பகுதி 8—முன்னுரை
யெகோவா சாலொமோனுக்கு அதிக ஞானத்தையும், ஆலயத்தைக் கட்டும் பாக்கியத்தையும் கொடுத்தார். ஆனால், சாலொமோன் கொஞ்சம் கொஞ்சமாக யெகோவாவை விட்டு விலகினார். பொய்க் கடவுள்களை வணங்கியவர்கள் இதற்கு எப்படிக் காரணமாக இருந்தார்கள் என்று உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள். இஸ்ரவேல் ராஜ்யம் பிரிக்கப்பட்டது, கெட்ட ராஜாக்கள் மக்களை கடவுளிடமிருந்து விலக்கி, சிலைகளை வணங்க வைத்தார்கள். அந்தச் சமயத்தில், யெகோவாவுக்கு உண்மையாக இருந்த நிறைய தீர்க்கதரிசிகள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள். யேசபேல் ராணியால், வடக்கு ராஜ்யத்தின் மக்கள் கடவுளைவிட்டு இன்னும் அதிகமாக விலகிப் போனார்கள். இஸ்ரவேல் தேசத்தின் சரித்திரத்தில் அது ஒரு மோசமான காலமாக இருந்தது. அந்தச் சமயத்திலும் யோசபாத் ராஜா, எலியா தீர்க்கதரிசி போன்ற நிறைய பேர் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள்.
இந்தப் பகுதியில்
பாடம் 44
யெகோவாவுக்காக ஒரு ஆலயம்
சாலொமோன் ராஜாவின் ஜெபத்தைக் கடவுள் கேட்டார், அவருக்குப் பெரிய பொறுப்புகளைக் கொடுத்தார்.
பாடம் 49
கெட்ட ராணிக்குத் தண்டனை
நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை யேசபேல் அபகரிக்க நினைத்தாள். அதற்காக அவரைக் கொல்ல திட்டம் போட்டாள். அவள் செய்த அக்கிரமத்தை யெகோவா பார்த்தார்.
பாடம் 50
யோசபாத்துக்கு யெகோவா உதவினார்
எதிரி தேசங்கள் யூதாவைத் தாக்க வந்தபோது, நல்ல ராஜாவான யோசபாத் கடவுளிடம் உதவி கேட்டு ஜெபம் செய்தார்.