பாடம் 23
எங்களுடைய புத்தகங்களை எப்படி எழுதுகிறோம், மொழிபெயர்க்கிறோம்?
“எல்லாத் தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும் இனத்தினருக்கும் நித்திய நல்ல செய்தியை” சொல்வதற்காக கிட்டத்தட்ட 750-க்கும் அதிகமான மொழிகளில் புத்தகங்களைத் தயாரிக்கிறோம். (வெளிப்படுத்துதல் 14:6) இவ்வளவு பெரிய வேலையை நாங்கள் எப்படி செய்கிறோம்? நிறைய நாடுகளில் இருக்கிற எழுத்தாளர்களின் உதவியாலும் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியாலும் செய்கிறோம். இவர்கள் எல்லாருமே யெகோவாவின் சாட்சிகள்.
கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். கட்டுரைகளை எழுத தலைமை அலுவலகத்தில் இருக்கிற எழுத்து துறையில் இருக்கிறவர்கள் (Writing Department) எழுத்தாளர்களை நியமிக்கிறார்கள். தலைமை அலுவலகத்திலும் ஒருசில கிளை அலுவலகத்திலும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் எழுத்தாளர்களாக இருப்பதால் எல்லா நாட்டு மக்களுக்கும் தேவையான விஷயங்களைப் பற்றி எழுத முடிகிறது. அதனால் எங்களுடைய பத்திரிகைகள் எல்லா நாட்டு மக்களுக்கும் பிரயோஜனமாக இருக்கின்றன. எழுத்து துறையில் இருக்கிறவர்கள் செய்கிற எல்லா வேலையையும் ஆளும் குழுவினர் மேற்பார்வை செய்கிறார்கள்.
கட்டுரைகளை மொழிபெயர்ப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். எழுத்து துறையில் இருக்கிறவர்கள் அந்த கட்டுரைகளைச் சரிபார்க்கிறார்கள். பிறகு அதை ஆளும் குழுவிடம் கொடுக்கிறார்கள். அவர்களுடைய அனுமதி கிடைத்ததும், அந்த கட்டுரைகளை உலகம் முழுவதும் இருக்கிற மொழிபெயர்ப்பாளர்களுக்கு கம்ப்யூட்டர் மூலமாக அனுப்பி வைக்கிறார்கள். மொழிபெயர்க்கிறவர்கள், “உண்மையான வார்த்தைகளை” தெளிவாக, திருத்தமாக, ஜனங்கள் புரிந்துகொள்கிற விதமாக மொழிபெயர்க்கிறார்கள்.—பிரசங்கி 12:10.
வேகமாக செய்ய கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறார்கள். எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் செய்கிற வேலையை கம்ப்யூட்டரால் செய்ய முடியாது. ஆனால், வேகமாக வேலை செய்வதற்கு கம்ப்யூட்டர் உதவியாக இருக்கிறது. உதாரணமாக, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கலாம், ஆராய்ச்சி செய்யலாம். ‘மல்டிலேங்வேஜ் எலக்ட்ரானிக் பப்ளிஷிங் சிஸ்டம்’ (MEPS) என்ற ஒரு புரோகிராமை யெகோவாவின் சாட்சிகள் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த புரோகிராமை வைத்து நூற்றுக்கணக்கான மொழிகளில் டைப் செய்ய முடியும். டைப் செய்ததும் பிரிண்ட் செய்வதற்கு ஏற்ற மாதிரி கம்ப்போஸ் (Composition) செய்ய முடியும். அந்த சமயத்தில், படங்களையும் இணைக்க முடியும்.
ஒரு மொழியை வெறும் ஆயிரம் இரண்டாயிரம் பேர் பேசினாலும் அந்த மொழியில்கூட நாங்கள் புத்தகங்களை மொழிபெயர்த்து அச்சடிக்கிறோம். ஏன் நாங்கள் இவ்வளவு முயற்சி எடுக்கிறோம்? ஏனென்றால், ‘எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டும்’ என்று யெகோவா விரும்புகிறார்.—1 தீமோத்தேயு 2:3, 4.
-
எங்கள் பத்திரிகைகளில் வருகிற கட்டுரைகளை யார் எழுதுகிறார்கள்?
-
நாங்கள் ஏன் இத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கிறோம்?