விதி
விதி
சொற்பொருள் விளக்கம்: தவிர்க்கமுடியாத மற்றும் பெரும்பாலும் கேடான விளைவு. விதி கோட்பாடு, எல்லாச் சம்பவங்களும் தெய்வீகச் சித்தத்தால் அல்லது மனிதனைப் பார்க்கிலும் பெரிய ஏதோ சக்தியால் தீர்மானிக்கப்படுகிறதென்ற நம்பிக்கையாகும், ஒவ்வொரு சம்பவமும் அது நடப்பதுபோல் நடந்தேறவேண்டும் ஏனெனில் அது முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கிறதென்பதாகும். இது பைபிள் சொல்லோ போதகமோ அல்ல.
ஒவ்வொருவருக்கும் “இறக்க ஒரு காலம்” முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ளதா?
இந்த நம்பிக்கை கிரேக்கருக்குள்ளும் ரோமருக்குள்ளும் வழங்கிவந்தது. புறமத கிரேக்கப் புராண இலக்கியத்தின்படி, இந்த விதிகள் வாழ்க்கை நூலை நூற்று, அதன் நீளத்தைத் தீர்மானித்து அதை வெட்டும் மூன்று தெய்வதைகள்.
பிரசங்கி 3:1, 2 “இறக்க ஒரு காலம்,” என்பதைக் குறித்துப் பேசுகிறது. ஆனால், இது அந்தத் தனியாளுக்கு முன்பே தீர்மானித்துத் திட்டம்செய்து வைத்துள்ள ஒரு கணநேரம் அல்லவெனக் காட்டுவதாய், பிரசங்கி 7:17 பின்வருமாறு அறிவுரை கூறுகிறது: “மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்கு முன்னே நீ ஏன் சாகவேண்டும்?” நீதிமொழிகள் 10:27 சொல்வதாவது: “துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.” சங்கீதம் 55:23 மேலும் கூட்டுவதாவது: “இரத்தப் பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்.” அப்படியானால் பிரசங்கி 3:1, 2 குறிப்பதென்ன? அது வெறுமென இந்த அபூரண காரிய ஒழுங்குமுறையில் உயிர் மற்றும் மரணத்தின் தொடர்ந்த சுழற்சியைத் தர்க்கித்துப் பேசுகிறது. ஆட்கள் பிறக்கும் ஒரு காலமுண்டு அவர்கள் இறக்கும் ஒரு காலமும் உண்டு—பொதுவாய் அது 70 அல்லது 80 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாயில்லை, ஆனால் சில சமயங்களில் சீக்கிரமாயும் சில சமயங்களில் பிந்தியும் இறக்கிறார்கள்.—சங். 90:10; பிரசங்கி 9:11-ஐயும் பாருங்கள்.
ஒவ்வொருவருடைய மரணத்தின் கணநேரமும் முறையும் அவர்கள் பிறப்பின் சமயத்தில் அல்லது அதற்கு முன்பு ஏற்கெனவே முடிவுசெய்திருந்தால், அபாயகரமான சூழ்நிலைமைகளைத் தவிர்ப்பதற்கோ ஒருவர் தன் சுக ஆரோக்கியத்தைக் கவனிப்பதற்கோ தேவையிராது, மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உயிர் இழப்பு வீதங்களை மாற்றாது. ஆனால் போரின்போது போர்க்களம், போர்முனையிலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் ஒருவருடைய வீட்டைப்போல் அவ்வளவு பாதுகாப்பாயிருக்குமென்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் உங்கள் சுகத்தைக் கவனிக்கிறீர்களா அல்லது உங்கள் பிள்ளைகளை வைத்தியரிடம் கொண்டுசெல்கிறீர்களா? புகைப்பழக்கமுள்ளவர்கள் ஏன் புகைப்பழக்கமில்லாதவர்களைப் பார்க்கிலும், சராசரி மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் இளைஞராகவே மரிக்கின்றனர்? ஊர்தியில் செல்வோர் இருக்கை வார்ப்பட்டையை அணிந்திருக்கையிலும் ஊர்தி ஓட்டுபவர்கள் போக்குவரத்து சட்டங்களுக்குக் கீழ்ப்படிகையிலும் உயிருக்கு
ஆபத்தான விபத்துகள் ஏன் குறைவாயிருக்கின்றன? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பயனுடையதென்பது தெளிவாயிருக்கிறது.நடக்கும் ஒவ்வொன்றும் “கடவுளுடைய சித்தம்”தானா?
