கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க உதவும் நிறைய நியமங்களும் ஒழுக்க நெறிமுறைகளும் பைபிளில் இருக்கின்றன.
ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு, பைபிளிலுள்ள சத்தியத்தின்படி வாழ கற்றுக்கொள்ளும்படி யெகோவாவை நேசிக்கும் எல்லாரையும் உற்சாகப்படுத்துகிறது.
அதிகாரம் 1
கடவுளுடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்
கடவுளோடு நெருக்கமான நட்பை வைத்துக்கொள்ளவும் அதைப் பலப்படுத்திக்கொள்ளவும் முயற்சி தேவை. அதற்கு நாம் என்ன செய்யலாம்?
அதிகாரம் 2
கடவுளுக்கு முன் நல்ல மனசாட்சியோடு இருங்கள்
வாழ்க்கையில் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பதைக் கண்டுபிடிக்க நம் ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டியைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.
அதிகாரம் 3
கடவுளை நேசிக்கிறவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள்
நண்பர்கள் நம்மை நல்லவர்களாக அல்லது கெட்டவர்களாக ஆக்கிவிடலாம். நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க பைபிள் நியமங்கள் எப்படி நமக்கு உதவும்?
அதிகாரம் 4
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏன் மதிப்புக் கொடுக்க வேண்டும்?
குடும்பத்திலும் சபையிலும் சமுதாயத்திலும் அதிகாரத்துக்கு மதிப்புக் கொடுக்க நமக்கு நல்ல காரணம் இருக்கிறது.
அதிகாரம் 5
உலகத்திலிருந்து பிரிந்திருப்பது எப்படி?
‘நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லை’ என்று சீஷர்களிடம் இயேசு சொன்னார். ‘உலகம்’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? அதிலிருந்து கிறிஸ்தவர்கள் ஏன் பிரிந்திருக்க வேண்டும்?
அதிகாரம் 6
பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
சில பாகங்கள் நல்லதாகவும், சில பாகங்கள் அழுகியதாகவும் இருக்கிற ஒரு பழத்தைப் போல இந்த உலகத்தின் பொழுதுபோக்குகள் இருக்கின்றன. கெட்டதைத் தவிர்த்து நல்லதைத் தேர்ந்தெடுக்க எது நமக்கு உதவும்?
அதிகாரம் 7
கடவுளைப் போல உயிரை உயர்வாக மதிக்கிறீர்களா?
உயிர் மற்றும் இரத்தம் சம்பந்தமாக நல்ல தீர்மானங்களை எடுக்க என்ன பைபிள் நியமங்கள் நமக்கு உதவும்?
அதிகாரம் 8
யெகோவா தன் மக்களிடம் சுத்தத்தை எதிர்பார்க்கிறார்
சுத்தம் சம்பந்தமாக கடவுள் கொடுத்திருக்கும் நெறிமுறைகளின்படி வாழ நம்முடைய உடல், உடை மற்றும் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. நம்முடைய வணக்கம், நடத்தை, எண்ணங்கள் ஆகியவற்றிலும் அவர் கொடுத்த நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அதிகாரம் 9
“பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்”
பாலியல் முறைகேடு என்றால் என்ன? அதிலிருந்து நாம் எப்படி விலகி ஓடலாம்?
அதிகாரம் 10
திருமணம்—கடவுளின் பரிசு
திருமணம் செய்வதால் என்ன சில நன்மைகள் இருக்கின்றன? உங்கள் துணையை நீங்கள் எப்படி ஞானமாகத் தேர்ந்தெடுக்கலாம்? திருமண பந்தம் நீடிக்க எது உதவும்?
அதிகாரம் 11
திருமண நாளுக்குப் பின்
இன்ப துன்பங்கள் எல்லாருடைய மணவாழ்விலும் இருக்கின்றன. மிகப் பெரிய பிரச்சினைகள் வந்தாலும் தம்பதிகளால் தங்களுடைய திருமண பந்தத்தைப் பலப்படுத்த முடியும்.
அதிகாரம் 12
‘பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளைப் பேசுங்கள்’
நம் வார்த்தைகளால் நல்ல பலனும் கிடைக்கலாம், அதிக பாதிப்பும் ஏற்படலாம். பேசும் திறனை எப்படி நன்றாகப் பயன்படுத்துவது என யெகோவா நமக்குக் கற்றுத்தருகிறார்.
அதிகாரம் 13
எல்லா கொண்டாட்டங்களும் கடவுளுக்குப் பிரியமானவையா?
கொண்டாட்டங்களும் பண்டிகைகளும் மக்களுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியப் பாகமாக ஆகிவிட்டன. அவற்றைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள எது நமக்கு உதவும்?
அதிகாரம் 14
எல்லாவற்றிலும் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்
நேர்மையாக நடப்பதற்குச் சவாலாக இருக்கும் நான்கு அம்சங்களைக் கவனியுங்கள். அந்தச் சவாலைச் சமாளிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் கவனியுங்கள்.
அதிகாரம் 15
உங்கள் வேலையைச் சந்தோஷமாகச் செய்யுங்கள்
நம் வேலையைப் பற்றி நல்ல விதமாக யோசிக்க வேண்டுமென்று நம் படைப்பாளர் விரும்புகிறார். அப்படியானால், நம் வேலையைச் சந்தோஷமாகச் செய்ய எது உதவும்? கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டிய வேலைகள் ஏதாவது இருக்கின்றனவா?
அதிகாரம் 16
பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்
சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற உலகத்தில் நாம் வாழ்கிறோம். கடவுளோடு நெருங்கியிருக்கவும் அவருடைய விரோதியிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் நாம் என்ன செய்ய வேண்டும்?
அதிகாரம் 17
கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
“உங்களுடைய மகா பரிசுத்த விசுவாசத்தை அஸ்திவாரமாக வைத்து உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று ஒரு பைபிள் எழுத்தாளர் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். அதற்காக நீங்கள் என்ன செய்யலாம்?
பின்குறிப்புகள்
கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள் என்ற புத்தகத்தில் வரும் சில வார்த்தைகளுக்கும் சொற்றொடர்களுக்குமான அர்த்தம்.