Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இழிபேரெடுத்த வேசியை நியாயந்தீர்த்தல்

இழிபேரெடுத்த வேசியை நியாயந்தீர்த்தல்

அதிகாரம் 33

இழிபேரெடுத்த வேசியை நியாயந்தீர்த்தல்

தரிசனம் 11​—வெளிப்படுத்துதல் 17:1-18

பொருள்: மகா பாபிலோன் சிவப்புநிற மூர்க்க மிருகத்தின்மீது சவாரிசெய்கிறாள், இறுதியில் அது அவளுக்கு எதிராக திரும்பி அவளை அழித்துப்போடுகிறது

நிறைவேற்றத்தின் காலம்: 1919 தொடங்கி மிகுந்த உபத்திரவம் வரை

1. ஏழு தூதரில் ஒருவன் யோவானுக்கு எதை வெளிப்படுத்துகிறார்?

 யெகோவாவின் நீதியுள்ள கோபாக்கினை முழுமையாக, அதன் ஏழு கலசங்களும் ஊற்றித்தீர்க்கப்பட வேண்டும்! பூர்வ பாபிலோன் இருந்த இடத்தில் ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஊற்றிமுடித்தபோது, அது, முடிவான அர்மகெதோனின் போரை நோக்கி சம்பவங்கள் விரைவாய் முன்னேறுகையில், மகா பாபிலோனை வாதிப்பதைப் பொருத்தமாய் அடையாளப்படுத்திக் காட்டினது. (வெளிப்படுத்துதல் 16:1, 12, 16) தாம் கொடுத்த நீதியுள்ள ஆக்கினைத் தீர்ப்புகளை யெகோவா ஏன் மற்றும் எவ்வாறு நிறைவேற்றுகிறாரென பெரும்பாலும் அதே தூதன் இப்பொழுது வெளிப்படுத்துகிறார். தான் அடுத்தப்படியாகக் கேட்பதும் காண்பதுமானவற்றில் யோவான் ஆச்சரியமடைகிறார்: “ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொ[ன்னான்].”—வெளிப்படுத்துதல் 17:1, 2.

2. அந்த “மகா வேசி” (அ) பூர்வ ரோமாக இல்லை, (ஆ) பெரிய வாணிகமாக இல்லை, (இ) மதமாக இருக்கிறது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

2 “மகா வேசி”! ஏன் இத்தகைய திடுக்கிடச்செய்யும் குறிப்புப்பெயர்? அவள் யார்? இந்த அடையாளக் குறிப்பான வேசியைப் பூர்வ ரோமுடன் சிலர் அடையாளம் காட்டியுள்ளனர். ஆனால் ரோம் ஓர் அரசியலாட்சி அதிகாரமாக இருந்தது. இந்த வேசி பூமியின் ராஜாக்களோடு வேசித்தனம் செய்கிறாள், தெளிவாகவே, இது ரோம அரசர்களையும் உள்ளடக்குகிறது. அல்லாமலும், அவளுடைய அழிவுக்குப் பின், “பூமியின் ராஜாக்களும்” அவள் அழிவதைக் கண்டு அழுது புலம்புவதாகச் சொல்லப்படுகிறது. ஆகையால், அவள் அரசியல் அதிகாரமாக இருக்க முடியாது. (வெளிப்படுத்துதல் 18:9, 10) கூடுதலாக, உலகத்தின் வர்த்தகர்களும் அவளுக்காக துக்கித்துப் புலம்புவதால், பெரிய வாணிகத்துக்கும் அவள் படக்குறிப்பாக இருக்க முடியாது. (வெளிப்படுத்துதல் 18:15, 16) எனினும், ‘அவளுடைய மாந்திரியத்தால் எல்லா ஜாதிகளும் வஞ்சிக்கப்பட்டார்கள்’ என்று நாம் வாசிக்கிறோம். (வெளிப்படுத்துதல் 18:23, தி.மொ.) இது, அந்த மகா வேசி உலகளாவிய மதமாக இருக்கவேண்டுமெனத் தெளிவாக்குகிறது.

3. (அ) அந்த மகா வேசி ஏன் ரோமன் கத்தோலிக்க சர்ச்சையும் அல்லது கிறிஸ்தவமண்டலம் முழுவதையும்விட பெரியளவை அடையாளப்படுத்திக் காட்டவேண்டும்? (ஆ) பெரும்பான்மையான கிழக்கத்திய மதங்களிலும் கிறிஸ்தவமண்டல பிரிவுகளிலும் என்ன பாபிலோனிய கோட்பாடுகள் காணப்படுகின்றன? (இ) கிறிஸ்தவமண்டலத்தில் இருக்கக்கூடிய அநேக கோட்பாடுகள், ஆசாரங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ஆரம்பத்தைக் குறித்து ரோமன் கத்தோலிக்க கார்டினல் ஜான் ஹென்ரி நியூமன் என்ன ஒப்புக்கொள்கிறார்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

3 எந்த மதமாக இருக்கும்? சிலர் கூறினதுபோல், அவள் ரோமன் கத்தோலிக்கச் சர்ச்சாக இருக்கிறாளா? அல்லது கிறிஸ்தவமண்டலம் முழுவதையும் குறிக்கிறாளா? இல்லை, எல்லா ஜாதிகளையும் வஞ்சிப்பதற்கு அவள் இவற்றையும் பார்க்கிலும் பெரியவளாக இருக்க வேண்டும். உண்மையில், அவள், முழு பொய்மத உலகப் பேரரசு. பாபிலோனிய பல கோட்பாடுகளும் பழக்கவழக்கங்களும் பூமியைச் சுற்றிலுமுள்ள மதங்களுக்குப் பொதுவாக இருப்பதில், அவள் தன் தொடக்கத்தைப் பாபிலோனின் விளங்காப் புதிர்களில் கொண்டிருப்பது காட்டப்படுகிறது. உதாரணமாக, மனித ஆத்துமா உள்ளியல்பாய் அழியாமையுடையதென்பதிலும், வதைப்பதற்குரிய நரகத்திலும், திரித்துவக் கடவுட்களிலும் நம்பிக்கை கிழக்கத்திய மதங்கள் பெரும்பான்மையானவற்றிலும் கிறிஸ்தவமண்டலத்தின் பிரிவுகளிலுங்கூட காணப்படுகிறது. பொய்மதம், 4,000-த்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னால் பூர்வ நகரமாகிய பாபிலோனில் பிறப்பிக்கப்பட்டு, மகா பாபிலோன் என்று பொருத்தமாய் அழைக்கப்படுகிற, தற்கால மாபெரும் கோர உருவத்துக்கு வளர்ந்திருக்கிறது. a எனினும், அந்த “மகா வேசி” என்ற வெறுக்கத்தக்கப் பதத்தால் அவள் ஏன் விவரிக்கப்படுகிறாள்?

4. (அ) எவ்வழிகளில் பூர்வ ரோம் வேசித்தனம் செய்தது? (ஆ) குறிப்பிடத்தக்க எந்த முறையில் மகா பாபிலோன் வேசித்தனம் செய்திருக்கிறது?

4 பாபிலோன் (அல்லது பாபேல், “தாறுமாறு” என்பது அதன் பொருள்) நேபுகாத்நேச்சாரின் காலத்தில் அதன் மேன்மையின் உச்சநிலைக்கு உயர்ந்தது. அது ஆயிரத்துக்கு மேற்பட்ட கோயில்களையும் சிறிய துணை கோயில்களையும் உடைய மத-அரசியல் நாடாக இருந்தது. அதன் குருத்துவம் மிகுந்த அதிகாரத்தைச் செலுத்தினது. ஓர் உலக வல்லரசாக பாபிலோன் இருந்ததானது வெகு காலத்துக்கு முன்பே முடிந்துவிட்டபோதிலும், மத மகா பாபிலோன் தொடர்ந்து வாழ்கிறது, மேலும் அந்தப் பூர்வ மாதிரியின்படி, அது அரசியல் விவகாரங்களின்பேரில் செல்வாக்குச் செலுத்தவும் அவற்றை உருப்படுத்தியமைக்கவும் நாடுகிறது. ஆனால் அரசியலில் மதத்தைக் கடவுள் அங்கீகரிக்கிறாரா? எபிரெய வேத வார்த்தைகளில், இஸ்ரவேல் பொய் வணக்கத்தோடு தன்னை உட்படுத்தினபோதும், யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக ராஜ்யங்களுடன் அது நேச ஒப்பந்தங்கள் செய்துகொண்டபோதும் தன்னை வேசித்தனத்துக்கு உட்படுத்தினதாகச் சொல்லப்பட்டது. (எரேமியா 3:6, 8, 9; எசேக்கியேல் 16:28-30) மகா பாபிலோனும் வேசித்தனம் செய்கிறது. குறிப்பிடத்தக்க முறையில், பூமியின் ஆளும் ராஜாக்களின்மீது செல்வாக்கையும் அதிகாரத்தையும் பெறுவதற்குத் தகுந்த வழிமுறையென தான் கருதும் எல்லாவற்றையும் அது செய்திருக்கிறது.1 தீமோத்தேயு 4:1.

5. (அ) பலரறியும் பகட்டான என்ன நிலையை மத குருமார் அனுவித்துவருகின்றனர்? (ஆ) உலகத்தில் முதன்மைவாய்ந்த நிலையிலிருக்க விரும்புவது இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளுக்கு ஏன் நேர்முரணாக இருக்கிறது?

5 இன்று, மதத் தலைவர்கள் உயர் அரசாங்கப் பதவிக்காகத் தேர்தல்போன்ற நடவடிக்கைகளில் அடிக்கடி ஈடுபடுகின்றனர், சில நாடுகளில், அமைச்சர் பதவிகளையுங்கூட உடையோராய், அரசியலாட்சியில் பங்குகொள்கின்றனர். 1988-ல் ஐக்கிய மாகாணங்களின் ஜனாதிபதி பதவிக்குப் பிரசித்திப்பெற்ற புராட்டஸ்டன்ட் குருமார் இருவர் நாடி ஓடினர். மகா பாபிலோனின் தலைவர்கள், பலரறியும் பகட்டான நிலையை மிக விரும்புகின்றனர், அவர்களுடைய புகைப்படங்கள், முதன்மைவாய்ந்த அரசியல்வாதிகளுடன் ஒப்பந்தஞ்செய்வதாகப் பொதுப் பத்திரிகை விளம்பரத்தில் அடிக்கடி காணப்படுகின்றன. நேர்மாறாக, இயேசு அரசியலில் உட்படுவதை அறவே வெறுத்துத் தள்ளி, தம்முடைய சீஷர்களைக் குறித்து: ‘நான் உலகத்தின் பாகமல்லாததுபோல் அவர்களும் உலகத்தின் பாகமல்லர்’ என்று கூறினார்.யோவான் 6:15; 17:16, NW; மத்தேயு 4:8-10; யாக்கோபு 4:4-ஐயும் பாருங்கள்.

தற்கால ‘வேசித்தனம்’

6, 7. (அ) ஜெர்மனியில் ஹிட்லரின் நாசி கட்சி எப்படி அதிகாரத்துக்கு வந்தது? (ஆ) நாசி ஜெர்மனியோடு வாடிகன் செய்துகொண்ட உடன்படிக்கை, எப்படி உலக ஆதிக்கத்துக்காக ஹிட்லரின் முயற்சிக்கு உதவியது?

6 அரசியலில் தலையிடுவதன் மூலம், இந்த மகா வேசி சொல்லமுடியாத துயரத்தை மனிதவர்க்கத்துக்குக் கொண்டுவந்திருக்கிறாள். உதாரணமாக, ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்ததற்குப் பின்னாலிருந்த மெய்நிகழ்ச்சிகளைக் கவனியுங்கள்அவ்வளவு வெறுக்கத்தக்க நிகழ்ச்சிகளாக இருப்பதால் சரித்திர புத்தகங்களிலிருந்து எடுத்தகற்றும்படி சிலர் விரும்புவர். மே 1924-ல் நாசி கட்சி ஜெர்மன் சட்ட மாமன்றத்தில் 32 உறுப்பினரிடங்களைக் கொண்டிருந்தது. மே 1928-க்குள் இவை 12 இடங்களாகக் குறைந்துவிட்டிருந்தன. எனினும், 1930-ல் பெரும் பொருளாதார மந்தம் உலகத்தை வளைந்து சூழ்ந்தது; இதை அடுத்து பின்தொடர்ந்து, நாசிக்கள் கவனிக்கத்தக்க முறையில் மீண்டெழுந்து, ஜூலை 1932-ன் ஜெர்மன் தேர்தல்களில் உறுப்பினருக்குரிய மொத்த 608 இடங்களில் 230 இடங்களைப் பெற்றனர். பின் உடனடியாக, போப் சார்ந்த வீரத்திருத்தகையினரான, முன்னாள் வேந்தர் ஃபிரான்ஸ் வான் பேப்பன், நாசிக்களின் உதவிக்கு வந்தார். சரித்திராசிரியர்கள் சொல்வதன்படி, வான் பேப்பன் ஒரு புதிய பரிசுத்த ரோம பேரரசை எதிர்நோக்கிக் கற்பனைசெய்தார். வேந்தராக அவருடைய சொந்த குறுகிய பதவிக் காலம் தோல்வியடைந்துவிட்டது, ஆகவே இப்பொழுது நாசிக்களின் மூலம் அதிகாரம் பெற எதிர்பார்த்தார். ஜனவரி 1933-க்குள், பெருந்தொழில் முதல்வர்களிடமிருந்து ஹிட்லருக்கு ஆதரவை அவர் பேரளவில் கூட்டிச் சேர்த்து, வஞ்சனையான தந்திர மறைசூழ்ச்சிகளின் மூலம் ஹிட்லர் ஜனவரி 30, 1933-ல் ஜெர்மனியின் வேந்தராகும்படி உறுதிப்படுத்திக்கொண்டார். அவர்தாமே துணை வேந்தராக்கப்பட்டு ஜெர்மனியின் கத்தோலிக்கப் பகுதிகளின் ஆதரவை பெறும்படி ஹிட்லரால் பயன்படுத்தப்பட்டார். பதவிப் பெற்று இரண்டு மாதங்களுக்குள், ஹிட்லர் சட்டமாமன்றத்தை விலக்கிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆயிரக்கணக்கானோரை சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பிவிட்டு, யூதர்களைக் கொடுமைப்படுத்தும் வெளிப்படையான நடவடிக்கையில் ஈடுபட்டார்.

7 ஜூலை 20, 1933-ல், கார்டினல் பஸிலி (பின்னால் போப் பயஸ் XII ஆன) வாடிகனுக்கும் நாசி ஜெர்மனிக்குமிடையே ஓர் உடன்படிக்கையை ரோமில் கையெழுத்திட்டபோது, வளர்ந்துவந்த நாசிக் கொள்கையின் வல்லமையில் வாடிகனின் அக்கறை வெளிக்காட்டப்பட்டது. வான் பேப்பன் ஹிட்லரின் பிரதிநிதியாக அந்த ஆவணத்துக்குக் கையெழுத்திட்டார், பஸிலி அங்கே வான் பேப்பனின் மீது பயஸ் ஒழுங்கின் மகத்தான சிலுவையாகிய உயர் போப் பதவிசார்ந்த நன்மதிப்புச் சின்னத்தை வழங்கினார். b சாத்தான் உச்சவுயர்நிலை தொப்பியில் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில், டிபோர் கீவ்ஸ் இதைக் குறித்து எழுதி, பின்வருமாறு கூறுகிறார்: “இந்த உடன்படிக்கை ஹிட்லருக்குப் பெரும் வெற்றியாக இருந்தது. இது வெளி உலகத்திலிருந்து தான் பெற்ற நம்பிக்கைக்குரிய முதல் ஆதரவை அவனுக்குக் கொடுத்தது, மேலும் இது மிக உயர்மதிப்புப்பெற்ற ஊற்றுமூலத்திலிருந்து வந்தது.” ஜெர்மனியின் கத்தோலிக்க மத்திப கட்சியிலிருந்து அதன் ஆதரவை விலக்கிவிடும்படி இந்த உடன்படிக்கை வாடிகனைக் கட்டளையிட்டது, இவ்வாறு ஹிட்லரின் ஒரே-கட்சி ‘மொத்த அரசாங்கத்துக்குச்’ சட்ட ஆதரவளிக்கச் செய்தது. c மேலுமாக, அதன் நிபந்தனை 14 பின்வருமாறு கூறியது: “பேராயர்கள், ஆயர்கள், மற்றும் இவற்றைப்போன்றவற்றிற்கான நியமிப்புகள், ஜெர்மன் அரசாங்கம் அமர்த்தின அதிபதி, பொதுவான அரசியல் காரணங்கள் சம்பந்தப்பட்டதில் எந்தச் சந்தேகங்களும் இல்லையென்று போதிய அளவில் உறுதிப்படுத்தின பின்பே அளிக்கப்படும்.” 1933-ன் (“பரிசுத்த ஆண்டு” என்று போப் பயஸ் XI யாவரறிய அறிவித்த) முடிவுக்குள், உலக ஆதிக்கத்துக்காக ஹிட்லரின் முயற்சியில் வாடிகனின் ஆதரவே பெரும்படியான காரணமாகியது.

8, 9. (அ) வாடிகனும் கத்தோலிக்கச் சர்ச்சும் அதன் குருமாரும் எப்படி நாசி கொடுங்கோன்மைக்கு பிரதிபலித்தனர்? (ஆ) இரண்டாம் உலக யுத்தம் தொடங்கினபோது ஜெர்மன் கத்தோலிக்க பிஷப்புகள் என்ன செய்தியை அனுப்பினர்? (இ) மத-அரசியல் உறவுகள் எதில் விளைவடைந்திருக்கின்றன?

8 ஹிட்லரின் அட்டூழியங்களை ஒருசில குருக்களும் மாடக் கன்னிகளும் எதிர்த்துஅதனிமித்தம் துன்பப்பட்டபோதிலும்வாடிகனும் கத்தோலிக்க சர்ச்சும் அதன் குருமார் சேனையும், நாசி கொடுங்கோன்மைக்குச் சுறுசுறுப்பாக அல்லது மெளனமான ஆதரவளித்தன. அதை அவர்கள் உலகக் கம்யூனிஸத்தின் முன்னேற்றத்துக்கு எதிரான அரண்காப்பாகக் கருதினர். வாடிகனில் சிங்காரமாய் உட்கார்ந்துகொண்டு போப் பயஸ் XII யூதர்மீது படுகொலையும் யெகோவாவின் சாட்சிகளின்மீதும் மற்றவர்கள்மீதும் கொடுமையானத் துன்புறுத்தல்களும் கண்டிக்கப்படாமல் தொடரும்படி விட்டார். மே 1987-ல் போப் ஜான் பால் II ஜெர்மனிக்குச் சென்றபோது, உண்மையான மனதுள்ள ஒரு குரு நாசிக்கு எதிர்ப்பாக நிலைநிற்கைகொண்டதை அவர் புகழ்ந்தது நேர்மாறாக உள்ளது. ஹிட்லரின் திகிலாட்சியின்போது ஆயிரக்கணக்கான மற்ற ஜெர்மன் குருமார் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? செப்டம்பர் 1939-ல் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கினபோது ஜெர்மன் கத்தோலிக்க பிஷப்புகள் சபையோருக்கு அனுப்பின ஒரு கடிதம் இந்தக் குறிப்பின்பேரில் விளக்கத்தை அளிக்கிறது. ஒரு பகுதியாக அது வாசிப்பதாவது: “இந்த இறுதியான நேரத்தில் நம்முடைய தலைவருக்குக் கீழ்ப்படிதலாக நம் கத்தோலிக்கப் போர்வீரர்கள் தங்கள் கடமையைச் செய்யும்படியும் தங்கள் முழு தனிவாழ்க்கையையும் தியாகஞ்செய்ய ஆயத்தமாயிருக்கும்படியும் நாங்கள் அறிவுறுத்துகிறோம். தெய்வீக அருள் இந்தப் போரை ஆசீர்வாதமான வெற்றிக்கு வழிநடத்தும்படி கேட்டு ஆர்வமிகுந்த ஜெபங்களில் ஒன்றுசேரும்படி உண்மையுள்ளவர்களை நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறோம்.”

9 அதிகாரத்தையும் அனுகூலத்தையும் பெறும்படி அரசாங்க அரசியலைக் காதலிப்பதில் கடந்த 4,000-க்கு மேற்பட்ட ஆண்டுகளில் மதம் ஈடுபட்ட இந்த வகையான வேசித்தனத்தை இத்தகைய கத்தோலிக்க அரசியல்தந்திரம் சித்தரித்துக் காட்டுகிறது. இத்தகைய மத-அரசியல் உறவுகள், போரையும், துன்புறுத்தல்களையும், மனிதரின் அவலநிலையையும் பெரும்படியான அளவில் வளர்த்துப் பெருகச்செய்திருக்கிறது. அந்த மகா வேசியின்மீது யெகோவாவின் ஆக்கினைத்தீர்ப்பு சமீபித்திருப்பதால் மனிதவர்க்கம் எவ்வளவு மகிழ்ச்சியடையலாம். இது சீக்கிரத்தில் நிறைவேற்றப்படுவதாக!

திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிறாள்

10. மகா பாபிலோன் தன்னைப் பாதுகாக்க எந்தத் ‘திரளான தண்ணீர்களை’ நோக்கியிருக்கிறது? அவற்றிற்கு என்ன ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது?

10 பூர்வ பாபிலோன் திரளான தண்ணீர்கள்மேல்ஐபிராத் நதியின்மீதும் மிகப் பல கால்வாய்கள்மீதும் உட்கார்ந்திருந்தது. இவை, ஓர் இரவில் வறண்டுபோகும் வரையில், அதற்குப் பாதுகாப்பாகவும், அதோடுகூட செல்வத்தை உண்டாக்கும் பெரும் வாணிகத்தின் ஒரு மூலகாரணமாகவும் இருந்தன. (எரேமியா 50:38; 51:9, 12, 13) மகா பாபிலோனும் தன்னைப் பாதுகாக்கவும் செல்வவளமுள்ளதாக்கவும் ‘திரளான தண்ணீர்களை’ நோக்கியிருக்கிறது. இந்த அடையாளக் குறிப்பான தண்ணீர்கள் “ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்,” அதாவது, அது ஆதிக்கம் செலுத்தியிருக்கிறதும் அவற்றினின்று பொருள்சார்ந்த ஆதரவைப் பெற்றுவந்ததுமான நூற்றுக்கோடிக்கணக்கான மனிதர்கள் யாவருமாகும். ஆனால் இந்தத் தண்ணீர்களுங்கூட வறண்டுகொண்டிருக்கின்றன, அல்லது ஆதரவை விலக்கிக்கொண்டிருக்கின்றன.வெளிப்படுத்துதல் 17:15; ஒப்பிடுங்கள்: சங்கீதம் 18:4; ஏசாயா 8:7.

11. (அ) பூர்வ பாபிலோன் எப்படி “பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணினது”? (ஆ) மகா பாபிலோன் எப்படி “பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணி”யிருக்கிறது?

11 மேலும், பூர்வ பாபிலோன் “யெகோவாவின் கையிலே பொற்பாத்திரமாயிருந்தது; அது பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணினது.” (எரேமியா 51:7, தி.மொ.) பூர்வ பாபிலோன் அடுத்திருந்த ராஜ்யங்களை இராணுவ முறைப்படி தான் வென்று கைப்பற்றி, குடிவெறியிலிருந்த மனிதரைப்போல் அவற்றைப் பலனற்றுப்போகச் செய்தபோது யெகோவாவின் கோப வெளிக்காட்டுகளை வற்புறுத்தி விழுங்க வைத்தது. இவ்வகையில், அது யெகோவாவின் கருவியாக இருந்தது. மகா பாபிலோனும், உலகளாவிய பேரரசாகும் நிலைக்கு வென்று கைப்பற்றுவதைச் செய்திருக்கிறது. ஆனால் அது நிச்சயமாகவே கடவுளுடைய கருவி அல்ல. மாறாக, அது “பூமியின் ராஜாக்”களைச் சேவித்திருக்கிறது, அவர்களோடு மத வேசித்தனஞ்செய்கிறது. “பூமியின் குடி”களான, ஜனத்திரள்களைக் குடிவெறியிலுள்ள மனிதரைப்போல் பலங்குன்றியவராயும், எதிர்க்காமல் தங்கள் அதிபதிகளுக்கு அடிமைப்பட்டிருப்பவராயும் வைப்பதற்குத் தன் பொய்க் கோட்பாடுகளையும் அடிமைப்படுத்தும் பழக்கவழக்கங்களையும் பயன்படுத்துவதால் இது இந்த ராஜாக்களின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறது.

12. (அ) இரண்டாம் உலக யுத்தத்தின்போது, ஜப்பானிலிருந்த மகா பாபிலோனின் ஒரு பகுதி எப்படி பெரும் இரத்தம் சிந்துதலுக்கு பொறுப்புள்ளதாயிருந்தது? (ஆ) மகா பாபிலோனை ஆதரித்தத் “தண்ணீர்கள்” எப்படி ஜப்பானில் வடிந்துபோனது, என்ன விளைவோடு?

12 ஷின்டோ ஜப்பான் இதற்கு கவனிக்கத்தக்க உதாரணத்தை அளிக்கிறது. கோட்பாடுகளில் போதிக்கப்பட்ட ஜப்பானிய போர்வீரன், அந்தப் பேரரசனுக்குஉன்னத ஷின்டோ கடவுளாகதன் உயிரைக் கொடுப்பது மிக உயர்வான நன்மதிப்பெனக் கருதினான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது, ஏறக்குறைய 20,00,000 ஜப்பானிய போர்வீரர்கள் போரில் மாண்டனர்; சரணடைவதை அவர்கள் ஒவ்வொருவரும் மதிப்புக்கேடாகக் கருதினர். ஆனால் ஜப்பான் தோல்வியடைந்ததன் விளைவாக, ஹிரோஹிட்டோ பேரரசன் தான் தெய்வமென உரிமைபாராட்டினதைத் துறந்துவிடும்படி வற்புறுத்தும் நிலைக்குள்ளானார். இது, மகா பாபிலோனின் ஷின்டோ பகுதியை ஆதரித்தத் “தண்ணீர்கள்” கவனிக்கத்தக்க முறையில் வடிந்துபோவதில் விளைவடைந்ததுஐயோ, பஸிபிக் போர்க்களத்தில் பல தொட்டிகள் கணக்காய் இரத்தம் சிந்துவதை ஷின்டோமதம் ஒப்புதலளித்தப் பின்பே! ஷின்டோவின் செல்வாக்குக் குறைந்துபோனபோது இது, 1,77,000-த்துக்கு மேற்பட்ட ஜப்பானியர் ஈடற்ற உன்னத பேரரசராகிய யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட, முழுக்காட்டப்பட்ட ஊழியராகும்படியும் வழிதிறந்தது, இவர்களில் மிகப் பெரும்பான்மையர் முன்னாளில் ஷின்டோ, புத்த மதத்தினருமாக இருந்தனர்.

இந்த வேசி ஒரு மிருகத்தின்மீது சவாரிசெய்கிறாள்

13. அந்தத் தூதன் ஆவிக்குள் அவரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனபோது, யோவான் என்ன ஆச்சரியமான காட்சியைக் காண்கிறார்?

13 இந்தப் பெரும் வேசியையும் அவளுடைய அழிவையுங்குறித்து இந்தத் தீர்க்கதரிசனம் மேலும் என்ன வெளிப்படுத்துகிறது? யோவான் இப்பொழுது கூறுகிறபடி, மேலுமான ஓர் உயிர்ப்புள்ள காட்சி தோற்றத்துக்கு வருகிறது: “[அந்தத் தூதன்] ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்.”வெளிப்படுத்துதல் 17:3.

14. யோவான் வனாந்தரத்துக்குள் கொண்டுசெல்லப்படுவது ஏன் பொருத்தமானது?

14 யோவான் ஏன் வனாந்தரத்துக்குள் கொண்டுசெல்லப்படுகிறார்? முன்னால், பூர்வ பாபிலோனுக்கு எதிரான மரணாக்கினைத் தீர்ப்பைக் கூறின ஓர் அறிவிப்பு ‘கடல் வனாந்தரத்திற்கு,’ எதிராய் என்பதாக விவரிக்கப்பட்டது. (ஏசாயா 21:1, 9) இது, பூர்வ பாபிலோன் அதன் தண்ணீர் அரண்காப்புகள் எல்லாவற்றையும் உடையதாக இருந்தும், உயிரற்றப் பாழ்க்கடிப்பாகுமென்ற எச்சரிக்கையைக் கொடுத்தது. அவ்வாறெனில், மகா பாபிலோனுக்கு நேரிடவிருக்கும் அழிவைக் காண யோவான் தன் தரிசனத்தில் வனாந்தரத்துக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டியது பொருத்தமாயுள்ளது. அவளும் பாழாகி பயனற்றுப்போக வேண்டும். (வெளிப்படுத்துதல் 18:19, 22, 23) எனினும், தான் அங்கே வெளியில் காண்பவற்றால் யோவான் ஆச்சரியமடைகிறார். அந்த மகா வேசி தனிமையில் இல்லை! அவள் கோர உருவமுள்ள ஒரு மூர்க்க மிருகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறாள்!

15. வெளிப்படுத்துதல் 13:1-ல் கூறப்பட்டிருக்கிற மூர்க்க மிருகத்துக்கும் வெளிப்படுத்துதல் 17:3-ல் கூறப்பட்டிருக்கிற மூர்க்க மிருகத்துக்கும் என்ன வித்தியாசங்கள் இருக்கின்றன?

15 இந்த மூர்க்க மிருகம் ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் கொண்டிருக்கிறது. அவ்வாறெனில், இது யோவான் முன்னால் கண்ட ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்த அதே மூர்க்க மிருகமாக இருக்குமா? (வெளிப்படுத்துதல் 13:1) இல்லை, வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த மூர்க்க மிருகம் சிவப்பு நிறமுள்ளது, மேலும், முந்தின மூர்க்க மிருகத்தைப்போல் இது முடிகள் அணிந்திருப்பதாகச் சொல்லப்படுகிறதில்லை. இதன் ஏழு தலைகளில் மாத்திரமே தூஷண நாமங்களைக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும், இது “தூஷணமான நாமங்களால் நிறைந்த”தாக இருக்கிறது. இருப்பினும், இந்தப் புதிய மூர்க்க மிருகத்துக்கும் அந்த முந்தின மிருகத்துக்கும் இடையில் ஓர் உறவு இருக்க வேண்டும்; இவற்றிற்கிடையேயுள்ள ஒப்புமைகள் தற்செயலாக இருக்க முடியாதபடி மிக முனைப்பாயிருக்கின்றன.

16. சிவப்புநிற மூர்க்க மிருகத்தின் அடையாளம் என்ன? அதன் நோக்கத்தைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

16 அவ்வாறெனில், இந்தப் புதிய சிவப்புநிற மூர்க்க மிருகம் என்ன? இது, ஓர் ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்த ஆங்கில-அமெரிக்க மூர்க்க மிருகத்தின் தூண்டுதலால் அந்த மூர்க்க மிருகத்துக்கு உருவாக்கப்பட்ட சொரூபமாக இருக்க வேண்டும். இந்தச் சொரூபம் உருவாக்கப்பட்ட பின்பு, இந்த இரண்டு கொம்புகளையுடைய மூர்க்க மிருகம் அந்த மூர்க்க மிருகத்தின் சொரூபத்துக்கு ஆவியைக் கொடுக்கும்படி அனுமதிக்கப்பட்டது. (வெளிப்படுத்துதல் 13:14, 15) உயிருள்ள, சுவாசிக்கிற சொரூபத்தை, யோவான் இப்பொழுது காண்கிறார். இது 1920-ல் இந்த இரண்டு கொம்புகளையுடைய மூர்க்க மிருகம் உயிருக்குக் கொண்டுவந்த சர்வதேச சங்கத்தைப் படமாகக் குறிக்கிறது. இந்தச் சர்வதேச சங்கம் “எல்லா மனிதருக்கும் நீதியை வழங்குவதற்குப் பொதுவிடமாக இருந்து போர் பயமுறுத்தலை என்றென்றுமாக ஒழித்துப்போடும்,” என்று ஐ.மா. ஜனாதிபதி உவில்சன் எதிர்பார்த்தார். இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின் அது ஐக்கிய நாட்டுச் சங்கமாக உயிர்த்தெழுப்பப்பட்டபோது, அதன் அமைப்பின் நோக்கம் “சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்துவரவேண்டுமென்பதே.”

17. (அ) எந்த வகையில் இந்த அடையாளக் குறிப்பான சிவப்புநிற மூர்க்க மிருகம் தூஷண நாமங்களால் நிறைந்துள்ளது? (ஆ) இந்தச் சிவப்புநிற மூர்க்க மிருகத்தின்மீது சவாரிசெய்வது யார்? (இ) தொடக்கத்திலிருந்தே, பாபிலோனிய மதம் தன்னை எவ்வாறு சர்வதேச சங்கத்துடனும் அதன் வாரிசுடனும் இணைத்துக்கொண்டது?

17 எந்த வகையில் இந்த அடையாளக் குறிப்பான மூர்க்க மிருகம் தூஷண நாமங்கள் நிறைந்துள்ளது? தம்முடைய ராஜ்யம் மாத்திரமே நிறைவேற்ற முடியுமென கடவுள் சொல்வதை நிறைவேற்றுவதற்குமனிதர் இந்தப் பல ராஜ்யங்களடங்கிய சிலையைக் கடவுளுடைய ராஜ்யத்துக்குப் பதிலீடாக ஏற்படுத்தி வைத்திருப்பதிலாகும். (தானியேல் 2:44; மத்தேயு 12:18, 21) எனினும், மகா பாபிலோன் சிவப்புநிற மூர்க்க மிருகத்தின்மீது சவாரிசெய்வது, யோவானின் தரிசனத்தைப் பற்றியதில் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. தீர்க்கதரிசனத்தின்படி உண்மையாக, பாபிலோனிய மதம், முக்கியமாய் கிறிஸ்தவமண்டலம், சர்வதேச சங்கத்துடனும் அதன் வாரிசுடனும் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது. டிசம்பர் 18, 1918 ஆன அவ்வளவு காலத்துக்கு முன்பே, அமெரிக்காவில் கிறிஸ்துவின் சர்ச்சுகளின் தேசீய ஆலோசனை சபை என இப்பொழுது அறியப்படும் இந்தக் குழு ஓர் உறுதி அறிக்கையை ஏற்றது, அதன் ஒரு பகுதி பின்வருமாறு அறிக்கை செய்தது: “இத்தகைய சங்கம் வெறும் அரசியல் கருவி அல்ல; அதைப் பார்க்கிலும் இது பூமியில் கடவுளுடைய ராஜ்யத்தின் அரசியல் தோற்றமாகும். . . . சர்ச் நல்லாதரவின் ஆவியை அளிக்க முடியும், அதில்லாமல் எந்தச் சர்வதேச சங்கமும் நிலைத்திருக்க முடியாது. . . . இந்தச் சர்வதேச சங்கம் சுவிசேஷத்தில் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. சுவிசேஷத்தைப்போல், அதன் குறிக்கோள் ‘பூமியிலே சமாதானமும் மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதே.’’”

18. சர்வதேச சங்கத்தின் சார்பாக கிறிஸ்தவமண்டல குருமார் எப்படி தங்களுடைய ஆதரவை காண்பித்தனர்?

18 ஜனவரி 2, 1919-ல், சான் ஃபிரான்ஸிஸ்கோ கிரானிக்கல் பின்வரும் முதற்-பக்கத் தலைப்பைக் கொண்டிருந்தது: “உவில்சனின் சர்வதேச சங்கத்தை ஏற்கும்படி போப் மன்றாடுகிறார்.” அக்டோபர் 16, 1919-ல், முதன்மையான மதக் கிளைகளின் 14,450 குருமாரால் கையொப்பமிடப்பட்ட ஒரு வேண்டுகோள், ஐ.மா. சட்டமாமன்ற மேலவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது, அதில் “சர்வதேச சங்க உடன்படிக்கையில் அடங்கியுள்ள பாரிஸ் சமாதான ஒப்பந்தத்தைச் செல்லத்தக்கதாக்”கும்படி அந்தக் குழுவை ஊக்குவித்தது. ஐ.மா. சட்டமாமன்ற மேலவை அந்த ஒப்பந்தத்தைச் செல்லத்தக்கதாக்கத் தவறினபோதிலும், கிறிஸ்தவமண்டலத்தின் குருமார் சர்வதேச சங்கத்தின் சார்பாகத் தொடர்ந்து போராட்ட ஏற்பாட்டில் ஈடுபட்டனர். இந்தச் சங்கம் எவ்வாறு தொடங்கிவைக்கப்பட்டது? நவம்பர் 15, 1920 என்று தேதியிடப்பட்ட, ஸ்விட்ஸர்லாந்திலிருந்து விரைவாக அனுப்பப்பட்ட ஒரு செய்தி பின்வருமாறு வாசித்தது: “சர்வதேச சங்கத்தின் முதல் பேரவையின் திறப்பு இன்று காலை பதினோரு மணியின்போது ஜெனீவாவில் எல்லா சர்ச் மணிகளையும் ஒலிக்கச்செய்ததன் மூலம் அறிவிக்கப்பட்டது.”

19. அந்தச் சிவப்புநிற மூர்க்க மிருகம் காட்சிக்கு வந்தபோது, யோவான் வகுப்பார் என்ன செயல் நடவடிக்கையை எடுத்தனர்?

19 மேசியானிய ராஜ்ய வருகையை மிக ஆவலுடன் ஏற்ற பூமியிலுள்ள அந்த ஒரே தொகுதியாகிய யோவான் வகுப்பார், இந்தச் சிவப்புநிற மூர்க்க மிருகத்துக்கு மரியாதைச் செய்வதில் கிறிஸ்தவமண்டலத்துடன் பங்குகொண்டதா? இல்லவேயில்லை! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 7, 1919-ல், ஒஹையோ, சீடர் பாய்ன்ட்டில் யெகோவாவின் ஜனங்களின் மாநாடு, “துயரப்படும் மனிதவர்க்கத்துக்கு நம்பிக்கை” என்ற பொதுப் பேச்சை முக்கிய அம்சமாகக் கொண்டிருந்தது. இதற்கு அடுத்த நாளில், சான்டஸ்கி ஸ்டார் ஜர்னல் அறிவித்ததாவது, J. F. ரதர்ஃபர்டு, ஏறக்குறைய 7,000 ஆட்களை நோக்கிப் பேசி, “சர்வதேச சங்கத்தின்மீது கர்த்தருடைய வெறுப்பு நிச்சயமாக வரும் . . . ஏனெனில் குருமார்—கத்தோலிக்கரும் புராட்டஸ்டான்டினரும்—கடவுளுடைய பிரதிநிதிகளாக உரிமைபாராட்டிக்கொண்டு, அவருடைய திட்டத்தைத் தள்ளிவிட்டு சர்வதேச சங்கத்தை, பூமியில் கிறிஸ்துவின் ராஜ்யத்தினுடைய அரசியல் தோற்றம் என வாழ்த்தி வரவேற்று உறுதி ஆதரவளித்தனர்.”

20. சர்வதேச சங்கத்தைப் “பூமியில் கடவுளுடைய ராஜ்யத்தின் அரசியல் தோற்றம்” ஆக குருமார் வரவழைத்தது ஏன் அவர்கள்பேரில் தூஷணமாக இருந்தது?

20 சர்வதேச சங்கத்தின் இந்தப் பரிதாபகரமான தோல்வி, மனிதன் உண்டாக்கிய இத்தகைய கருவிகள் பூமியில் வரக்கூடிய கடவுளுடைய ராஜ்யத்தின் பாகமாயில்லை என்பதை மதகுருவர்க்கத்துக்குக் குறித்துக்காட்டியிருக்க வேண்டும். அப்படி உரிமைபாராட்டுவது எத்தகைய தேவதூஷணம்! அது பெரிய குழப்படியாக ஆன சர்வதேச சங்கத்திற்குக் கடவுள் உடந்தையாயிருந்ததாக தோன்றவைத்தது. கடவுளைப் பொருத்தமட்டில், “அவர் கிரியை உத்தமமானது.” கிறிஸ்துவின்கீழ் வரக்கூடிய யெகோவாவுடைய பரலோக ராஜ்யமே—அநேக நாத்திகர்களைக்கொண்ட பூசல்நிறைந்த அரசியல்வாதிகளின் கூட்டுநிறுவனம் அல்ல—அவர் சமாதானத்தைக் கொண்டுவந்து அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதற்கு உள்ள கருவியாகும்.—உபாகமம் 32:4; மத்தேயு 6:10.

21. சர்வதேச சங்கத்துக்கு வாரிசாக வந்த ஐக்கிய நாட்டுச் சங்கத்தை அந்த மகா வேசி ஆதரித்து, போற்றுதல் தெரிவித்து வருகிறது என்று எது காட்டுகிறது?

21 சர்வதேச சங்கத்தின் வாரிசாகிய ஐக்கிய நாட்டுச் சங்கத்தைக் குறித்ததிலென்ன? ஆரம்பத்திலிருந்தே இந்தக் குழுவும் தனக்குப் பின் அந்த மகா வேசியை வைத்து சவாரிசெய்து வந்திருக்கிறது, காணக்கூடிய வகையில் அதோடு கூட்டுறவுகொண்டு அதனுடைய முடிவை வழிநடத்துவதற்கு முயற்சி செய்திருக்கிறது. உதாரணமாக, அதன் 20-ம் ஆண்டு விழாவின்போது, ஜூன் 1965-ல், ஐநா-விற்கு தங்கள் ஆதரவை பலரறியச் செய்வதற்கும் தங்கள் போற்றுதலைத் தெரிவிப்பதற்கும் ரோம கத்தோலிக்க சர்ச்சின் பிரதிநிதிகளும் கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பிரதிநிதிகளும் புராட்டஸ்டன்டினர்கள், யூதர்கள், இந்துக்கள், புத்தர்கள், முஸ்லீம்கள் போன்ற ஆட்களோடு சேர்ந்து சான் ஃபிரான்ஸிஸ்கோவில் கூடிவந்தனர். பூமியின் மக்கள்தொகையில் 200 கோடி ஆட்களை இவர்கள் பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லப்பட்டது. அக்டோபர் 1965-ல் போப் பால் VI ஐநா-வை விஜயம்செய்தபோது “எல்லா சர்வதேச அமைப்புகளிலும் மிகப் பெரியது” என்று அதை விவரித்தார். “பூமியில் வாழும் மக்கள் ஒற்றுமைக்கும் சமாதானத்துக்கும் ஐக்கிய நாட்டுச் சங்கத்தினிடமே கடைசி நம்பிக்கையாக திரும்புகின்றனர்” என்று அவர் மேலும் சொன்னார். அதை விஜயம்செய்த மற்றொரு போப், போப் ஜான் பால் II, அக்டோபர் 1979-ல் ஐநா-விலுள்ளவர்களிடம் பேசுகையில், “ஐக்கிய நாட்டுச் சங்கம் தான் சமாதானத்துக்கும் நீதிக்கும் மேம்பட்ட பொதுவிடமாக எப்போதும் தொடர்ந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று சொன்னார். போப் தான் உரையாற்றிய பேச்சில் இயேசு கிறிஸ்துவைப்பற்றியோ கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றியோ அவ்வளவாய் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கப்படத்தக்கது. செப்டம்பர் 1987-ல், அவர் ஐக்கிய மாகாணங்களை விஜயம்செய்தபோது சொன்னதைக் குறித்து தி நியூ யார்க் டைம்ஸ் இப்படி அறிக்கையிட்டது: “‘புதிய உலகளாவிய ஒற்றுமையை’ . . . ஊக்குவிப்பதில் ஐக்கிய நாட்டுச் சங்கம் வகித்த உடன்பாடான பாகத்தைக் குறித்து ஜான் பால் வெகு நேரம் பேசினார்.”

ஒரு பெயர், ஓர் இரகசியம்

22. (அ) எவ்வகையான மிருகத்தை அந்த மகா வேசி சவாரிசெய்ய தேர்ந்தெடுத்திருக்கிறாள்? (ஆ) மகா பாபிலோனாகிய அந்த அடையாளக் குறிப்பான வேசியை யோவான் எப்படி விவரிக்கிறார்?

22 அந்த மகா வேசி சவாரிசெய்வதற்கு ஓர் ஆபத்தான மிருகத்தைத் தெரிந்துகொண்டிருப்பதைக் குறித்து அப்போஸ்தலன் யோவான் விரைவில் கற்றுக்கொள்ள இருக்கிறார். எனினும், முதலில், அவர் மகா பாபிலோனிடமே தன் கவனத்தைத் திருப்புகிறார். அவள் ஆடம்பரமாக தன்னை அலங்கரித்திருக்கிறாள், ஆனால் ஆ, என்னே அருவருக்கத்தக்கவளாய் இருக்கிறாள்! “அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்.”—வெளிப்படுத்துதல் 17:4-6அ.

23. மகா பாபிலோனின் முழு பெயர் என்ன? அதன் உட்பொருள் என்ன?

23 பூர்வ ரோமில் இருந்த பழக்கவழக்கத்தின்படி இந்த வேசி அவளுடைய நெற்றியில் எழுதப்பட்டிருந்த பெயரினால் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறாள். d அது ஒரு பெரிய பெயராயிருக்கிறது: “மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்.” அந்தப் பெயர் “இரகசிய”மாக இருக்கிறது. மறைவான பொருளைக் கொண்டிருக்கக்கூடிய ஏதோவொன்று. ஆனால் கடவுள் தம்முடைய உரிய காலத்தில், அந்த இரகசியத்தை விளங்கச் செய்வார். உண்மையில், இந்த விவரவிளக்கத்தையுடைய பெயரின் முழு உட்பொருளையும் பகுத்தறிந்துகொள்வதற்கு அந்தத் தூதன் இன்றுள்ள யெகோவாவின் ஊழியர்களுக்கு வேண்டிய தகவலை யோவானுக்குக் கொடுக்கிறார். மகா பாபிலோன் எல்லா பொய் மதங்களையுமே உள்ளடக்குகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். கிறிஸ்தவமண்டலத்திலுள்ள பெரும்பான்மையான பிரிவுகள் உட்பட உலகத்திலுள்ள எல்லா தனிப்பட்ட பொய் மதங்களும் அவளுடைய குமாரத்திகளாக, அவளைப் பின்பற்றி ஆவிக்குரிய வேசித்தனத்தைச் செய்வதினிமித்தம் அவள் ‘வேசிகளுக்குத் தாய்’ ஆக இருக்கிறாள். விக்கிரகாராதனை, ஆவியுலகத் தொடர்பு, குறி சொல்லுதல், சோதிடம், கைரேகை பார்ப்பது, மனித பலி, ஆலய வேசித்தனம், பொய்த் தேவர்களைக் கனப்படுத்துவதற்கு குடித்துவெறித்திருத்தல் மற்றும் மற்ற கெட்ட பழக்கவழக்கங்கள் போன்ற அருவருப்பான சந்ததியை அவள் பிறப்பித்ததினிமித்தம் அவள் “அருவருப்புகளுக்கும்” தாயாக இருக்கிறாள்.

24. மகா பாபிலோன் “இரத்தாம்பரமும் சிவப்பான” ஆடை தரித்திருப்பதாக காணப்படுவதும் “பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்”டிருப்பதும் ஏன் பொருத்தமானது?

24 மகா பாபிலோன் “இரத்தாம்பரமும் சிவப்பான ஆடை”யையும் தரித்திருக்கிறாள், அரச குடும்பத்தின் வண்ணங்களாக அவை இருக்கின்றன. மேலும் அவள் “பொன்னினாலும் இரத்தினங்களினாலும், முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்”டிருக்கிறாள். எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது! காணப்படுகிற அனைத்து மகத்தான கட்டிடங்கள், அரிதாக காணப்படும் சிலைகள் சித்திரங்கள், விலைமதிப்புள்ள உருவச்சிலைகள், மற்ற மத உபகரணங்கள், இந்த உலக மதங்கள் சேர்த்துவைத்திருக்கும் சொத்துக்கள் மேலும் பெரும் நிதித்தொகைகள் போன்றவற்றை சற்று நினைத்துப்பாருங்கள். வாடிகனிலும் ஐக்கிய மாகாணங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற டிவி சுவிசேஷகர்கள் இருக்கும் இடத்திலும் கிழக்கத்திய நாடுகளில் இருக்கும் கவர்ச்சிகரமான தொட்டிகளிலும் ஆலயங்களிலும் மகா பாபிலோன் பெருஞ்செல்வத்தைக் குவித்துவைத்திருக்கிறதுசிலசமயங்களில் இழந்துவிட்டும் இருக்கிறது.

25. (அ) ‘அருவருப்புகளால் நிறைந்த பொற்பாத்திரத்தில்’ இருந்தது எதற்கு அடையாளமாக இருந்தது? (ஆ) இந்த அடையாளக் குறிப்பான வேசி எக்கருத்தில் குடித்துவெறித்திருக்கிறாள்?

25 இப்போது அந்த வேசி தன் கையில் என்ன வைத்திருக்கிறாள் என்று பாருங்கள். யோவான் அதைக் கண்டு மலைத்துப்போயிருக்கவேண்டும்—‘தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரம்’! “தன் வேசித்தனமாகிய உக்கிரமான மது”வைக்கொண்ட பாத்திரமாக இது இருக்கிறது. இதையே அவள் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாள். (வெளிப்படுத்துதல் 14:8; 17:4) அது வெளியே பார்ப்பதற்கு மிகவும் அழகாயிருக்கிறது, அதிலுள்ளதோ அருவருப்பாயும் அசுத்தமாயுமிருக்கிறது. (மத்தேயு 23:25, 26 ஒப்பிடுங்கள்.) அந்த மகா வேசி தேசங்களை ஏமாற்றி, தன்னுடைய செல்வாக்கின்கீழ் அவர்களைக் கொண்டுவருவதற்குப் பயன்படுத்திய எல்லா அருவருப்பான பழக்கவழக்கங்களையும் பொய்களையும் அந்தப் பாத்திரம் உடையதாயிருக்கிறது. அந்த வேசி குடித்து வெறித்திருப்பதுதானே யோவானுக்கு பார்ப்பதற்கு இன்னும் அருவருப்பாயிருக்கிறது. அவள் கடவுளுடைய ஊழியர்களின் இரத்தத்தைக் குடித்திருக்கிறாள்! உண்மையில், “தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது” என்று நாம் பின்னர் வாசிக்கிறோம். (வெளிப்படுத்துதல் 18:24) எத்தகைய பெருத்த இரத்தப்பழி!

26. மகா பாபிலோன் தன்னுடைய பங்கில் இரத்தப்பழியை உடையதாயிருக்கிறது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

26 கடந்த பல நூற்றாண்டுகளாக, பொய் மத உலக பேரரசு பெரும் இரத்தத்தைச் சிந்தியிருக்கிறது. உதாரணமாக, ஜப்பானில், இடைநிலைக்காலப் பகுதியில், கியோடோவில் இருந்த ஆலயங்கள் புகலிடங்களாக மாற்றப்பட்டன. “புத்தருடைய பரிசுத்த பெயரில்” பிரார்த்தனை செய்துவந்த வீர சந்நியாசிகள் தெருக்களில் பெரும் இரத்தம் ஓடுமளவுக்கு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டனர். கிறிஸ்தவமண்டல குருவர்க்கத்தினர், 20-ம் நூற்றாண்டில், அவரவர்களுடைய நாட்டின் யுத்தப்படைகளோடு சேர்ந்துகொண்டு ஒருவரையொருவர் கொலை செய்தனர். இதினால் குறைந்தபட்சம் பத்து கோடி ஆட்கள் உயிரிழந்திருக்கின்றனர். ஐ.மா.-வின் முன்னாள் ஜனாதிபதி, நிக்ஸன் அக்டோபர் 1987-ல் இவ்வாறு கூறினார்: “சரித்திரத்திலேயே 20-ம் நூற்றாண்டுதானே பெருமளவுக்கு இரத்தத்தைச் சிந்தியிருக்கிறது. இந்த நூற்றாண்டு ஆரம்பிப்பதற்கு முன்பு நடந்த போர்களைக் காட்டிலும் இந்த நூற்றாண்டில் நடந்த எல்லா யுத்தங்களில் அநேகர் மாண்டிருக்கின்றனர்.” இவ்வெல்லா காரியங்களிலும் அவை ஈடுபடுவதன் காரணமாக உலகத்திலுள்ள மதங்கள் தங்களுக்கு தீங்குண்டாக்கும் அளவுக்கு கடவுளால் நியாயந்தீர்க்கப்படுகின்றன; யெகோவா ‘குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கையை’ வெறுக்கிறார். (நீதிமொழிகள் 6:16, 17) முன்னர், யோவான் பலிபீடத்திலிருந்து ஒரு மகா சத்தத்தைக் கேட்டார்: “பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர்”? (வெளிப்படுத்துதல் 6:10) வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாயாக இருக்கிற மகா பாபிலோன் அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்குரிய காலம் வரும்போது மிகவும் உட்பட்டிருக்கும்.

[அடிக்குறிப்புகள்]

a விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டலத்தின் கோட்பாடுகள், ஆசாரங்கள், பழக்கவழக்கங்கள், ஆகியவற்றின் கிறிஸ்தவமற்ற ஆரம்பத்தைக் குறிப்பிடுபவராய், கிறிஸ்தவ கோட்பாட்டின் வளர்ச்சியின்பேரில் கட்டுரை (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம கத்தோலிக்க கார்டினல் ஜான் ஹென்ரி நியூமன் எழுதினார்: “ஆலய உபயோகம், இவற்றை குறிப்பிட்ட புனிதர்களின்பேரில் ஒப்புக்கொடுப்பதும், மர கிளைகளினால் சிலசமயங்களில் அலங்கரிப்பதும்; தூபங்காட்டுவது, விளக்குகள், மெழுகுவர்த்திகள்; நோயிலிருந்து சுகமாக பொருத்தனை செய்து கொடுக்கப்படும் காணிக்கைகள்; பரிசுத்த நீர்; புகலிடங்கள்; பரிசுத்த நாட்களும் காலங்களும், நாட்காட்டிகளை உபயோகிப்பது, ஊர்வலங்கள், வயல்நிலங்களில் ஆசீர்வாதங்கள்; மதகுருக்களுக்குரிய உடைகள், முடிவாங்கும் சடங்கு; திருமணத்தில் மோதிரம் போடுவது, கிழக்குத் திசை திரும்பி வழிபடுவது, பிற்காலத்தில் உருவச்சிலைகள், கோயிலில் பெரும்பாலும் ஓதப்படும் கீதங்கள், மற்றும் கைரி எலிசன் [“கர்த்தரே, இரக்கம் காண்பியும்,” என்ற பாடல்], போன்ற இவை எல்லாமே பொய்மத ஆரம்பத்தைக் கொண்டிருக்கின்றன, சர்ச்சில் இவற்றை ஏற்றுக்கொண்டதினித்தம் அவை பரிசுத்தமாக்கப்படுகின்றன.”

அப்படிப்பட்ட விக்கிரகாராதனையை பரிசுத்தப்படுத்துவதற்கு பதிலாக “[சர்வவல்லமையுள்ள யெகோவா, NW]” கிறிஸ்தவர்களை அறிவுறுத்துகிறார்: “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள்.”—2 கொரிந்தியர் 6:14-18.

b நாசியர் ஆட்சிக்குரிய மூன்றாம் ஜெர்மன் குடியரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய சரித்திர புத்தகத்தில் வில்லியம் L. ஷெரர் சொல்கிறார்: வான் பேப்பன்தான் “ஜெர்மனியிலுள்ள எந்த ஒரு நபரைக் காட்டிலும் ஹிட்லர் அதிகாரத்துக்கு வருவதற்கு மிகவும் பொறுப்புள்ளவராக” இருந்தார். வான் பேப்பனைக் குறித்து ஜனவரி 1933-ல் முன்னாள் ஜெர்மன் வேந்தர், வான் ஷிலீச்சர் சொல்லியிருந்தார்: “யூதாஸ்காரியோத்து பக்கத்தில் இவர் இருந்தால் அவன் புனிதனாக இருக்குமளவுக்கு, இவரோ ஒரு துரோகியாக தன்னை நிரூபித்தார்.”

c போப் பயஸ் XI, மொன்ட்ராகான் கல்லூரியில் மே 14, 1929 அன்று பேசுகையில், அது தான் நல்ல ஆத்துமாக்களுக்கு தேவைப்படுமேயானால், பிசாசிடமே அதை குறித்து கலந்துபேசி முடிவெடுப்பதாக சொன்னார்.

d ஒரு நெறிதவறிய ஆசாரியைக்கு (சுவீட் மேற்கோள் காட்டியபடி) ரோம எழுத்தாளன், செனெகா-வின் வார்த்தைகளோடு ஒப்புமைப்படுத்தி பாருங்கள்: “பெண்ணே, நீ இகழ்ச்சியான வீட்டிலே இருந்தாய் . . . உன் பெயர் உன் நெற்றியிலிருந்து தொங்கவிடப்பட்டது; உன் அவகீர்த்திக்கு நீ பணத்தை வாங்கினாய்.”—கான்ட்ரோவ். i, 2.

[கேள்விகள்]

[பக்கம் 237-ன் பெட்டி]

‘வேசித்தனத்தை’ வெளிப்படுத்துகிறார் சர்ச்சில்

வியான்னாவிற்கு ஃபிரான்ஸ் வான் பேப்பன்-ஐ ஜெர்மன் மந்திரியாக ஹிட்லர் நியமித்தது “ஆஸ்திரிய அரசியலில் தலைமைதாங்கி நடத்தும் ஆட்களை அழித்துப்போடுவதற்கு அல்லது அவர்களை வெற்றிகொள்ளுவதற்காகும்,” என வின்ஸ்டன் சர்ச்சில் தி காதரிங் ஸ்டாம் (1948) என்று தான் எழுதிய புத்தகத்தில் அறிக்கைசெய்கிறார். வான் பேப்பன்-ஐ குறித்து வியன்னாவிலுள்ள ஐ.மா. மந்திரி இப்படி சொல்வதாக சர்ச்சில் மேற்கோள் காட்டுகிறார்: “நல்ல கத்தோலிக்கன் என்று தான் சம்பாதித்த நற்பெயரைப் பயன்படுத்தி, கார்டினல் இன்னிட்ஸர் போன்ற ஆஸ்திரியர்களை செல்வாக்குச் செலுத்த உத்தேசித்தார் என்று . . . தைரியமாகவும் அதிக அலட்சியமாகவும் . . . பேப்பன் என்னிடம் சொல்லத் தொடங்கினார்.”

ஆஸ்திரியா சரணடைந்து ஹிட்லரின் மின்னல் தாக்குப்படையின் வீரர்கள் வியன்னாவுக்குள் அணிவகுத்துச் சென்ற பிறகு, எல்லா ஆஸ்திரிய சர்ச்சுகளும் சுவஸ்திகா கொடியை பறக்கவிட்டு, தங்கள் மணிகளை அடித்து, அவருடைய பிறந்தநாளன்று அடால்ஃப் ஹிட்லரின் சார்பாக ஜெபிக்கவேண்டும் என்று கத்தோலிக்க கார்டினல் இன்னிட்ஸர் உத்தரவிட்டார்.

[பக்கம் 238-ன் பெட்டி/​படம்]

இந்தத் தலைப்பின்கீழ், டிசம்பர் 7, 1941 தேதியிட்ட தி நியூ யார்க் டைம்ஸ்-ன் முதல் பதிப்பில் பின்வரும் கட்டுரை தோன்றியது: கட்டுரை செய்தித்தாளின் பின்வந்த பதிப்புகளில் விலக்கிக்கொள்ளப்பட்டிருந்தது. டிசம்பர் 7, 1941 நாசி ஜெர்மனியின் நேச நாடான ஜப்பான் முத்துத் துறைமுகத்தில் ஐ.மா. கடற்படையைத் தாக்கிய நாளாகும்.

ஜெர்மன் பேரரசுக்கு ‘போர் பிராத்தனை’

“ஃபுல்டாவில் கத்தோலிக்க ஆயர்கள் ஆசீர்வாதத்தையும் வெற்றியையும் வேண்டுகின்றனர் . . . ஃபுல்டாவில் கூடிய ஜெர்மன் கத்தோலிக்க பிஷப்புகள் மாநாடு, எல்லா தெய்வீக ஆராதனைகளின்போதும் ஆரம்பத்திலும் முடிவிலும் வாசிக்கப்படவேண்டிய விசேஷித்த ‘போர் பிராத்தனை’ ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து சிபாரிசு செய்திருக்கிறது. ஜெர்மன் படைகளுக்கு வெற்றியையும் எல்லா போர்வீரர்களின் உயிர்களுக்கும் ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்பையும் அருளுமாறு கடவுளைப் பிரார்த்தனைக் கேட்டுக்கொள்கிறது. குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை ‘நிலத்திலும், சமுத்திரத்திலும், ஆகாயத்திலுமுள்ள’ ஜெர்மன் போர்வீரர்களை விசேஷித்த ஒரு ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தில் நினைவுகூரும்படி கத்தோலிக்க குருமாருக்கு ஆயர்கள் மேலுமாக அறிவுறுத்தினார்கள்.”

[பக்கம் 244-ன் பெட்டி]

‘தூஷணமான நாமங்கள்’

முதல் உலக யுத்தத்துக்குப் பிற்பாடு சர்வதேச சங்கத்தை இரண்டு கொம்புள்ள அந்த மூர்க்க மிருகம் உயர்த்தியபோது, அதன் அநேக மத கள்ளக்காதலர்கள் இதற்கு உடனே மதரீதியிலான ஒப்புதலை வழங்க வகைத்தேடினர். அதன் விளைவாக, அந்தப் புதிய சமாதான அமைப்பு ‘தூஷணமான நாமங்கள் நிறைந்ததாக’ ஆனது.

“கிறிஸ்தவம் அதன் பிரியத்தையும் ஆற்றலையும் சர்வதேச சங்கத்துக்கு ஆதரவாக கொடுத்து, இவ்விதமாக, ஒரு காகிதத் துண்டிலிருக்கும் ஒப்பந்தத்தைக் கடவுளுடைய ராஜ்யம் என்ற ஒரு கருவியாக மாற்றிவிட முடியும்.”—தி கிறிஸ்டியன் சென்ச்சுரி, அ.ஐ.மா., ஜூன் 19, 1919, பக்கம் 15.

“சர்வதேச சங்கத்தின் உள்நோக்கம், நல்லெண்ணத்தின் உலக ஒழுங்குமுறையாக கடவுளுடைய ராஜ்யத்தின் சர்வதேச உறவுகளின் விரிவுபடுத்தப்பட்ட உள்நோக்கமாக இருக்கிறது . . . ‘உம்முடைய ராஜ்யம் வருவதாக’ என்று எல்லா கிறிஸ்தவர்களும் சொல்லும்போது அவர்கள் அதற்காகவே ஜெபம்பண்ணுகிறார்கள்.”—தி கிறிஸ்டியன் சென்ச்சுரி, அ.ஐ.மா., செப்டம்பர் 25, 1919, பக்கம் 7.

“கிறிஸ்துவின் இரத்தமே சர்வதேச சங்கத்தை ஒட்டவைக்கும் பசைப்பொருளாகும்.”—டாக்டர் ஃபிரான்க் கிரேன், புராட்டஸ்டன்ட் ஊழியர், அ.ஐ.மா.

“[சர்ச்சுகளுடைய பேரவையின்] [தேசிய] ஆலோசனை சபை இயேசு கிறிஸ்துவின் ஆவி, தேசிய விவகாரங்களின் நடைமுறைக்குகந்த காரியங்களில் அதிகமாக இடம்பெறுவதற்கு இப்போது இருக்கிற ஒரே அரசியல் கருவியாக [சர்வதேச சங்கத்தின்] உடன்படிக்கையை ஆதரிக்கிறது.”—தி காங்கிரிகேஷனலிஸ்ட் அன்ட் அட்வான்ஸ், அ.ஐ.மா., நவம்பர் 6, 1919, பக்கம் 642.

“பிதாவாகிய கடவுளுடைய கருத்திலும் கடவுளுடைய பூமிக்குரிய பிள்ளைகளுடைய கருத்திலும் சொல்லப்பட்டிருக்கிற பிரகாரம், மெதடிஸ்ட்டினர் அனைவரும் [சர்வதேச சங்கத்தின்] இலட்சியங்களைக் கடைப்பிடித்து பெரிதும் அவற்றை உயர்த்திக் காண்பிக்கவேண்டும் என்று மெதடிஸ்ட் சபையின் கூட்டம் அழைப்பு விடுக்கிறது.”—வெஸ்லேயன் மெதடிஸ்ட் சர்ச், பிரிட்டன்.

“இந்த ஒப்பந்தத்தின் நாட்டங்களையும் சாத்தியக்கூறுகளையும் தீர்மானங்களையும் நாம் சிந்தித்துப்பார்த்தால், அது இயேசு கிறிஸ்துவின் போதனைகளிலுள்ள மையக் கருத்தைக் கொண்டிருப்பதாக நாம் பார்க்கிறோம்: கடவுளுடைய ராஜ்யமும் அவருடைய நீதியும் . . . அதையே அது கொண்டிருக்கிறது.”—ஜெனீவாவில் சர்வதேச சங்கத்தின் மாநாட்டைத் தொடங்கிவைத்தபோது, கான்டர்பரியின் ஆர்ச்பிஷப் கொடுத்த பிரசங்கம், டிசம்பர் 3, 1922.

“எந்தவொரு மனித இயல்புடைய மிஷனரி சங்கமும் கொண்டிருக்கிற தூய்மையான உரிமையையே இந்த நாட்டிலுள்ள சர்வதேச சங்க நிறுவனமும் கொண்டிருக்கிறது, ஏனெனில் அவளே தேசங்களின் மத்தியில் சமாதானப் பிரபுவாக இருக்கும் கிறிஸ்துவின் ஆட்சிக்கு தற்போது அதிக திறமையுடைய பிரதிநிதித்துவ ஸ்தாபனமாக இருக்கிறாள்.”—டாக்டர் கார்வி, பேரவையின் ஊழியர், பிரிட்டன்.

[பக்கம் 236-ன் வரைபடம்]

உலகத்தைச் சுற்றிலும் நம்பிவரப்படும் பொய் கோட்பாடுகள் பாபிலோனில் அவற்றின் ஆரம்பத்தைக் கொண்டிருக்கின்றன

பாபிலோன்

திரித்துவங்கள் அல்லது மும்மூன்று தெய்வங்கள்

மனித ஆத்துமா மரணத்துக்குப்பின் வாழ்கிறது

ஆவி உலக தொடர்பு—“மரித்தவர்களுடன்” பேசுதல்

வணக்கத்தில் உருவங்களின் உபயோகம்

பேய்களைச் சாந்தப்படுத்த வசிய சக்தியின் உபயோகம்

வல்லமையுள்ள ஆசாரியத்துவத்தின் ஆளுகை

[பக்கம் 239-ன் படம்]

பூர்வ பாபிலோன் திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருந்தது

[பக்கம் 239-ன் படம்]

இன்றைய மகா வேசியுங்கூட “திரளான தண்ணீர்கள்”மேல் உட்கார்ந்திருக்கிறாள்

[பக்கம் 241-ன் படம்]

மகா பாபிலோன் ஓர் ஆபத்தான மூர்க்க மிருகத்தின்மீது உட்கார்ந்திருக்கிறது

[பக்கம் 242-ன் படம்]

மதஞ்சார்ந்த வேசி பூமியின் ராஜாக்களோடே வேசித்தனம் செய்திருக்கிறாள்

[பக்கம் 245-ன் படம்]

இந்தப் பெண் ‘பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் வெறிகொண்டிருக்கிறாள்’