2 பேதுரு 3:9: “ஆண்டவர் (யெகோவா) . . . ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பியே உங்கள் விஷயத்தில் நீடிய பொறுமை பாராட்டுகிறார்.” (தி.மொ.) (ஆனால் எல்லாரும் அவருடைய பொறுமைக்குச் சாதகமாய்ப் பிரதிபலிப்பதில்லை. சிலர் மனந்திரும்பத் தவறினால் தெளிவாகவே, இது “கடவுளுடைய சித்தமல்ல.” வெளிப்படுத்துதல் 9:20, 21-ஐ ஒத்துப்பாருங்கள்.)
எரே. 7:23-26: “என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் [இஸ்ரவேலருக்குச்] சொல்லிக் கட்டளையிட்டேன். அவர்களோ அதைக் கேளாமலும், . . . போனார்கள். . . . நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் தினந்தினம் உங்களண்டைக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவர்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி”னார்கள். (இஸ்ரவேலில் நடந்துகொண்டிருந்த கேடு “கடவுளுடைய சித்தம்” அல்லவென்பதில் சந்தேகமில்லை.)
மாற்கு 3:35: “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான்.” (எவரும் செய்த எல்லாம் “கடவுளுடைய சித்தமாக” இருந்திருந்தால், எல்லாரும் அங்கே இயேசு விவரித்த வகையான உறவை இயேசுவுடன் அனுபவித்து மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் அவர் சிலரிடம்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்,” என்று சொன்னார்.—யோவான் 8:44.)
நடைபெறும் விளக்கமுடியாதவையென தோன்றும் பல காரியங்களுக்குக் காரணமென்ன?
பிர. 9:11: “சமயமும் எதிர்பார்க்காத சம்பவமும் [“தற்செயலும்,” NE, RS] எல்லாருக்கும் நேரிடுகிறது,” NW. (இவ்வாறு, ஓர் ஆளின் வாழ்க்கையை முன்காணும் எதன் காரணமாயுமல்ல, ஆனால் தற்செயலினால் அவன் அழிவுண்டாக்கும் சந்தர்ப்ப நிலைமைகளுக்காளாகலாம்.)
மனிதர் தாங்களும் மனிதவர்க்கத்தினரான மற்றவர்களும் அனுபவித்தத் துன்பங்கள் பெரும்பான்மையானவற்றிற்குத் தாங்கள் பொறுப்புடையோரா?
ரோமர் 5:12: “ஒரே மனுஷனால் [ஆதாமால்] பாவமும் பாவத்தினால் மரணமும் உலகத்தில் வந்ததுபோலவும் எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் பரவினது.” (தி.மொ.) (தவறுசெய்வதை நோக்கிய மனச்சாய்வுகள் உட்பட, அபூரணங்களை நாமெல்லாரும் ஆதாமிலிருந்து சுதந்தரித்தோம்.)
பிர. 8:9: “தனக்குக் கேடுண்டாக மனிதன் மனிதனை ஆளுகிறான்,” NW.
நீதி. 13:1: “தகப்பனுடைய சிட்சை இருக்கையில் மகன் ஞானமுள்ளவனாயிருக்கிறான்.” (NW) (பெற்றோர் செய்வது அவர்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையின்பேரில் பெரும் பாதிப்பைக் கொள்கிறது.)
கலா. 6:7: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (மேலும் நீதிமொழிகள் 11:17; 23:29, 30; 29:15; 1 கொரிந்தியர் 6:18)
மனிதவர்க்கத்துக்கு ஆபத்தை உண்டுபண்ணும் மனிதனுக்கு-மிஞ்சிய ஆற்றல்வாய்ந்தவர்களும் இருக்கின்றனரா?
வெளி. 12:12: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால் உங்களுக்கு ஆபத்துவரும்.” (மேலும் அப்போஸ்தலர் 10:38)
எல்லாவற்றையும் கடவுள் முன்னறிந்து முன்குறித்துவைக்கிறாரா?
ஏசா. 46:9, 10: “நானே கடவுள், வேறொருவரும் இல்லை; நானே கடவுள், எனக்கு ஒப்பானவரில்லை. பின் நடக்கப்போகிறவைகளை முன்னமே அறிவிக்கிறேன், இன்னும் சம்பவியாதிருப்பவற்றை பூர்வத்திலிருந்தே அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்கு இஷ்டமானவற்றையெல்லாம் செய்வேன்.” (அவர் தம்முடைய நோக்கத்தைத் தெரிவிக்கிறார், அதன் நிறைவேற்றத்தின் சம்பந்தமாகச் சில காரியங்களை முன்குறிக்கிறார், மேலும் இவை நிறைவேற்றமடையும் என்ற நம்பிக்கையளிக்க சர்வவல்லமையுள்ள அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்.)
ஏசா. 11:1-3: “ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி அவன் வேர்களிலிருந்து ஒரு முளைகிளம்பிக் கனிதரும். [ஈசாவின் வம்சபரம்பரையில் இயேசு பிறந்தார்.] அவர்மேல் யெகோவாவின் ஆவி தங்கும்; . . . யெகோவாவுக்குப் பயப்படுவதே அவருக்கு மிகவும் பிரியமானது.” (தி.மொ.) (யெகோவா தம்முடைய குமாரனைக் குறித்து இதை நம்பிக்கையுடன் முன்னறிவிக்க முடிந்தது ஏனெனில் சிருஷ்டிப்பு முதற்கொண்டு பரலோகத்தில் அவருடைய மனப்பான்மையையும் நடத்தையையும் யெகோவா கூர்ந்து கவனித்திருந்தார்.) (இயேசுவின் மனித வாழ்க்கைக்கு முந்திய வாழ்க்கையைக் குறித்து, 216, 217-ம் பக்கங்களில் “இயேசு கிறிஸ்து,” என்ற தலைப்பின்கீழ் பாருங்கள்.)
உபா. 31:20, 21: “நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்ததும் பாலும் தேனும் ஓடுகிறதுமான பூமியிலே அவர்களைப் [இஸ்ரவேல் ஜனத்தைப்] பிரவேசிக்கச் செய்தபின்பு, அவர்கள் வயிறார உண்டு கொழுத்திருக்கும்போது வேறே தேவர்களிடமாகத் திரும்பி அவர்களைச் சேவித்து, என்னை அலட்சியஞ்செய்து என் உடன்படிக்கையை மீறுவார்கள். பலபல தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடர்ந்து பிடிக்கும் வேளையிலே [கடவுளுடைய தயவை நன்றியோடு மதித்துணரத் தவறினதால் அவர்கள் நடந்துகொண்ட முறையை விவரித்துக் கூறும்] இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி பகரும்; . . . அவர்கள் கொண்டிருக்கும் நினைவு [வளர்க்கும் மனச்சாய்வு, NW] இன்னது என்பது இப்பொழுதே, நான் ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்ச் சேர்க்குமுன்னேயே, எனக்குத் தெரியும்.” (தி.மொ.) (அவர்களுடைய போக்கின் விளைவை உய்த்துணரும் கடவுளுடைய திறமை அவர் அதற்குப் பொறுப்புடையவரென அல்லது அதுவே அவர் அவர்களுக்கு விரும்பினதெனக் குறிக்கவில்லை, ஆனால் அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றின் ஆதாரத்தின்பேரில் அவர் அந்த முடிவை முன்காண முடிந்ததென்பதைக் கவனியுங்கள். இவ்வாறே, கூர்ந்து கவனிக்கப்படுவதன் ஆதாரத்தின்பேரில், வானிலை முன்னறிவிப்பவர் அந்த வானிலையைப் பெரும் நுட்பத்திருத்தமாய் முன்னறிவிக்கலாம், ஆனால் அவர் அதை உண்டுபண்ணுகிறதில்லை அல்லது கட்டாயமாக விரும்புகிறார் என்பதுமில்லை.)
நிகழ்ச்சிகளை முன்னறியவும் முன்குறித்துவைக்கவும் கடவுளுக்கு இருக்கும் திறமை அவர் தம்முடைய சிருஷ்டிகள் எல்லாருடைய எல்லாச் செயல்களின் சம்பந்தமாகவும் இதைச் செய்கிறாரென நிரூபிக்கிறதா?
வெளி. 22:17: “கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” (இந்தத் தெரிவு முன்குறித்துவைக்கப்படவில்லை; தனிப்பட்டவருடைய விருப்பத்துக்கு விடப்பட்டுள்ளது.)
ரோமர் 2:4, 5: “தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபக்கினைநாளிலே உனக்காகக் கோபக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.” (விதிக்கப்பட்ட ஒரு போக்கைப் பின்தொடரும்படி ஆட்கள் வற்புறுத்தப்படுகிறதில்லை. ஆனால் ஒருவன் தான் செய்வதற்குக் கணக்கொப்புவிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.)
செப். 2:3: “தேசத்திலுள்ள [பூமியிலுள்ள] எல்லாச் சிறுமையானவர்களே [மனத்தாழ்மையுள்ளவர்களே], அவரைத் [யெகோவாவைத்] தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” (தங்கள் முயற்சியில் வெற்றிபெறாதபடி முன்விதித்துவைக்கப்பட்டுள்ளனரென அறிந்திருக்கையில், நீதியும் அன்புமுள்ள கடவுள் அவர்களைத் தங்கள் முயற்சிக்குப் பலனடையும் நம்பிக்கையுடன் சரியானதைச் செய்யும்படி ஊக்கப்படுத்துவாரா?)
உதாரணம்: ஒரு ரேடியோவை உடையவர் உலகச் செய்தியைக் கேட்க முடியும். ஆனால் குறிப்பிட்ட ரேடியோ நிலையத்திலிருந்து வரும் செய்தியை அவர் கேட்க முடியும் என்பது அவர் கேட்கிறார் என்று பொருள்கொள்கிறதில்லை. அவர் முதல் அந்த ரேடியோவை இயங்கும்படி திருப்பவேண்டும் பின்பு அந்த வானொலி நிலையத்தைத் தெரிந்தெடுக்கவேண்டும். அவ்வாறே, யெகோவாவுக்குச் சம்பவங்களை முன்னறியும் திறமை இருக்கிறது, ஆனால் அவர், மனித சிருஷ்டிக்குத் தாம் அருளிய தெரிந்துகொள்ளும் சுயாதீனத்துக்கு ஆதியாகமம் 22:12; 18:20, 21-ஐ ஒத்துப்பாருங்கள்.
மதிப்புக் கொடுத்து, அந்தத் திறமையைத் தெரிந்தெடுத்து, விருப்பப்படி விவேகமாய்ப் பயன்படுத்துகிறாரென பைபிள் காட்டுகிறது.—கடவுள் ஆதாமைப் படைத்தபோது, அவன் பாவஞ்செய்வானென அவருக்குத் தெரியுமா?
பின்வருவதைக் கடவுள் ஆதாம் ஏவாளுக்கு முன்னால் வைத்தார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.” “தேவனாகிய கர்த்தர் [யெகோவா] மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” (ஆதி. 1:28; 2:16, 17) ஒரு திட்டம் தோல்வியடையும்படி விதிக்கப்பட்டதென தொடக்கத்திலிருந்தே அறிந்தும், அதிசயமான எதிர்காலத்துடன் அந்தத் திட்டத்தை மேற்கொள்ள நீங்கள் உங்கள் பிள்ளைகளை ஊக்குவிப்பீர்களா? அவர்கள் நிச்சயமாய்த் துயரத்துக்குள்ளாகும்படி நீங்கள் எல்லாவற்றையும் திட்டம் செய்துவிட்டீர்களென அறிந்திருக்கையில், தீங்கைப்பற்றி நீங்கள் அவர்களை எச்சரிப்பீர்களா? அப்படியானால், இவ்வகைப்பட்டதைக் கடவுள்பேரில் சாட்டிக் கூறுவது நியாயமாகுமா?
மத். 7:11: “பொல்லாதவர்களாகிய நீங்கள் [“அவ்வளவு கெட்டவர்களாயிருந்தும்,” NE] உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?”
ஆதாமின் பாவத்தையும் அதிலிருந்து விளையப்போகும் எல்லாவற்றையும் கடவுள் முன்விதித்துவைத்து முன்னறிந்திருந்தால், ஆதாமைப் படைப்பதால், மனிதச் சரித்திரத்தில் செய்யப்பட்ட எல்லா அக்கிரமத்தையும் கடவுள் தெரிந்தும் வேண்டுமென்றே நடக்கும்படி செய்தார் என்று பொருள்கொள்ளும். எல்லாப் போர்களுக்கும், குற்றச்செயல்களுக்கும், ஒழுக்கக்கேட்டுக்கும், ஒடுக்குதலுக்கும், பொய்களுக்கும், பாசாங்குத்தனத்துக்கும், நோய்களுக்கும் அவரே மூலகாரணராயிருப்பார். ஆனால் பைபிள் தெளிவாகப் பின்வருமாறு சொல்கிறது: “நீர் அக்கிரமத்தில் பிரியங்கொள்ளும் தெய்வமல்ல.” (சங். 5:4, தி.மொ.) “கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.” (சங். 11:5) “பொய்யுரையாத தேவன்.” (தீத்து 1:3) “[மேசியானிய அரசராகக் கடவுள் நியமித்துள்ளவர்] அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.” (சங். 72:14) “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) “அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்.”—சங். 33:5.
கடவுள் யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் விதியை முன்முடிவுசெய்தாரா?
ஆதி. 25:23: “அதற்குக் கர்த்தர் [யெகோவா]: இரண்டு ஜாதிகள் உன் [ரெபேக்காளின்] கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் [ஏசா] இளையவனைச் [யாக்கோபைச்] சேவிப்பான் என்றார்.” (இன்னும் பிறவாத அந்த இரட்டைப் பிள்ளைகளின் பிறப்பு மூலத்துக்குரிய மாதிரியை யெகோவா வாசிக்க முடிந்தது. இந்தப் பையன்கள் ஒவ்வொருவரும் வளர்க்கப்போகும் குணங்களை அவர் முன்கண்டு அந்த முடிவை முன்னறிவிக்கையில் அவர் இதைக் கூர்ந்து கவனித்திருக்கலாம். [சங். 139:16] ஆனால் அவர் அவர்களுடைய நித்திய விதிகளைக் குறித்து வைத்தாரென்று அல்லது அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் விளைவடையும் முறையை அவர் முன்தீர்மானித்தாரென்று காட்டும் அறிகுறி இங்கே எதுவும் இல்லை.)
இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி யூதாஸ்காரியோத்து முன்விதிக்கப்பட்டானா?
சங். 41:9: “என் பிராணசிநேகிதனும் நான் நம்பினவனும் என் சாப்பாட்டைச் சாப்பிட்டவனுமாகிய மனுஷன் என்மேல் தன் குதிங்காலைத் தூக்கினான்.” (தி.மொ.) (இயேசுவின் சீஷர்களில் எவன் அவ்வாறு செய்வானென இந்தத் தீர்க்கதரிசனம் திட்டமாய்க் குறிப்பிடாததைக் கவனியுங்கள். தாவீதைக் காட்டிக்கொடுக்கும்படி தாவீதுக்கு ஆலோசனைகூறுபவனான அகித்தோப்பேலைப் பிசாசானவன் பயன்படுத்தினது யெகோவாவுக்குத் தெரியும், அது பிசாசு செயல்பட்ட முறையையும் எதிர்காலத்தில் அவன் செய்யப்போவதையும் தெளிவுபடுத்திக் காட்டினதால் அதை எழுதி பதிவுசெய்யும்படி அவர் செய்தார். “சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் [இயேசுவைக்] காட்டிக்கொடுக்கும்படி” கடவுளல்ல “பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டி”னான். (யோவான் 13:2) எதிர்ப்பதற்குப் பதில், யூதாஸ் சாத்தானின் அந்தச் செல்வாக்குக்கு இடங்கொடுத்தான்.)
யோவான் 6:64: “தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்”தார். (சிருஷ்டிப்பின் முதற்கொண்டல்ல, யூதாஸின் பிறப்பு காலமுதலும் அல்ல, அவன் நம்பிக்கைத்துரோகமான முறையில் நடக்கத் தொடங்கினமுதற்கொண்டேயாகும். ஆதியாகமம் 1:1; லூக்கா 1:2; 1 யோவான் 2:7, 13 ஆகியவற்றை ஒத்துப்பாருங்கள், இந்த வசனங்கள் ஒவ்வொன்றிலும் “ஆதிமுதல்” என்பது சம்பந்தப்பட்டக் கருத்தில் பயன்படுத்தியிருக்கிறது. யோவன் 12:4-6-ஐயும் கவனியுங்கள்.)
கிறிஸ்தவர்களை “முன்விதிக்கப்பட்டவர்கள்” என அப்போஸ்தலன் பவுல் பேசுகிறானல்லவா?
ரோமர் 8:28, 29: “அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தனது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார் [“முன்விதித்தார்,” KJ]. (எபே. 1:5, 11-ம்) எனினும், இதே ஆட்களுக்கு 2 பேதுரு 1:10-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் [தொடர்ந்து செய்துகொண்டிருந்தால், NW] நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.” (அந்த ஆட்கள் ஒவ்வொருவரும் இரட்சிப்படையும்படி முன்விதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் என்ன செய்தாலும் கவலையில்லை, அவர்கள் இடறிவிழ முடியாது, அந்த ஒவ்வொரு ஆட்களின் பங்கிலும் முயற்சி தேவைப்படுவதால், அந்த வகுப்பே முன்குறிக்கப்பட்டிருக்கவேண்டும். அந்த முழு வகுப்பும் இயேசு கிறிஸ்து வைத்த முன்மாதிரிக்கு ஒத்திருக்கவேண்டுமென்று கடவுள் நோக்கங்கொண்டார். எனினும் அந்த வகுப்பின் பாகமாயிருக்கும்படி கடவுள் தெரிந்துகொண்டவர்கள், தங்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ள பரிசை உண்மையில் பெறுவதற்கு உண்மையுள்ளவர்களாக நிரூபிக்கவேண்டும்.)
எபே. 1:4, 6: “தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, . . . தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.” (லூக்கா 11:50, 51-ல் “உலகத்தோற்றத்துக்குமுன்” என்பதை இயேசு ஆபேலின் காலத்தோடு பொருத்துவது கவனிக்கத்தக்கது. ஆபேல் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கடவுளுடைய தயவைப் பெற்றிருந்த முதல் மனிதன். இவ்வாறு, ஏதேனில் நடந்த கலகத்துக்குப் பின், ஆனால் ஆபேல் கர்ப்பந்தரிப்பதற்கு முன், கடவுள் தாம் அதன்மூலமாய் விடுதலை அளிக்கப்போகிற ஒரு “வித்து”வைப் பிறப்பிக்கும் நோக்கங் கொண்டார். [ஆதி. 3:15] முதன்மையான வித்தாகிய, இயேசு கிறிஸ்துவுடன் அவரை உண்மையுடன் பின்பற்றும் ஒரு தொகுதியார் உடனுழைப்பாளராயிருந்து, இந்தப் பூமியின்மேல் ஒரு புதிய அரசாங்கமாகிய, மேசியானிய ராஜ்யத்தில் அவரோடு பங்குகொள்ளும்படி கடவுள் நோக்கங்கொண்டார்.)
