உங்களுடைய மீட்பு நெருங்கிவிட்டது!
“நேராக நிமிர்ந்து நின்று, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; ஏனென்றால், உங்கள் விடுதலை நெருங்கிவருகிறது.”—லூக். 21:28.
பாடல்கள்: 133, 43
1. கி.பி. 66-வது வருடத்தில் என்ன சம்பவங்கள் நடந்தன? (ஆரம்பப் படம்)
அது கி.பி. 66-வது வருடம். எருசலேம் நகரத்தில் பல திடீர் திருப்பங்கள் நடக்கின்றன. எருசலேம் ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியில் இருந்து 17 தாலந்து காசுகளை ரோம அதிகாரியான ஃப்ளோரெஸ் (Florus) திருடிவிடுகிறார். அதனால், யூதர்கள் கோபத்தில் கொதித்தெழுகிறார்கள். அவர்கள் ரோம படை வீரர்களை கொன்றுவிட்டு, எருசலேம் நகரம் சுதந்திரம் அடைந்துவிட்டது என்று அறிவிக்கிறார்கள். இதற்கு ரோமப் படை பதிலடி கொடுக்கிறது. மூன்று மாதங்களுக்குள், ரோம தளபதி செஸ்டியஸ் கேலஸ் (Cestius Gallus) 30,000 ராணுவ வீரர்களோடு எருசலேம் நகரை சுற்றிவளைத்து விடுகிறார். யூத கலகக்காரர்கள் ஆலயத்துக்குள் போய் ஒளிந்து கொள்கிறார்கள். இப்போது ரோமப் படை, எருசலேம் ஆலயத்தின் வெளிச்சுவருக்குக் கீழ் குழிதோண்டி அதை வலுவிழக்கச் செய்கிறது. நகரத்துக்குள் இருக்கிற எல்லாரும் பயந்து நடுங்குகிறார்கள். ஒரு கிறிஸ்தவராக, நீங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
2. ரோமப் படை எருசலேமை சுற்றிவளைக்கும்போது கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது, அதை அவர்களால் எப்படி செய்ய முடிந்தது?
2 இந்த சம்பவம் நடக்கும் என்று பல வருடங்களுக்கு முன்பே இயேசு தம் சீடர்களை எச்சரித்திருந்தார். “எருசலேம் படைகளால் லூக். 21:20, 21) ரோமப் படை எருசலேமை சூழ்ந்திருக்கும்போது, சீடர்களால் எப்படி இயேசுவுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து எருசலேமைவிட்டு வெளியே போக முடிந்தது? அப்போது ஆச்சரியமான ஒரு விஷயம் நடந்தது. ரோமப் படை திடீரென்று திரும்பிப்போனது! இயேசு சொன்னபடி, ரோமப் படையின் தாக்குதல் ‘குறைக்கப்பட்டது.’ (மத். 24:22) ரோமப் படை திரும்பிப்போனதால் உண்மையுள்ள கிறிஸ்தவர்களால் இயேசுவின் கட்டளைப்படி மலைகளுக்குத் தப்பியோட முடிந்தது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதற்குப் பிறகு கி.பி. 70-ல், ஒரு புதிய ரோமப் படை திரும்பி வந்து எருசலேமை அழித்தது. இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்கள் மட்டும் உயிர் தப்பினார்கள்.
சூழப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கும்போது அதன் அழிவு நெருங்கிவிட்டதென்று அறிந்துகொள்ளுங்கள். அப்போது, யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பியோட வேண்டும். எருசலேமுக்குள் இருக்கிறவர்கள் வெளியேற வேண்டும்; நாட்டுப்புறங்களில் இருக்கிறவர்களோ எருசலேமுக்குள் நுழையாதிருக்க வேண்டும்” என்று இயேசு சொல்லியிருந்தார். (3. சீக்கிரத்தில் நமக்கும் என்ன சூழ்நிலை வரப்போகிறது, இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி படிக்கப் போகிறோம்?
