பரலோகத்திலிருந்து வந்த அப்பம்
பாட்டு 150
பரலோகத்திலிருந்து வந்த அப்பம்
1. பரலோகப் பிதாவே,
என்றும் மாறாத கர்த்தாவே.
உம் துதியைப்பாடுவோம்,
உம் நாமத்தைப் போற்றிடுவோம்.
அன்புள்ள மேய்ப்பரானீர்,
நன்கு நடத்தினீர்.
உம் ஜனத்தைஅறிந்தீர்.
மன்னா உண்ணத் தந்தீர்.
கற்பாறைதண்ணீர் தந்தீர்,
தாகம் தணிக்கக் கொடுத்தீர்.
கானானுக்குக் கொணர்ந்தீர்.
அம்மந்தை நன்கு போஷித்தீர்.
2. நீர் தந்த மன்னா அது;
உம் மகனைக் குறித்தது.
அவர் மீட்கவே வந்தார்;
தம்மகிமையைத் துறந்தார்.
பரலோக அப்பமே;
தந்தார் தம்மாம்சமே;
பலியாய் மாந்தருக்கு,
மீட்பருள்வதற்கு.
விசுவாசம் மூலமே அந்த
அப்பம்புசிப்போமே.
ஆம், தினம் அருந்துவோம்;
பரிசுத்தமாக வாழ்வோம்.
3. பரமஅப்பச் செய்தி
பசியுள்ளோருக்குக் கூறி,
வாய்ப்புகள் பற்றிக் கொள்வோம்,
“ஆடுகளுக்கு” ஊட்டுவோம்
தேவநீதி தேடுவோம்.
பிறர்க்குதவுவோம்.
தேவ ஆசிபெறுவோம்.
இரட்சிப்பைஅடைவோம்.யெ-
கோவாபோர்புரிவார்.
அர்மகெதோனில் ஜெயிப்பார்.
யெகோவாவைப் போற்றுவோம்.
அவர் செயலில் மகிழ்வோம்.