நட்சத்திரங்களும் கிரகங்களும் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின்பேரில் செல்வாக்குக் கொண்டிருக்கின்றனவா அல்லது நாம் தீர்மானங்களைச் செய்கையில் கருதவேண்டிய முன்னறிகுறிகளை அளிக்கின்றனவா?
வான்கணிப்பின் தொடக்கம் என்ன?
“மேற்கத்திய வான்கணிப்பு (சோதிடம்) கி.மு. 2000 ஆண்டுகளின் கல்தேயருடைய மற்றும் பாபிலோனியருடைய கோட்பாடுகளிலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் தோன்றியதை நேர்முகமாக ஆய்ந்து கண்டுகொள்ளலாம்.”—தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா (1977), புத். 2, பக். 557.
“வான்கணிப்பு இரண்டு பாபிலோனிய எண்ணங்களின்பேரில் ஆதாரங்கொண்டிருக்கிறது: இராசி மண்டலம், மற்றும் வானொளிக்கோளங்களின் தெய்வத்தன்மை. . . . இந்தக் கிரகங்கள், அவை ஒவ்வொன்றுக்குமுரிய தெய்வங்கள் கொண்டிருக்கும்படி ஒருவர் எதிர்பார்க்கும் செல்வாக்குகளைக் கொண்டிருக்கின்றனவென பாபிலோனியர் பாராட்டினர்.”—பூர்வ உலகத்தின் மகா நகரங்கள் (நியு யார்க், 1972), L. ஸ்பிரேக் டி காம்ப், பக். 150.
“பாபிலோனியாவிலும் அதோடு அசீரியாவிலும் பாபிலோனிய நாகரிக நிலையின் நேர்முகத் துணைவிளைவாக . . . வான்கணிப்பு, . . . தெய்வங்களின் சித்தத்தையும் நோக்கத்தையும் உறுதியாய் அறிய . . . புரோகிதர்களின் கைப்பொறுப்பில் இருந்த இரண்டு முக்கிய வழிவகைகளில் ஒன்றாக அதிகார ஏற்பு மதக் கோட்பாட்டு முறையில் அதனிடத்தை ஏற்கிறது, அந்த மற்றொன்று
பலிக்குரிய மிருகத்தின் ஈரலைச் சோதிப்பதன்மூலமாகும். . . . சூரியன், சந்திரன் மற்றும் ஐந்து கிரகங்களின் இயக்கங்கள், பூமியில் நேரிடும் சம்பவங்களை ஆயத்தப்படுத்துவதில் சந்திரக்-கடவுள் சின் மற்றும் சூரியக்-கடவுள் ஷாமாஷுடன் ஒன்றுசேர்ந்து இயங்கும் சந்தேகத்திலுள்ள ஐந்து கடவுட்களின் நடவடிக்கையைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கருதப்பட்டன.”—என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (1911), புத். II, பக். 796.இந்தப் பழக்கத்தை மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகர் எவ்வாறு கருதுகிறார்?
உபா. 18:10-12: “குறிசொல்லுகிறவனும் சகுனம் பார்க்கிறவனும் குறி கேட்கிறவனும் சூனியக்காரனும் மந்திரவாதியும் . . . உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்.”—தி.மொ.
பாபிலோனியரிடம் அவர் பின்வருமாறு கூறினார்: “வானநிலை கணிப்பவரும் நட்சத்திரம் பார்ப்பவரும் உனக்கு நேரிடப்போகிறவற்றை மாதந்தோறும் கணிப்பவரும் வந்து நின்று உன்னை ரட்சிக்கட்டும். இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், . . . உன் சிறுவயதுமுதல் நீ வர்த்தகம்பண்ணினவர்களோ ஆளாளாய்த் தத்தம் வழிகளிலே தள்ளாடிப் போய்விடுவார்கள்; உன்னை இரட்சிப்பதற்கு எவரும் இரார்.”—ஏசா. 47:13-15, தி.மொ.