3 இயேசு அன்று கொடுத்த எச்சரிப்பும் ஆலோசனையும் இன்று நமக்கும் பயனுள்ளதாக இருக்கின்றன. ஏனென்றால், நமக்கும் இதே போன்ற ஒரு சூழ்நிலை சீக்கிரத்தில் வரப்போகிறது. “மிகுந்த உபத்திரவம்” திடீரென்று வரும்போது என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொள்வதற்காக முதல் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களைப் பற்றி இயேசு சொன்னார். (மத். 24:3, 21, 29) எருசலேமின் அழிவிலிருந்து அன்று இருந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் உயிர் தப்பினார்கள். அதேபோல், உலகம் முழுவதும் வரப்போகிற ஒரு பெரிய அழிவிலிருந்து “திரள் கூட்டமான மக்கள்” உயிர் தப்புவார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 13, 14-ஐ வாசியுங்கள்.) எதிர்காலத்தில் நடக்கப்போகும் இந்த சம்பவங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது ரொம்பவே முக்கியம். அப்போதுதான், நம்மால் உயிர் தப்ப முடியும். இதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் படிக்கப் போகிறோம்.
மிகுந்த உபத்திரவத்தின் ஆரம்பம்
4. மிகுந்த உபத்திரவம் எப்போது ஆரம்பமாகும்?
4 மிகுந்த உபத்திரவம் எப்போது ஆரம்பமாகும்? எல்லா பொய் மதங்களும் அழிக்கப்படும்போது மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும். இந்தப் பொய் மதத்தை ‘மகா பாபிலோன், விலைமகள்களுக்குத் தாய்’ என்று பைபிள் சொல்கிறது. (வெளி. 17:5-7) பைபிள் ஏன் பொய் மதத்தை விலைமகள் என்று சொல்கிறது? ஏனென்றால், பொய் மதத்தின் குருமார்கள் கடவுளுக்கு உண்மையாக நடப்பது இல்லை. இயேசுவையும் அவருடைய அரசாங்கத்தையும் உண்மையோடு ஆதரிப்பதற்குப் பதிலாக மனித அரசாங்கங்களை ஆதரிக்கிறார்கள். அதோடு, பைபிள் போதனைகளையும் அவர்கள் ஒதுக்கித் தள்ளுகிறார்கள். அரசியலில் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைப் போல “சுத்தமான, மாசில்லாத” வணக்க முறையை அவர்கள் கடைப்பிடிப்பது இல்லை. (2 கொ. 11:2; யாக். 1:27; வெளி. 14:4) யார் இந்த மகா பாபிலோனை அழிப்பார்? யெகோவா “தமது எண்ணத்தை,” ‘கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகத்தின்’ ‘பத்துக் கொம்புகளுக்கு’ தருவார் என்று பைபிள் சொல்கிறது. இந்த “கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகம்,” ஐக்கிய நாட்டுச் சங்கத்தைக் குறிக்கிறது. ‘பத்துக் கொம்புகள்,’ ஐக்கிய நாட்டுச் சங்கத்தை ஆதரிக்கும் எல்லா மனித அரசாங்கங்களையும் குறிக்கிறது.—வெளிப்படுத்துதல் 17:3, 16-18-ஐ வாசியுங்கள்.
5, 6. மகா பாபிலோன் அழிக்கப்படும்போது அதனுடைய எல்லா உறுப்பினர்களும் கொல்லப்பட மாட்டார்கள் என்று ஏன் சொல்லலாம்?
5 மகா பாபிலோன் அழிக்கப்படும்போது, அதாவது பொய் மதம் அழிக்கப்படும்போது, அதனுடைய எல்லா உறுப்பினர்களும் கொல்லப்படுவார்களா? இல்லை. அந்த சமயத்தில் என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள சகரியாவில் சொல்லப்பட்டு இருக்கும் தீர்க்கதரிசனம் நமக்கு உதவும். பொய் மதத்தின் பாகமாக இருந்த ஆட்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றி சகரியா இப்படி சொல்கிறார்: “நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான். அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று சக. 13:4-6) இதிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்கிறோம்? மதத் தலைவர்களும்கூட தங்களுக்குக் கடவுள் பக்தியே இல்லை என்று நடிப்பார்கள். அவர்களுக்கும் பொய் மதத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றும் சொல்வார்கள்.
கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்.” (6 அந்த சமயத்தில், கடவுளின் மக்களுக்கு என்ன ஆகும்? “சொல்லப்போனால், அந்நாட்கள் குறைக்கப்படாவிட்டால் யாருமே தப்பிப்பிழைக்க மாட்டார்கள்; தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை முன்னிட்டோ அந்நாட்கள் குறைக்கப்படும்” என்று இயேசு சொன்னார். (மத். 24:22) கி.பி. 66-ல், எருசலேமுக்கு வந்த உபத்திரவம் ‘குறைக்கப்பட்டது.’ அதனால் ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்,’ அதாவது பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், மலைகளுக்குத் தப்பியோட முடிந்தது. அதேபோல், வரப்போகும் மிகுந்த உபத்திரவத்தின் முதல் கட்டம் ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்காக’ “குறைக்கப்படும்.” கடவுளுடைய மக்களை அழிக்க அந்தப் ‘பத்துக் கொம்புகள்,’ அதாவது மனித அரசாங்கங்கள், அனுமதிக்கப்பட மாட்டார்கள். எல்லா பொய் மதங்களும் அழிக்கப்பட்ட பிறகு, கொஞ்ச காலத்துக்கு அமைதியான சூழ்நிலைமை இருக்கும்.
சோதனைக் காலமும் நியாயத்தீர்ப்பும்
7, 8. பொய் மதம் அழிக்கப்பட்ட பிறகு, நமக்கு என்ன வாய்ப்பு இருக்கும்? அப்போது நாம் எப்படி மற்ற மக்களிடமிருந்து வித்தியாசமாக இருப்போம்?
7 பொய் மதம் அழிக்கப்பட்ட பிறகு என்ன நடக்கும்? அப்போது, ‘மலைகளிலுள்ள கற்பாறைகளாக’ இருக்கும் மனித அமைப்புகள் தங்களுக்கு உதவி செய்வார்கள்... தங்களைக் காப்பாற்றுவார்கள்... என்று நிறைய பேர் நினைப்பார்கள். (வெளி. 6:15-17) ஆனால் யெகோவாவை வணங்கும் மக்கள், யெகோவாதான் தங்களைக் காப்பாற்றுவார் என்று நம்புவார்கள். அதனால், நாம் யார்மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான சமயமாக அது இருக்கும். முதல் நூற்றாண்டில் தாக்குதல் ‘குறைக்கப்பட்டபோது,’ எல்லா யூதர்களும் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கான சமயமாக அது இருக்கவில்லை. ஆனால், ஏற்கெனவே கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து எருசலேமுக்குத் தப்பி ஓடுவதற்கான சமயமாகவே அது இருந்தது. அதே போல, எதிர்காலத்தில் மகா பாபிலோன் மீதான தாக்குதல் ‘குறைக்கப்படும்போது,’ நிறைய பேர் உண்மை கிறிஸ்தவர்களாக மாறுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஏற்கெனவே உண்மை கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் யெகோவாமீது தங்களுக்கு இருக்கும் அன்பை நிரூபித்துக் காட்டும் சமயமாக அது இருக்கும். அதோடு, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு தங்கள் ஆதரவை காட்டும் சமயமாகவும் அது இருக்கும்.—மத். 25:34-40.
8 அந்த சோதனைக் காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பது நமக்கு சரியாகத் தெரியாது. ஆனால், நம் வாழ்க்கை கஷ்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதோடு, நாம் நிறைய தியாகங்களும் செய்ய வேண்டியிருக்கலாம். ஏனென்றால், முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள், உயிர் தப்புவதற்காக அவர்களுடைய வீடுகளை விட்டுவிட்டு ஓட வேண்டியிருந்தது. அதோடு, சில கஷ்டமான சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. (மாற். 13:15-18) அதனால் நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் என்னோட பொருள் வசதிகளை எல்லாம் விட்டுக்கொடுக்க தயாரா இருக்கேனா? யெகோவாவுக்கு உண்மையா இருக்குறதுக்காக நான் எதையும் செய்ய தயாரா இருக்கேனா?’ அந்த சமயத்தில் என்ன நடந்தாலும் சரி, தானியேலைப் போல நாம் மட்டும் நம் கடவுளைத் தொடர்ந்து வணங்குவோம்!—தானி. 6:10, 11.
