பாகம் 1
கடவுள் சொல்வதை எப்படித் தெரிந்துகொள்வது?
பைபிளைப் படித்தால் கடவுள் சொல்வதைத் தெரிந்துகொள்ளலாம். 2 தீமோத்தேயு 3:16
உண்மையான கடவுள் நமக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார், அதுதான் பைபிள். கடவுள் சொன்னதைத்தான் பைபிளில் மனிதர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. அதை நீங்கள் படிக்க வேண்டும் என்பது கடவுளுடைய ஆசை.
நமக்கு எது நல்லது என்று கடவுளுக்குத்தான் தெரியும். அவர் சொல்வதைக் கேட்டால், நீங்கள் நல்ல வழியில் நடக்கலாம். —நீதிமொழிகள் 1:5.
எல்லாரும் பைபிளைப் படிக்க வேண்டுமென்று கடவுள் ஆசைப்படுகிறார். அதனால்தான், இன்று நிறைய மொழிகளில் பைபிள் கிடைக்கிறது.
கடவுள் சொல்வதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால், நீங்கள் கண்டிப்பாக பைபிளைப் படிக்க வேண்டும், அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மத்தேயு 28:19
உலகம் முழுவதும் நிறைய பேர் பைபிளைப் பற்றிக் கற்றுக்கொள்கிறார்கள்.பைபிளைப் புரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
கடவுளைப் பற்றி எல்லாருக்கும் அவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
அதற்காக நீங்கள் காசு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். யெகோவாவின் சாட்சிகள் நடத்துகிற கூட்டத்திலும் கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளலாம்.