ஏசாயா 10:1-34

10  கேடுண்டாக்கும் விதிமுறைகளைக் கொடுக்கிறவர்களுக்கும்,ஜனங்களை ஒடுக்குகிற சட்டங்களை எழுதிக்கொண்டே இருக்கிறவர்களுக்கும் ஐயோ கேடு!+   அவர்கள் ஏழைகளின் வழக்குகளை விசாரிப்பதில்லை.எளியவர்களுக்கு நியாயம் வழங்குவதில்லை.+விதவைகளைச் சூறையாடுகிறார்கள்.அப்பா இல்லாத பிள்ளைகளை* கொள்ளையடிக்கிறார்கள்.+   தண்டனைத் தீர்ப்பின் நாளில் நீங்கள் என்ன செய்வீர்கள்?+தூர தேசத்திலிருந்து அழிவு வரும்போது என்ன செய்வீர்கள்?+ உதவிக்காக யாரிடம் ஓடுவீர்கள்?+உங்களுடைய சொத்தை* எங்கே விட்டுவிட்டுப் போவீர்கள்?   கைதிகளோடு கைதிகளாகத் தலைகுனிந்துதான் போவீர்கள்.அல்லது, பிணங்களோடு பிணங்களாகச் செத்துதான் கிடப்பீர்கள். உங்களுடைய பாவங்களினால் அவருடைய கோபம் தணியாமல் இருக்கிறது.அவருடைய கை ஓங்கியபடியே இருக்கிறது.+   அவர் உங்களிடம், “இதோ, அசீரியன் வருகிறான்.+என் கோபத்தைக் காட்ட நான் பயன்படுத்தும் பிரம்பு அவன்தான்.தண்டனை கொடுக்க நான் பயன்படுத்தும் தடி அவன்தான்.+   என்னைவிட்டு விலகிய* தேசத்துக்கு எதிராகவும்,+என் கோபத்தைக் கிளறிவிட்ட ஜனங்களுக்கு எதிராகவும் நான் அவனை அனுப்புவேன்.தேசத்தை முழுமையாகச் சூறையாடவும் கைப்பற்றவும் அவனுக்குக் கட்டளை கொடுப்பேன்.தெருவில் கிடக்கும் சேற்றைப் போல அவர்களை மிதித்துப் போடவும் கட்டளை கொடுப்பேன்.+   அவனோ வேறு விதமாக நினைக்கிறான்.வேறு விதமாகத் திட்டம் போடுகிறான்.எல்லாரையும் ஒழித்துக்கட்ட நினைக்கிறான்.சில தேசங்களை மட்டுமல்ல, பல தேசங்களை அழிக்கத் திட்டம் போடுகிறான்.   அவன் பெருமையாகப் பேசுகிறான்.‘என் அதிபதிகள் எல்லாரும் ராஜாக்கள்தானே?+   கல்னோ நகரம்+ கர்கேமிசைப்+ போன்றதுதானே? காமாத் நகரம்+ அர்பாத்தைப்+ போன்றதுதானே? சமாரியா நகரம்+ தமஸ்குவைப்+ போன்றதுதானே? 10  ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்கிய ராஜ்யங்களை நான் பிடித்திருக்கிறேனே.அங்கெல்லாம் இருந்ததைவிடவா எருசலேமிலும் சமாரியாவிலும் சிலைகள் இருக்கின்றன?+ 11  சமாரியாவையும் அங்கு இருக்கிற ஒன்றுக்கும் உதவாத சிலைகளையும் அழிக்கப்போவது போலவே,எருசலேமையும் அங்கு இருக்கிற சிலைகளையும் அழிக்க மாட்டேனா?’+ என்று கேட்கிறான். 12  யெகோவா சீயோன் மலைக்கும் எருசலேமுக்கும் செய்ய வேண்டியதையெல்லாம் செய்த பின்பு, அசீரிய ராஜாவைத் தண்டிப்பார். அவனுடைய நெஞ்சத்திலுள்ள ஆணவத்துக்கும் அவனுடைய பார்வையிலுள்ள அகம்பாவத்துக்கும்+ முடிவுகட்டுவார். 13  ஏனென்றால் அவன்,‘நான் நினைப்பதை என்னுடைய பலத்தால் சாதிப்பேன்.நான் ஞானி, என்னுடைய ஞானத்தால் இதைச் செய்வேன். தேசங்களின் எல்லைகளை ஒழிப்பேன்.+ஜனங்களுடைய சொத்துகளைக் கைப்பற்றுவேன்.+மாவீரனாக அவர்களைத் தோற்கடிப்பேன்.+ 14  குருவியின் கூட்டுக்குள் இருப்பதை ஒருவன் சுலபமாகக் கைவிட்டு எடுத்துக்கொள்வது போல,ஜனங்களின் சொத்துகளை நான் சுலபமாக எடுத்துக்கொள்வேன்.கூட்டில் விடப்பட்டிருக்கிற முட்டைகளை ஒருவன் வாரிக்கொள்வது போல,பூமியில் உள்ள தேசங்களையெல்லாம் நான் வாரிக்கொள்வேன். சிறகுகளை அடிக்கவோ வாயைத் திறக்கவோ கீச்சென்று கத்தவோ எந்த ஜீவனாலும் முடியாது’ என்கிறான்” என்று சொல்கிறார். 15  வெட்டுகிறவனைவிட கோடாலி தன்னைப் பெரிதாக நினைக்குமா? அறுக்கிறவனைவிட ரம்பம் தன்னை உயர்வாக நினைக்குமா? ஒருவன் ஒரு தடியைப்+ பிடித்து ஆட்டுவதுபோல் அந்தத் தடி அவனைப் பிடித்து ஆட்ட முடியுமா? ஒருவன் ஒரு கோலைத் தூக்குவதுபோல் அந்தக் கோல் அவனைத் தூக்க முடியுமா? 16  உண்மை எஜமானாகிய பரலோகப் படைகளின் யெகோவா,அசீரியாவின் பலசாலிகளைப் பலவீனமாக்குவார்.+அதன் மகிமையைத் தீயில் பொசுக்கிவிடுவார்.+ 17  இஸ்ரவேலுக்கு ஒளியாகவும்+ பரிசுத்தமான கடவுளாகவும் இருப்பவர்நெருப்பாகவும் தீப்பிழம்பாகவும் மாறுவார்.+அசீரியாவின் களைகளையும் முட்புதர்களையும் ஒரே நாளில் சுட்டெரித்துவிடுவார். 18  அவனுடைய அழகான காடுகளையும் பழத் தோட்டங்களையும் அடியோடு அழித்துவிடுவார்.ஒரு நோயாளி உருக்குலைந்து போவது போல அவன் உருக்குலைந்து போவான்.+ 19  அவனுடைய காட்டில் கொஞ்சம் மரங்களே மிஞ்சியிருக்கும்.ஒரு சிறுவனால்கூட அவற்றை எண்ணிவிட முடியும். 20  அந்த நாளில், இஸ்ரவேலில் மீதியாக இருப்பவர்களும்,யாக்கோபின் வம்சத்தாரில் உயிர்தப்பியவர்களும்தங்களைத் தாக்கியவனை இனியும் நம்பியிருக்க மாட்டார்கள்.+யெகோவாவையே நம்பியிருப்பார்கள்.இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே உண்மை மனதோடு சார்ந்திருப்பார்கள். 21  சிலர் மட்டுமே திரும்பி வருவார்கள்.யாக்கோபின் வம்சத்தாரில் சிலர் மட்டுமே பலம்படைத்த கடவுளிடம் திரும்பி வருவார்கள்.+ 22  இஸ்ரவேலே, உன் ஜனங்கள் கடற்கரை மணலைப் போல ஏராளமாக இருந்தாலும்,சிலர் மட்டுமே திரும்பி வருவார்கள்.+உன் ஜனங்களை அழிக்க கடவுள் தீர்மானித்துவிட்டார்.+ அவருடைய தண்டனையிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது.+ 23  உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா தீர்மானித்தபடியே,தேசம் முழுவதும் அழிக்கப்படும்.