9, 10. (அ) மிகுந்த உபத்திரவம் சமயத்தில் கடவுளுடைய மக்கள் என்ன செய்தியை சொல்வார்கள்? (ஆ) கடவுளுடைய எதிரிகள் என்ன செய்வார்கள்?
9 மிகுந்த உபத்திரவத்தின்போது, நாம் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை’ சொல்ல மாட்டோம். ஏனென்றால், நற்செய்தியை சொல்வதற்கான சமயம் அப்போது முடிந்திருக்கும்; உலக ‘முடிவுக்கான’ சமயம் வந்திருக்கும்! (மத். 24:14) அப்போது, கடவுளுடைய மக்கள் நியாயத்தீர்ப்பு பற்றிய கடுமையான செய்தியை தைரியமாக சொல்வார்கள். அது, சீக்கிரத்தில் சாத்தானுடைய உலகம் அடியோடு அழிக்கப்படும் என்ற செய்தியாக இருக்கலாம். அந்த செய்தியை, வானத்திலிருந்து வரும் ஆலங்கட்டிகளுக்கு ஒப்பிட்டு பைபிள் இப்படி சொல்கிறது: “வானத்திலிருந்து மாபெரும் ஆலங்கட்டிகள் மனிதர்கள்மீது விழுந்தன; ஒவ்வொரு ஆலங்கட்டியும் சுமார் ஒரு தாலந்து எடையுள்ளதாக இருந்தது. ஆலங்கட்டியினால் உண்டான இந்த வாதை மிகக் கொடியதாக இருந்ததால், மனிதர்கள் கடவுளை நிந்தித்தார்கள்.”—வெளி. 16:21.
10 இந்தக் கடுமையான செய்தி நம் எதிரிகளின் காதுகளில் விழும். அதற்குப் பிறகு, மாகோகு தேசத்தானான கோகு, அதாவது கடவுளுடைய மக்களைத் தாக்க ஒன்றுகூடும் தேசங்கள், என்ன செய்யும் என்பதைப் பற்றி எசேக்கியேல் தீர்க்கதரிசி இப்படி சொல்கிறார்: “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு, உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து, நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப்போவேன்; நிர்விசாரமாய்ச் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.” (எசே. 38:10-12) அந்த சமயத்தில், கடவுளுடைய மக்கள் ‘தேசத்தின் நடுவில் குடியிருக்கிறவர்களாக’ இருப்பார்கள். அதாவது, மற்ற மக்களிலிருந்து வித்தியாசமானவர்களாகத் தெரிவார்கள். அதனால், கடவுளுடைய மக்களைத் தாக்குவது தேசங்களுக்கு சுலபமாக இருக்கும். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களையும் அவர்களுக்கு ஆதரவு தருபவர்களையும் தாக்குவதற்காகத் தேசங்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
11. (அ) மிகுந்த உபத்திரவத்தின்போது நடக்கும் சம்பவங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? (ஆ) அடையாளங்களைப் பார்க்கும்போது மக்களுக்கு எப்படி இருக்கும்?
11 அடுத்து என்ன நடக்கும்? மிகுந்த உபத்திரவத்தின் சமயத்தில் வரிசையாக என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்று பைபிள் நமக்கு சொல்வது இல்லை. ஆனால், சில சம்பவங்கள் ஒரே சமயத்தில் நடக்கலாம். உலக முடிவைப் பற்றிய தீர்க்கதரிசனத்தில் இயேசு இப்படி சொன்னார்: “அந்நாட்களில், அந்த உபத்திரவத்திற்குப் பின்பு சூரியன் இருண்டுவிடும், சந்திரன் ஒளி கொடுக்காது, வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழும், வான மண்டலங்கள் அசைக்கப்படும். அதன்பின், மனிதகுமாரன் மிகுந்த வல்லமையுடனும் மகிமையுடனும் மேகங்களில் வருவதை அவர்கள் பார்ப்பார்கள்.” (லூக். 21:25-27; மாற்கு 13:24-26-ஐ வாசியுங்கள்.) இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறும்போது, மனிதர்களுக்குப் பயம் உண்டாகும் விதத்தில் வானத்தில் சில அடையாளங்களும் சம்பவங்களும் நடக்குமா? அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் சரி, அந்த அடையாளங்களை எல்லாம் பார்க்கும்போது கடவுளுடைய எதிரிகள் திகிலடைவார்கள், பயத்தில் நடுநடுங்கிப் போவார்கள்.
