எரேமியா 6:1-30

6  பென்யமீன் ஜனங்களே, எருசலேமிலிருந்து தப்பித்து ஓடுங்கள். தெக்கோவா+ ஊரில் ஊதுகொம்பை ஊதுங்கள்!+பெத்-கேரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்! ஏனென்றால், வடக்கிலிருந்து பேராபத்தும் பேரழிவும் வந்துகொண்டிருக்கிறது.+   செல்லமாக வளர்க்கப்பட்ட ஓர் அழகான பெண்ணைப் போல் சீயோன் மகள் இருக்கிறாள்.+   மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தைகளோடு வருவார்கள். அவளைச் சுற்றிலும் கூடாரம் போட்டுத் தங்குவார்கள்.+அவரவர் மந்தைகளை அங்கே மேய்ப்பார்கள்.+   “அவளுக்கு எதிராகப் போர் செய்யத் தயாராகுங்கள்! வாருங்கள், உச்சி வேளையில் அவளைத் தாக்கலாம்!” “ஐயோ, பொழுது சாய்கிறதே,இருட்டாகப் போகிறதே!”   “வாருங்கள், ராத்திரி நேரத்தில் அவளைத் தாக்கலாம்.அவளுடைய கோட்டைகளைத் தரைமட்டமாக்கலாம்!”+   பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “மரங்களை வெட்டுங்கள், முற்றுகைக்காக எருசலேமைச் சுற்றிலும் மண்மேடுகளை எழுப்புங்கள்.+ அங்கே நடப்பதெல்லாம் கொடுமைதான்.+எருசலேம் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.   நிலத்தடி தொட்டி எப்படித் தண்ணீரைக் குளுமையாகத் தேக்கி வைக்குமோஅப்படியே அவள் தன் மனதில் அக்கிரமத்தைத் தேக்கி வைத்திருக்கிறாள். வன்முறையின் சத்தமும் அழிவின் சத்தமும்தான் அங்கே கேட்கிறது.+எங்கு பார்த்தாலும் நோய்! எங்கு பார்த்தாலும் நாசம்!   எருசலேமே, எச்சரிக்கையைக் கேள்! இல்லாவிட்டால் அருவருப்போடு உன்னைவிட்டு விலகிப்போவேன்.+உன் தேசத்தைப் பாழாக்கி, வெறுமையாக்குவேன்.”+   பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “திராட்சைக் கொடியில் கடைசியாக மிஞ்சியிருக்கிற பழங்களைப் போல இஸ்ரவேலர்களில் சிலர் மிஞ்சியிருக்கிறார்கள். திராட்சைப் பழங்களைக் கூடைகளில் சேகரிப்பது போல நீ மறுபடியும் அவர்களைச் சேகரிக்க வேண்டும்.” 10  “நான் யாரிடம் பேசுவது? யாரை எச்சரிப்பது? நான் சொல்வதை யார் கேட்பார்கள்? அவர்களுடைய காதுகள் அடைக்கப்பட்டிருக்கின்றன; அவர்களால் எப்படிக் கவனித்துக் கேட்க முடியும்?+ யெகோவாவின் வார்த்தையை அவர்கள் கேலி செய்கிறார்கள்.+அதைக் கேட்க அவர்கள் விரும்புவதே இல்லை. 11  அதனால், யெகோவாவைப் போலவே எனக்கும் கோபம் பற்றிக்கொண்டு வருகிறது.என்னால் அதை அடக்கவே முடியவில்லை.”+ “தெருவில் இருக்கிற பிள்ளைகள்மேலும்,+கூடியிருக்கிற வாலிபர்கள்மேலும் கோபத்தைக் கொட்டு. கணவர்கள், மனைவிகள், மூத்தவர்கள்,வயதானவர்கள் எல்லாருமே கைப்பற்றப்படுவார்கள்.+ 12  அவர்களுடைய வீடுகளையும் தோட்டங்களையும் மனைவிகளையும்எதிரிகள் அபகரித்துக்கொள்வார்கள்.+ தேசத்திலுள்ள எல்லா ஜனங்களையும் நான் தண்டிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார். 13  “சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+ 14  சமாதானமே இல்லாதபோது,‘சமாதானம் இருக்கிறது! சமாதானம் இருக்கிறது!’+ என்று சொல்லி, என் ஜனங்களுடைய காயங்களை* மேலோட்டமாகக் குணப்படுத்தப் பார்க்கிறார்கள். 15  அவர்கள் செய்த அருவருப்பான காரியங்களை நினைத்துக் கொஞ்சமாவது வெட்கப்படுகிறார்களா? இல்லவே இல்லை! வெட்கம் என்றால் என்னவென்றுகூட அவர்களுக்குத் தெரியாது!+ அதனால், விழுந்துவிட்டவர்களோடு அவர்களும் விழுவார்கள். நான் தண்டிக்கும்போது அவர்கள் தடுக்கி விழுவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். 16  “சாலை சந்திப்புகளில் நின்று பாருங்கள். உங்கள் முன்னோர்கள் நடந்த பாதைகளை* பற்றி விசாரியுங்கள். நல்ல பாதை எதுவென்று கேட்டு அதில் நடங்கள்.+அப்போது, உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்” என்று யெகோவா சொல்கிறார்.