Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பிதழ் இதோ, புதிய வடிவில்!

படிப்பிதழ் இதோ, புதிய வடிவில்!

படிப்பிதழ் இதோ, புதிய வடிவில்!

கண்ணையும் கருத்தையும் கவரும் விதத்தில் படிப்பு இதழுக்கு நாங்கள் புதிய வடிவம் கொடுத்திருக்கிறோம்; இது யெகோவாவின் சத்திய வார்த்தையைக் கருத்தூன்றிப் படிக்க உங்களுக்கு உதவுமென்று நம்புகிறோம்.—சங். 1:2; 119:97.

நான்கு வருடங்களுக்கு முன்பிருந்து காவற்கோபுரம் இரண்டு இதழ்களாக வரத் தொடங்கியது; ஒன்று பொதுமக்களுக்கு, மற்றொன்று யெகோவாவின் சாட்சிகளுக்கும் முன்னேறுகிற பைபிள் மாணாக்கர்களுக்கும்.

யெகோவாவை நீண்ட காலமாகச் சேவித்து வரும் ஒருவர் படிப்பு இதழைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “காவற்கோபுர பத்திரிகையின் முதல் படிப்பு இதழ், அருமையிலும் அருமை, என் மனதைக் கொள்ளைகொண்டது. பைபிளிலுள்ள முக்கியச் சத்தியங்களை ஆழமாய் அலசி ஆராய்ந்த விதம் என் நெஞ்சைத் தொட்டது. அருமையான இந்தப் புதிய இதழுக்கு மிக்க நன்றி.” இன்னொரு சகோதரர் எழுதினார்: “என்னுடைய பைபிளுடன் இந்தப் படிப்பு இதழை மணிக்கணக்காகப் படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.” நீங்களும் அப்படித்தானே?

காவற்கோபுர பத்திரிகை 1879 முதல் பிரசுரிக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்; ஒரு இதழ்கூட விட்டுப்போகாமல் தவறாமல் வெளிவந்திருப்பது இமாலய சாதனை; இதற்கு யெகோவாவின் சக்தியும் அவருடைய ஆசீர்வாதமும்தான் காரணம். (சக. 4:6, NW ) கடந்த 133 வருடங்களாக இந்தப் பத்திரிகையின் அட்டைப் படத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. 2012 முதல், சாட்சி கொடுப்பதைப் போன்ற வண்ண வரைபடம் ஒவ்வொரு படிப்பு இதழின் அட்டைப் படத்தையும் அலங்கரிக்கும்; இது, யெகோவாவின் அரசாங்கத்தைப் பற்றி முழுமையாய்ச் சாட்சி கொடுக்க வேண்டிய பொறுப்பை நமக்கு நினைப்பூட்டும். (அப். 28:23) பத்திரிகையின் 2-ஆம் பக்கத்தில், அந்த வரைபடத்திற்கு அடிப்படையாய் அமைந்துள்ள புகைப்படம் காணப்படும்; அதற்குக் கீழே, எத்தகைய ஊழியம் செய்யப்படுகிறது... எங்கு செய்யப்படுகிறது... என்பதைப் பற்றிச் சுருக்கமான குறிப்பு காணப்படும். இது, யெகோவாவின் மக்கள் “உலகமெங்கும்” நற்செய்தியை அறிவித்து வருவதை வருடம் முழுவதும் நம் அனைவருக்கும் நினைப்பூட்டும்.—மத். 24:14.

இந்தப் பத்திரிகையில் வேறு என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? மறுபார்வைக் கேள்விகள் இப்போது படிப்புக் கட்டுரைகளின் ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டுரைகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கியக் குறிப்புகளை அவை சுட்டிக்காட்டும். காவற்கோபுர படிப்பை நடத்துபவர்கள் எப்போதும்போல் இந்தக் கேள்விகளைப் படிப்பின் முடிவில் கேட்பார்கள். பக்க ஓரங்களில் சற்றுக் கூடுதலான இடம் விடப்பட்டிருப்பதையும், பக்கங்கள் மற்றும் பாராக்களின் எண்கள் பளிச்செனக் காட்டப்பட்டிருப்பதையும் நீங்கள் பார்ப்பீர்கள்.

“வரலாற்றுச் சுவடுகள்” என்ற புதிய கட்டுரை இனி வெளிவரும்; இந்த இதழின் கடைசி இரண்டு பக்கங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, யெகோவாவின் சாட்சிகளுடைய நவீன கால சரித்திரத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க சம்பவங்களை அந்தப் புதிய கட்டுரை விளக்கும். மேலும், “தங்களையே அர்ப்பணித்தவர்கள்” என்ற தலைப்பில் அவ்வப்போது வாழ்க்கை சரிதைகள் வெளிவரும். இது, தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்கிற சகோதர சகோதரிகள் பெற்றிருக்கிற சந்தோஷத்தையும் திருப்தியையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும்.

இந்தப் பத்திரிகையின் உதவியோடு கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதை நீங்கள் முழுமையாய் அனுபவித்து மகிழ்வீர்களாக!

பிரசுரிப்போர்

[பக்கம் 3-ன் படம்]

1879

[பக்கம் 3-ன் படம்]

1895

[பக்கம் 3-ன் படம்]

1931

[பக்கம் 3-ன் படம்]

1950

[பக்கம் 3-ன் படம்]

1974

[பக்கம் 3-ன் படம்]

2008