தகவல் பெட்டி 20அ
தேசம் பங்கிடப்படுதல்
துல்லியமாக அளக்கப்பட்ட எல்லைகளைப் பற்றி விளக்கப்பட்டபோது, தங்களுடைய தாய்நாடு திரும்பவும் நல்ல நிலைமைக்கு மாறும் என்ற நம்பிக்கை சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்தது. அதிலிருந்து நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? தரிசனத்திலுள்ள இரண்டு விஷயங்களைக் கவனியுங்கள்:
சொந்தமான இடமும் மதிப்புள்ள வேலையும்
வாக்குக் கொடுக்கப்பட்ட தேசம் திரும்பவும் நல்ல நிலைமைக்கு மாறும்போது, சிறையிருப்பிலிருந்து திரும்பி வருகிற எல்லாருக்குமே அங்கே ஒரு இடம் சொந்தமாகக் கிடைக்கும். அதேபோல் இன்றும், யெகோவாவின் ஊழியர்கள் எல்லாருக்குமே ஆன்மீகப் பூஞ்சோலையில் ஒரு இடம் இருக்கிறது. கடவுளுடைய அமைப்பில் நம்முடைய பங்கு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, இந்த ஆன்மீகத் தேசத்தில் நமக்கென்று ஒரு இடமும், மதிப்புள்ள வேலையும் இருக்கிறது. யெகோவா, தன்னுடைய ஊழியர்கள் ஒவ்வொருவரையுமே மதிப்புள்ள செல்வங்களாகக் கருதுகிறார்.
சமமான பங்குகள்
எசேக்கியேல் பார்த்த தரிசனத்தில், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்திலுள்ள ஒவ்வொரு கோத்திரத்தாரும் அந்தத் தேசத்தின் விளைச்சலைச் சரிசமமாக அனுபவித்தார்கள். அதேபோல், இன்றும் ஆன்மீகப் பூஞ்சோலையின் ஆசீர்வாதங்களை தன்னுடைய ஊழியர்கள் எல்லாருக்குமே யெகோவா சரிசமமாகக் கொடுத்திருக்கிறார்.