+ 24  அதனால், உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா உங்களிடம், “சீயோனில் குடியிருக்கிற என் ஜனங்களே, அசீரியனை நினைத்துப் பயப்படாதீர்கள். எகிப்தியர்கள் செய்ததுபோல்+ அவன் உங்களைத் தடியால் அடித்து+ உங்களுக்கு எதிராகக் கோலை ஓங்கினான். 25  சீக்கிரத்திலேயே என் தண்டனைத் தீர்ப்பு நிறைவேறி முடியும். என் கோபம் அவன்மேல் திரும்பும், நான் அவனை அழிப்பேன்.+ 26  பரலோகப் படைகளின் யெகோவா அவனுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார்.+ ஒரேபின் கற்பாறை பக்கத்தில் மீதியானியர்களை வீழ்த்தியது போல அவனை வீழ்த்துவார்.+ எகிப்தியர்களை அழிக்க கடலின் மேல் கோலை ஓங்கியதுபோல்+ அவன்மேல் கோலை ஓங்குவார். 27  உன் தோளின் மேல் அவன் வைத்த சுமையை அந்த நாளில் எடுத்துப் போடுவேன்.+உன் கழுத்தின் மேல் அவன் வைத்த நுகத்தடியை நீக்கிவிடுவேன்.+எண்ணெயால்* அந்த நுகத்தடியை உடைத்தெறிவேன்”+ என்று சொல்கிறார். 28  அவன் ஆயாத் நகரத்துக்கு+ வந்திருக்கிறான்.மிக்ரோனைக் கடந்துவிட்டான்.மிக்மாஷில்+ தன்னுடைய பொருள்களை வைத்திருக்கிறான். 29  அவன் ஆற்றுத்துறையை* தாண்டிவிட்டான்.ராத்திரியிலே கெபாவில்+ தங்குகிறான். ராமாவிலுள்ள ஜனங்கள் பயந்து நடுங்குகிறார்கள்,சவுலின் ஊரான கிபியாவிலுள்ள+ மக்கள் ஓடிவிட்டார்கள்.+ 30  காலீம் மக்களே, சத்தமாக அலறுங்கள்! லாயீஷ் மக்களே, கவனியுங்கள்! ஆனதோத்+ மக்களே, நீங்களும் கவனியுங்கள்! 31  மத்மேனாவின் மக்கள் ஓட்டம் பிடித்தார்கள். கேபிம் குடிமக்கள் பாதுகாப்பைத் தேடிப்போனார்கள். 32  அவன் இன்று நோபு நகரத்தில்+ தங்குவான். அவன் சீயோன் மகளுடைய மலையையும்,எருசலேம் குன்றையும் பார்த்துக் கை நீட்டி மிரட்டுகிறான். 33  இதோ, உண்மை எஜமானாகிய பரலோகப் படைகளின் யெகோவா கிளைகளை வெட்டுகிறார்.அவை பயங்கர சத்தத்தோடு கீழே விழுகின்றன.+மிக உயரமான மரங்கள்கூட வெட்டப்படுகின்றன,உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள் சாய்க்கப்படுகின்றன. 34  காட்டிலுள்ள புதர்ச்செடிகளை அவர் கோடாலியால் வெட்டிப்போடுகிறார்.ஒரு மாவீரனால் லீபனோன் அழியும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அநாதைகளை.”
வே.வா., “மகிமையை.”
வே.வா., “விசுவாசதுரோகம் செய்த.”
எரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை அல்லது ராஜாக்களை அபிஷேகம் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை இது குறிக்கலாம்.
ஜனங்கள் ஆற்றைக் கடக்கும் ஆழமில்லாத பகுதி.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா