படிப்பு 12
கனிவும் அனுதாபமும்
1 தெசலோனிக்கேயர் 2:7, 8
சுருக்கம்: கேட்பவர்கள்மேல் உங்களுக்கு உண்மையான அன்பும் அக்கறையும் இருப்பதைக் காட்டுங்கள்.
எப்படிச் செய்வது?
-
கேட்பவர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உங்கள் இதயத்தைத் தயார்படுத்துங்கள். அதற்கு, கேட்பவர்கள் என்ன பிரச்சினைகளில் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுடைய உணர்ச்சிகளைக் கற்பனை செய்து பாருங்கள்.
-
வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். கேட்பவர்களுக்குப் புத்துணர்ச்சியும் ஆறுதலும் ஊக்கமும் தருவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் வார்த்தைகள் அவர்களுடைய மனதைப் புண்படுத்திவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். யெகோவாவின் சாட்சிகளாக இல்லாதவர்களைப் பற்றியோ, அவர்கள் மனதார நம்பும் விஷயங்களைப் பற்றியோ மதிப்புக்குறைவாகப் பேசாதீர்கள்.
-
அக்கறை இருப்பதைக் காட்டுங்கள். கனிவான குரலில் பேசுவதன் மூலமும், பொருத்தமான சைகைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் கேட்பவர்கள்மேல் உங்களுக்கு உண்மையான அக்கறை இருப்பதைக் காட்டுங்கள். உங்கள் முகபாவனைகளிலும் அந்த அக்கறையைக் காட்டுங்கள்; அடிக்கடி புன்னகை செய்யுங்கள்.