத் தொட்டுவிட்டது. அதனால் உன் குற்றம் நீங்கிவிட்டது,உன் பாவம் மன்னிக்கப்பட்டது” என்று சொன்னார்.  பின்பு யெகோவா, “நான் யாரை அனுப்புவேன், எங்களுக்காக யார் போவார்கள்?”+ என்று சொல்வதைக் கேட்டேன். அதற்கு நான், “இதோ, நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்!”+ என்று சொன்னேன்.   அப்போது அவர், “நீ புறப்பட்டுப் போய் இந்த ஜனங்களிடம், ‘நீங்கள் காதால் கேட்டுக்கொண்டே இருந்தாலும்,புரிந்துகொள்ள மாட்டீர்கள்.நீங்கள் கண்ணால் பார்த்துக்கொண்டே இருந்தாலும்,எதையும் தெரிந்துகொள்ள* மாட்டீர்கள்’+ என்று சொல். 10  இந்த ஜனங்கள் கண்களால் பார்க்காமலும்,காதுகளால் கேட்காமலும்,+இதயத்தால் உணராமலும்,+என்னிடம் திரும்பி வந்து குணமடையாமலும் இருப்பதற்காகஇவர்களுடைய இதயத்தை இறுகிப்போகச் செய்.இவர்களுடைய காதுகளை மந்தமாக்கு.இவர்களுடைய கண்களை மூடிவிடு”+ என்று சொன்னார். 11  அதற்கு நான், “இன்னும் எவ்வளவு நாட்களுக்கு, யெகோவாவே?” என்று கேட்டேன். அப்போது அவர், “நகரங்கள் தரைமட்டமாகி குடிமக்கள் இல்லாமல் போகும் வரைக்கும்,வீடுகளில் ஆட்கள் இல்லாமல் போகும் வரைக்கும்,தேசம் அழிந்து பாழாகிப் போகும் வரைக்கும்,+ 12  யெகோவாவாகிய நான் ஜனங்களைத் தொலைதூரத்துக்குத் துரத்திவிடும் வரைக்கும்,+தேசத்தின் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடிக் கிடக்கும் வரைக்கும்” என்று சொன்னார். 13  அதோடு, “தேசத்தில் பத்திலொரு பாகம் மட்டும் மீதியாக இருக்கும். அதுவும் நெருப்பில் சுட்டெரிக்கப்படும். ஒரு பெரிய மரமோ கருவாலி மரமோ வெட்டிச் சாய்க்கப்பட்ட பின்பு அடிமரம் மட்டும் மீந்திருப்பது போல அது இருக்கும். அதன் அடிமரத்திலிருந்து பரிசுத்தமான ஒரு தளிர்* துளிர்க்கும்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “எந்த அறிவும் பெற.”
வே.வா., “சந்ததி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா