பாவம்
பாவம் என்றால் என்ன, நாம் எல்லாருமே ஏன் பாவத்தின் பிடியில் இருக்கிறோம்?
பாவ ஆசைகளை எதிர்த்து நம்மால் போராட முடியும் என்று பைபிள் எப்படி நம்பிக்கை தருகிறது?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2சா 11:2-5, 14, 15, 26, 27; 12:1-13—தாவீது ராஜா பெரிய பாவங்களைச் செய்தார், கடுமையாகக் கண்டிக்கப்பட்டார், திருந்தி வாழ ரொம்ப முயற்சி எடுத்தார்
-
ரோ 7:15-24—அதிக விசுவாசத்தோடும் கடவுள்பக்தியோடும் இருந்த பவுலும்கூடத் தன்னுடைய பாவ ஆசைகளையும் எண்ணங்களையும் விட்டொழிக்க போராட வேண்டியிருந்தது
-
ஏன் நிறைய பேர் பாவம் செய்கிறார்கள்?
அப் 3:17; 17:29, 30; 1தீ 1:13; 1பே 1:14
இதையும் பாருங்கள்: எண் 15:27-29
தெரிந்தே திரும்பத் திரும்பப் பாவம் செய்வது ஏன் ஒரு பெரிய குற்றம்?
இதையும் பாருங்கள்: எண் 15:30; ரோ 1:28-32; 1தீ 5:20
கடவுளுடைய ஊழியர்களைப் பாவம் செய்யத் தூண்டுவதற்கு சாத்தான் எதைப் பயன்படுத்தலாம்?
நீதி 1:10, 11, 14, 15; மத் 5:28; யாக் 1:14, 15
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆதி 3:1-6—சாத்தான் ஒரு பாம்பின் மூலம் ஏவாளிடம் பேசி, சுயநலமாகவும் பேராசையோடும் நடந்துகொள்ள அவளைத் தூண்டினான்; யெகோவாமேல் அவள் வைத்திருந்த நம்பிக்கையையும் உடைத்தான்
-
நீதி 7:6-10, 21-23—புத்தியில்லாத ஒரு வாலிபன் ஒழுக்கக்கேடான ஒரு பெண்ணின் வலையில் எப்படி விழுகிறான் என்பதை சாலொமோன் விளக்குகிறார்
-
நாம் எப்படி சாத்தானின் வலையில் சிக்காமல் இருக்கலாம்?
எபே 4:27; 6:10-18; யாக் 4:7, 8
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
நீதி 5:1-14—பாலியல் முறைகேட்டை ஏன் தவிர்க்க வேண்டும், எப்படித் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் ஒரு அப்பாவைப் போல ஆலோசனை கொடுக்க சாலொமோனை யெகோவா தூண்டினார்
-
மத் 4:1-11—சாத்தான் கொண்டுவந்த சோதனைகளை எதிர்த்து நிற்க கடவுளுடைய வார்த்தையை இயேசு பயன்படுத்தினார்
-
கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டிய சில மோசமான பாவங்கள் என்ன?
பாருங்கள்: “கெட்ட பழக்கங்கள்”
பாவங்களை ஒத்துக்கொள்வது
நம் பாவங்களை மறைக்க நாம் ஏன் முயற்சி செய்யக் கூடாது?
நம் பாவங்களையெல்லாம் யாரிடம் ஒத்துக்கொள்ள வேண்டும்?
நமக்கு “துணையாக” இருந்து நமக்காக யெகோவாவிடம் பரிந்து பேசுபவர் யார்?
பாவம் செய்த ஒருவர், தான் மனம் திருந்தியிருப்பதை எப்படிக் காட்டலாம்?
இதையும் பாருங்கள்: “மனம் திருந்துவது”
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
யாத் 22:1-12—திருச்சட்டத்தின்படி, ஒருவன் எதையாவது திருடினால் அதன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியிருந்தது
-
லூ 19:8, 9—வரி வசூலிப்பவர்களின் தலைவனான சகேயு, தவறு செய்வதை விட்டுவிடுவதன் மூலமும், மற்றவர்களிடம் அபகரித்ததையெல்லாம் திருப்பிக் கொடுப்பதன் மூலமும் தான் உண்மையிலேயே மனம் திருந்தியிருந்ததைக் காட்டினான்
-
யெகோவா நம்மை மன்னிப்பார் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?
பாருங்கள்: “மன்னிப்பு”
ஒருவர் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிடும்போது அவருக்கு உதவவும் சபையைப் பாதுகாக்கவும் யெகோவா என்ன ஏற்பாடு செய்திருக்கிறார்?
இதையும் பாருங்கள்: அப் 20:28; கலா 6:1
ஒருவர் செய்யும் பெரிய பாவம் அவருடைய குடும்பத்திலும் சபையிலும் இருக்கும் மற்றவர்களை எப்படிப் பாதிக்கலாம்?
இதையும் பாருங்கள்: உபா 29:18
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
யோசு 7:1-13, 20-26—ஆகான் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டு அதை மறைக்க முயற்சி செய்தான்; அதனால் இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் அழிவைக் கொண்டுவந்தான்
-
யோனா 1:1-16—யோனா தீர்க்கதரிசி யெகோவாவின் பேச்சை மீறியதால் தன்னோடு கப்பலில் இருந்த எல்லாருடைய உயிருக்கும் ஆபத்தை வரவழைத்தார்
-
1கொ 5:1-7—கொரிந்துவில் ஒருவர் செய்த படுமோசமான பாவம் அவருடைய முழு சபையையும் பாதித்ததைப் பற்றி பவுல் சொன்னார்
-
கண்டிக்கப்படுவோமோ என்ற பயத்தில் நாம் ஏன் மூப்பர்களிடம் உதவி கேட்காமல் இருக்கக் கூடாது?
முன்பு செய்த பாவத்தை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பதற்குப் பதிலாக கடவுள் நம்மை மன்னித்துவிட்டார் என்பதில் நாம் ஏன் நம்பிக்கையாக இருக்க வேண்டும்?
பாருங்கள்: “மன்னிப்பு”
ஒருவர் ஒரு பெரிய பாவத்தைச் செய்திருப்பது நமக்குத் தெரியவந்தால், சபையிலுள்ள மூப்பர்களிடம் அதைத் தெரியப்படுத்தும்படி நாம் ஏன் அவரிடம் சொல்ல வேண்டும்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
உபா 13:6-9; 21:18-20—ஒரு பெரிய பாவத்தைச் செய்தவர் ஆருயிர் நண்பராகவோ குடும்பத்தில் இருக்கும் ஒருவராகவோ இருந்தால்கூட பொறுப்புள்ளவர்களிடம் அதைத் தெரியப்படுத்த வேண்டும் என்று திருச்சட்டம் சொன்னது
-