பைபிளைப் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
பைபிளைப் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
● உலகிலேயே அதிக பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ள புத்தகம் பைபிள்; அதை அநேகர் விரும்பி படிக்கிறார்கள். பைபிள்மீது கை வைத்துதான் நீதிமன்றங்களில் சாட்சி சொல்கிறார்கள், அதிகாரிகள் பதவி ஏற்குமுன் உறுதிமொழி எடுக்கிறார்கள். இந்த உலகிலேயே அதிஉன்னத கல்வி என்றால் அது பைபிள் கல்விதான்.
மக்கள் எல்லாரும் பைபிளைப் படித்து அதன்படி வாழ்ந்தால் பூமியில் நிலைமை எவ்வளவோ நன்றாக இருக்கும் என்பதை அநேகர் ஒத்துக்கொள்கிறார்கள். பைபிள்—ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பிலுள்ள, வண்ணப் படங்கள் நிறைந்த 32 பக்க சிற்றேடு, பைபிள் விஷயங்களைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். அதன் முதல் இரண்டு பகுதிகள், படைப்பாளர் மனிதனுக்குக் கொடுத்த பசுஞ்சோலையையும், அதை அவன் இழந்த விதத்தையும் பற்றி விளக்குகின்றன. அடுத்த பகுதிகளில், கடவுள் தம்முடைய அரசாங்கத்திற்காக தேர்ந்தெடுத்த ராஜா பிறக்கவிருந்த தேசத்தைப் பற்றிய சரித்திரம் இடம்பெறுகிறது. இந்த அரசாங்கம்தான் மனிதன் இழந்த பசுஞ்சோலையை மீட்டுத் தரும்.
அதைத் தொடர்ந்து வரும் பகுதிகளில், கடவுள் நியமித்த அரசரான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, ஊழியம், அற்புதங்கள், மரணம், அதோடு, அவர் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுதல் ஆகியவை இடம் பெறுகின்றன. அடுத்த நான்கு பகுதிகளில், முதல் நூற்றாண்டிலிருந்த இயேசுவின் சீடர்களுடைய ஊழியம், விசுவாசத்திற்கு வந்த சோதனை, கடவுளுடைய உதவியோடு அவர்கள் எழுதிய கடிதங்கள் ஆகியவற்றைப் பற்றிய சுருக்கமான, விறுவிறுப்பான பதிவுகள் இடம் பெறுகின்றன. “மீண்டும் பசுஞ்சோலை!” என்ற பகுதியையும், “பைபிளின் செய்தி—ரத்தினச்சுருக்கமாக” என்ற தலைப்பில் வண்ணப் படங்கள் நிறைந்த கடைசி பக்கத்தையும் படித்து பரவசமடைவீர்கள்.
இந்தச் சிற்றேட்டைப் பெற இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்திசெய்து 5-ஆம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும். (g10-E 04)
❑ எந்த நிபந்தனையுமின்றி இந்தச் சிற்றேட்டைப் பெற விரும்புகிறேன்.
❑ இலவசமாக பைபிளைக் கற்றுக்கொள்ள ஆசை. தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.