“கற்பிப்பதற்குக் கச்சிதமான கருவி!”
“கற்பிப்பதற்குக் கச்சிதமான கருவி!”
பனாமாவில் முழுநேர ஊழியம் செய்து வரும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தை இப்படித்தான் பாராட்டி எழுதினார். “அது ரத்தினச்சுருக்கமாகவும் கோர்வையாகவும் நம்பத்தக்கதாகவும் இருக்கிறது. புதிய முறையில் ரெஃபரென்ஸ்களும் பிற்சேர்க்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் ஆராய்ச்சி செய்யும்படி வாசகரைத் தூண்டுகிறது” என்று அவர் எழுதினார். வண்ணப் படங்களோடு, 224 பக்கங்களை உடைய இப்புத்தகத்தையே தற்போது பைபிள் படிப்பு நடத்துவதில் யெகோவாவின் சாட்சிகள் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.
அமெரிக்காவில் மிஸ்செளரியிலுள்ள பைபிள் ஆசிரியை ஒருவர் இவ்வாறு எழுதினார்: “அந்தப் புத்தகத்தின் எளிய நடை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இதுவரை நான் பார்த்திராத விதத்தில் பாடங்கள் சிந்திக்கப்பட்டிருக்கிற வரிசை மிகவும் பொருத்தமாக இருக்கிறது.” முன்பு இவர் பைபிள் படிப்பு நடத்தி வந்த ஒரு பெண் மனச்சோர்வு காரணமாக இடையில் படிப்பை நிறுத்தியிருந்தாள்; பைபிள் கற்பிக்கிறது புத்தகம் கையில் கிடைத்தவுடனேயே அந்த ஆசிரியை அதனை அவளுக்கு எடுத்துச் சென்றார்.
“முதல் அதிகாரத்தைப் படித்து முடிப்பதற்கு முன்பே அவள் எனக்கு ஃபோன் செய்து தனக்கு அது பிடித்திருப்பதாகச் சொன்னாள்” என்று அந்த ஆசிரியை எழுதினார். அந்தப் புத்தகம் தனக்காகவே எழுதப்பட்டிருப்பது போல் உணர்ந்ததாக அந்தப் பெண் கூறினாள். அவள் மீண்டும் பைபிள் படிப்பைத் தொடர விரும்பினாள். 10 அதிகாரங்களைப் படித்து முடித்த பிறகு, தான் கற்ற விஷயங்களைக் குறித்து அந்தப் பெண் மகிழ்ந்ததைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டதாக அந்த ஆசிரியை கூறினார்.
பைபிள் கற்பிக்கிறது புத்தகம் வெளியிடப்பட்டு இன்னும் இரண்டு வருடங்கள்கூட ஆகவில்லை. என்றாலும், ஏற்கெனவே 5 கோடி பிரதிகளுக்கும் அதிகமாக 150-க்கும் அதிக மொழிகளில் இது அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தைப்பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-ஆம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.
□ பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தைப்பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.
□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.