12, 13. (அ) இயேசு “மிகுந்த வல்லமையுடனும் மகிமையுடனும்” வரும்போது என்ன நடக்கும்? (ஆ) கடவுளுடைய ஊழியர்கள் அப்போது என்ன செய்வார்கள்?
12 இயேசு “மிகுந்த வல்லமையுடனும் மகிமையுடனும்” வரும்போது என்ன நடக்கும்? உண்மையோடு இருந்தவர்களுக்கு இயேசு பலன் அளிப்பார். உண்மையோடு இல்லாதவர்களை அவர் தண்டிப்பார். (மத். 24:46, 47, 50, 51; 25:19, 28-30) இதைப் பற்றி விளக்குவதற்காக இயேசு ஒரு உதாரணத்தை சொன்னார்: “மனிதகுமாரன் தம்முடைய மகிமையில் எல்லாத் தேவதூதர்களோடும் வரும்போது, தம் மகிமையுள்ள சிம்மாசனத்தில் அமருவார். எல்லாத் தேசத்தாரும் அவர்முன் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்; ஒரு மேய்ப்பன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிப்பதுபோல், அவர் அவர்களைப் பிரிப்பார். செம்மறியாடுகளைத் தம் வலது பக்கத்தில் நிறுத்துவார், வெள்ளாடுகளையோ தம் இடது பக்கத்தில் நிறுத்துவார்.” (மத். 25:31-33) அப்போது செம்மறியாடுகளுக்கும் வெள்ளாடுகளுக்கும் என்ன நடக்கும்? இயேசு அவர்களை நியாயந்தீர்ப்பார். வெள்ளாடு போன்ற மக்கள், அதாவது உண்மையில்லாதவர்கள் “நிரந்தர அழிவைப் பெறுவார்கள்.” ஆனால், செம்மறியாடு போன்ற மக்கள், அதாவது உண்மையுள்ளவர்கள் “நிரந்தர வாழ்வைப் பெறுவார்கள்.”—மத். 25:46.
13 வெள்ளாடு போன்ற மக்கள் தாங்கள் அழியப்போவதைத் தெரிந்துகொள்ளும்போது என்ன செய்வார்கள்? அவர்கள் “மாரடித்துப் புலம்புவார்கள்.” (மத். 24:30) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் அவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் என்ன செய்வார்கள்? “இவையெல்லாம் நடக்க ஆரம்பிக்கும்போது நீங்கள் நேராக நிமிர்ந்து நின்று, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; ஏனென்றால், உங்கள் விடுதலை நெருங்கிவருகிறது” என்று இயேசு சொன்னது போல் செய்வார்கள்.—லூக். 21:28.
சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்
14, 15. மாகோகு தேசத்தானான கோகுவின் தாக்குதல் ஆரம்பித்த பிறகு என்ன கூட்டிச்சேர்க்கும் வேலை நடக்கும், இது எப்படி நடக்கும்?