ஆனால் அவர்கள், “அந்தப் பாதையில் போக மாட்டோம்” என்று சொல்கிறார்கள்.+ 17  “நான் காவல்காரர்களை நியமித்தேன்.+ஜனங்களிடம் அவர்கள், ‘ஊதுகொம்பின் சத்தத்தைக் கவனித்துக் கேளுங்கள்!’+ என்று சொன்னார்கள்.” ஆனால் ஜனங்கள், “நாங்கள் கேட்க மாட்டோம்” என்று சொன்னார்கள்.+ 18  “அதனால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்று சொல்கிறேன். தேசங்களே, கேளுங்கள்.ஜனங்களே, தெரிந்துகொள்ளுங்கள். 19  பூமியெங்கும் உள்ளவர்களே, கேளுங்கள்! இந்த ஜனங்கள் என் பேச்சைக் கேட்காமல்என் சட்டத்தை* அசட்டை பண்ணினார்கள்.கெட்ட யோசனைகளின்படி நடந்ததால் அவர்களை நான் தண்டிக்கப்போகிறேன்.”+ 20  “நீங்கள் சேபாவிலிருந்து சாம்பிராணியைக் கொண்டுவந்தாலும் சரி,தூர தேசத்திலிருந்து வசம்பைக் கொண்டுவந்தாலும் சரி, எனக்கு என்ன? உங்களுடைய தகன பலிகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.நீங்கள் எந்தப் பலியைச் செலுத்தினாலும் நான் சந்தோஷப்பட மாட்டேன்.”+ 21  யெகோவா சொல்வது இதுதான்: “நான் இந்த ஜனங்களுக்கு முன்பாக முட்டுக்கட்டைகளை வைப்பேன்.அவர்கள் தடுக்கி விழுவார்கள்.தகப்பன்களும் சரி, மகன்களும் சரி,அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களும் சரி, அவர்களுடைய நண்பர்களும் சரி,எல்லாரும் ஒட்டுமொத்தமாக அழிந்துபோவார்கள்.”+ 22  யெகோவா சொல்வது இதுதான்: “வடக்கு தேசத்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வருகிறது.பூமியின் தொலைதூரத்திலிருந்து மாபெரும் தேசம் எழும்பி வருகிறது.+ 23  அந்த ஜனங்கள் வில்லையும் ஈட்டியையும் எடுத்துக்கொண்டு வருவார்கள். அவர்கள் ஈவிரக்கமே இல்லாத கொடூரர்கள். அவர்களுடைய சத்தம் கடலின் இரைச்சலைப் போல இருக்கும்.அவர்கள் குதிரைகளின் மேல் வருவார்கள்.+ சீயோன் மகளே, அவர்கள் போர்வீரர்களைப் போல அணிவகுத்து வந்து உன்னைத் தாக்குவார்கள்.” 24  அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து நம் உடம்பில் தெம்பே இல்லை.+பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப் போலவேதனையில் துடிக்கிறோம்.+ 25  வயல்வெளிக்குப் போகாதீர்கள்.சாலையில் நடக்காதீர்கள்.ஏனென்றால், எதிரி வாளோடு அலைந்துகொண்டிருக்கிறான்.எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆபத்துதான். 26  என் ஜனங்களே, துக்கத் துணி*+ போட்டுக்கொண்டு சாம்பலில் புரளுங்கள்.ஒரே மகனைப் பறிகொடுத்தது போல அழுது புலம்புங்கள்.+ ஏனென்றால், எதிரி திடீரென்று வந்து நம்மை அழித்துவிடுவான்.+ 27  “வெள்ளியைப் புடமிடுகிறவனைப் போல நான் உன்னை* ஆக்கியிருக்கிறேன்.நீ என் ஜனங்களைப் புடமிட வேண்டும்.அவர்களை முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும்.அவர்களுடைய வழிகளை உற்றுக் கவனிக்க வேண்டும். 28  அவர்கள் எல்லாரும் பயங்கரமான பிடிவாதக்காரர்கள்.+மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்கள்.+ அவர்கள் செம்பையும் இரும்பையும் போல இருக்கிறார்கள்.எல்லாருமே சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள். 29  அவர்களைப் புடமிடுவதற்கு என்னதான் முயற்சி செய்தாலும் புடமிடும் கருவிதான் எரிந்துபோகிறது,* நெருப்பிலிருந்து ஈயம்தான் வருகிறது. அவர்களைப் புடமிடுவதே வீண்.+கெட்டவர்களைப் பிரித்தெடுக்கவே முடிவதில்லை.+ 30  தள்ளுபடியான* வெள்ளி என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள்.ஏனென்றால், யெகோவா அவர்களைத் தள்ளிவிட்டார்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “முறிவுகளை.”
நே.மொ., “பழங்காலப் பாதைகளை.”
வே.வா., “அறிவுரையை.”
அதாவது, “எரேமியாவை.”
நே.மொ., “துருத்திகள்தான் எரிந்துபோகின்றன.”
அதாவது, “வேண்டாத.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா