“இதோ இருக்கிறேன்! என்னை அனுப்பும்”
பாட்டு 204
“இதோ இருக்கிறேன்! என்னை அனுப்பும்”
1. தேவனை நிந்திக்கின்றனர்,
பெயரைப்பழிக்கின்றனர்.
மூர்க்கர், பலவீனர், என்பர்.
‘தேவன் இல்லை!’ என்பர்மூடர்.
யார் தேவநிந்தை நீக்குவர்?
யார் அவர் துதிபாடுவர்?
“என்னைஅனுப்பும், கர்த்தாவே.
உண்மையுடன் துதிப்பேனே.
(பல்லவி)
2. தேவன் தாமதிப்பார் என்பர்.
சற்றும் பயமற்றிருப்பர்.
கற்சிலை சிலர் தொழுவர்,
சிலர் இராயனைப் போற்றுவர்.
துஷ்டர்க்கு புத்திசொல்வோர்யார்?
தேவன் மாநாளைச் சொல்வோர்யார்?
“என்னைஅனுப்பும், கர்த்தாவே.
அஞ்சாமல் எச்சரிப்பேனே.
(பல்லவி)
3. தீமைகள்பெருகிடவே,
சாந்தமானோர் துக்கிக்கவே.
மன அமைதிபெறவே
சத்தியம்நாடுகின்றனரே.
யார்அவர்களைத் தேற்றுவர்?
யார் நீதிநாடிடச் செய்வர்?
“என்னைஅனுப்பும், கர்த்தாவே.
பொறுமையாய் போதிப்பேனே.
(பல்லவி)
மேன்மையானதிது, கர்த்தாவே,
என்னை அனுப்புவீரே!”