14 மாகோகு தேசத்தானான கோகு கடவுளுடைய மக்களைத் தாக்க ஆரம்பித்த பிறகு என்ன நடக்கும்? அப்போது மனிதகுமாரன், “தேவதூதர்களை அனுப்பி, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பூமியின் ஒரு கோடியிலிருந்து வானத்தின் மறுகோடிவரை நாலாபக்கத்திலிருந்தும் கூட்டிச்சேர்ப்பார்” என்று பைபிள் சொல்கிறது. (மாற். 13:27; மத். 24:31) இந்தக் கூட்டிச்சேர்க்கும் வேலை, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தைக் குறிப்பதில்லை. அதே சமயத்தில், பூமியில் இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் கடைசி முத்திரையைப் பெறுவதையும் இது குறிப்பதில்லை. (மத். 13:37, 38) ஏனென்றால், மிகுந்த உபத்திரவம் தொடங்குவதற்கு கொஞ்சம் முன்பு அவர்கள் கடைசி முத்திரையைப் பெற்றிருப்பார்கள். (வெளி. 7:1-4) அப்படியென்றால், இந்தக் கூட்டிச்சேர்க்கும் வேலை எதைக் குறிக்கிறது? பூமியில் மீந்திருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அவர்களுடைய பலனைப் பெற்று பரலோகத்துக்குப் போகும் சமயத்தை அது குறிக்கிறது. (1 தெ. 4:15-17; வெளி. 14:1) இந்த சம்பவம், மாகோகு தேசத்தானான கோகுவின் தாக்குதல் ஆரம்பித்த பிறகு ஒரு சமயத்தில் நடக்கும். (எசே. 38:11) அதற்குப் பிறகு இயேசு சொன்னது போல், “நீதிமான்கள் தங்களுடைய தகப்பனின் அரசாங்கத்தில் சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்.”—மத். 13:43. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
15 மனித உடலில் தாங்கள் பூமியிலிருந்து பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று சர்ச் அமைப்புகளைச் சேர்ந்த நிறைய கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அதோடு, பூமியை ஆட்சி செய்ய இயேசு திரும்பி வருவதை ‘எங்கள் கண்களால் பார்ப்போம்’ என்றும் சொல்கிறார்கள். ஆனால், பைபிள் இதைப் பற்றி என்ன சொல்கிறது? இயேசுவின் வருகையை மக்கள் தங்கள் கண்களால் பார்க்க முடியாது. அதனால்தான், “மனிதகுமாரனின் அடையாளம் வானத்தில் தோன்றும்” என்றும் அவர் “வானத்து மேகங்கள்மீது” வருவார் என்றும் பைபிள் சொல்கிறது. (மத். 24:30) அதோடு, “மனித உடலுடன் பரலோக அரசாங்கத்திற்குள் போக முடியாது” என்றும் சொல்கிறது. அதனால் பரலோகத்துக்குப் போகிறவர்கள், ‘கடைசி எக்காளம் முழங்கும்போது, ஒரே கணத்தில், கண்ணிமைக்கும் நேரத்தில், மாற்றம் அடைய வேண்டும்.’ * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (1 கொரிந்தியர் 15:50-53-ஐ வாசியுங்கள்.) இப்படி, பூமியில் இருக்கும் பரலோக நம்பிக்கையுடைய உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பரலோகத்துக்குக் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள்.
16, 17. ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்துக்கு முன்பு என்ன சம்பவம் நடக்க வேண்டும்?
16 பரலோக நம்பிக்கையுள்ள 1,44,000 பேரும் பரலோகத்துக்குப் போன பிறகுதான் ஆட்டுக்குட்டியானவருடைய திருமணத்துக்கான கடைசி ஏற்பாடுகள் நடக்கும். (வெளி. 19:9) ஆனால், அதற்கு முன்பு இன்னொரு சம்பவம் நடக்கும். அது என்னவென்று இப்போது பார்க்கலாம். மீந்திருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் பூமியில் இருக்கும்போதே, கோகு கடவுளுடைய மக்களை தாக்குவான் என்பது நமக்குத் தெரியும். (எசே. 38:16) அப்போது கடவுளுடைய மக்கள் என்ன செய்வார்கள்? “யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல . . . நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்” என்ற கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிவார்கள். (2 நா. 20:17) கோகுவின் தாக்குதல் ஆரம்பித்த பிறகு, பூமியில் இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் ஏதோ ஒரு சமயத்தில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். கடவுளுடைய மக்களைக் கோகு தாக்கும்போது பரலோகத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி வெளிப்படுத்துதல் 17:14 சொல்கிறது. கடவுளுடைய மக்களின் எதிரிகள், “ஆட்டுக்குட்டியானவரோடு போர் செய்வார்கள்; ஆனால், அவர் எஜமான்களுக்கெல்லாம் எஜமானாகவும் ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகவும் இருப்பதால் அவர்களை ஜெயித்துவிடுவார். அவரோடு இருக்கிறவர்களும் ஜெயிப்பார்கள்; அவர்கள் அழைக்கப்பட்டவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், உண்மையுள்ளவர்கள்.” பரலோகத்தில் தம்மோடு ராஜாக்களாக இருக்கும் 1,44,000 பேரோடு சேர்ந்து, இயேசு பூமியில் இருக்கும் கடவுளுடைய மக்களைக் காப்பாற்றுவார்.
17 அவர்களைக் காப்பாற்றும் அந்த சம்பவம் அர்மகெதோன் போரில் முடிவடையும். இந்தப் போர் யெகோவாவுடைய பெயருக்குப் புகழ் சேர்க்கும். (வெளி. 16:16) வெள்ளாடுகளாக, அதாவது உண்மை இல்லாதவர்களாக, நியாயந்தீர்க்கப்பட்ட எல்லாரும் அழிக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு, பூமியில் எந்தக் கெட்ட விஷயங்களும் நடக்காது. “திரள் கூட்டமான மக்கள்” அர்மகெதோன் போரிலிருந்து உயிர் தப்புவார்கள். கடைசியாக, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டு இருப்பதுபோல் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் நடக்கும்! (வெளி. 21:1-4) * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) உயிர் தப்புகிறவர்கள் எல்லாரும் யெகோவாவுடைய அன்பையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிப்பார்கள். அந்தத் திருமண விருந்து எவ்வளவு அருமையாக இருக்கும்! அந்த நாளுக்காக நாம் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறோம் இல்லையா?—2 பேதுரு 3:13-ஐ வாசியுங்கள்.
18. விறுவிறுப்பான சம்பவங்கள் சீக்கிரத்தில் நடக்கப்போவதால் நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?
18 இந்த விறுவிறுப்பான சம்பவங்கள் ரொம்ப சீக்கிரத்தில் நடக்கப்போகின்றன. அப்படியென்றால், நாம் ஒவ்வொருவரும் இப்போது என்ன செய்துகொண்டிருக்க வேண்டும்? “இவையெல்லாம் அழியப்போவதால், நீங்கள் எந்தளவுக்குப் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் தேவபக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்! அதேசமயத்தில், யெகோவாவின் நாளை நாம் எப்போதும் மனதில் வைத்து அதற்காக ஆவலோடு காத்திருக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும் . . . இவையெல்லாம் வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிற நீங்கள், அவர் முன்னிலையில் கறையற்றவர்களாகவும் மாசற்றவர்களாகவும் சமாதானமுள்ளவர்களாகவும் காணப்படுவதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு மூலம் யெகோவா சொல்கிறார். (2 பே. 3:11, 12, 14) அதனால், நம் வணக்கம் சுத்தமானதாக இருக்க வேண்டும். நாம் பொய் மதத்தோடு எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது. சமாதானத்தின் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவை ஆதரிக்க வேண்டும்!
^ பாரா. 2 ஏப்ரல் 15, 2012 காவற்கோபுரம் பக்கங்கள் 25-26-ஐ பாருங்கள்.
^ பாரா. 14 ஜூலை 15, 2013 காவற்கோபுரம் பக்கங்கள் 13-14-ஐ பாருங்கள்.
^ பாரா. 15 உயிரோடு இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் உடல்கள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது. (1 கொ. 15:48, 49) இயேசுவின் உடல் எப்படி அப்புறப்படுத்தப்பட்டதோ அப்படியே இவர்களுடைய உடல்களும் அப்புறப்படுத்தப்படும்.
^ பாரா. 17 அடுத்தடுத்து நடக்க இருக்கும் சம்பவங்களைப் பற்றிய சில விஷயங்களை சங்கீதம் 45 சொல்கிறது. முதலில் ராஜா போர் செய்வார், பிறகு திருமணம் நடக்கும்.